#100நாள்100பதிவு#JobsFromRavi
கல்வி சம்பந்தமான 100 பதிவுகள் இடலாம் என நினைக்கிறேன். அனைத்தும் ஒரே இழையின் கீழ் தொகுக்க திட்டம். முதல் பதிவு. அறிமுகம் ஒடின் ப்ராஜக்ட். இது ஒரு திறந்த மூல கல்வி திட்டம்.
ரூபி அல்லது ஜாவா ஸ்கிரிப்ட் பழகலாம். அனைத்து பாடங்களும் கல்வியும் இலவசம். Full Stack JavaScript தேர்ந்து படிக்கலாம்.
இதில்
INTERMEDIATE HTML AND CSS (23 பாடங்கள்)
JAVASCRIPT (44 பாடங்கள்)
ADVANCED HTML AND CSS (16 பாடங்கள்)
NODEJS (24 பாடங்கள்)
GETTING HIRED (13 பாடங்கள்)
ஒரு இறுதி புராஜக்ட் மற்றும் உங்கள் சுய விவர குறிப்பை எப்படி தயார் செய்வது என்பது வரை உள்ளது. அய்யா இதை விட தேனையும் தினை மாவையும் குழைத்து உங்கள் வாயில் ஊட்டும் ஒரு கல்வி பாடத்திட்டம் இது வரை நான் கண்டது இல்லை.
இதில் பியூட்டியே, நீங்கள் என்ன படிப்பது என்று மட்டும் இல்லாமல், எப்படி வேலை தேடுவது, எப்படி நேர்முக தேர்வை சந்திப்பது என ஆதியோடு அந்தமாக கொடுத்து இருக்கிறார்கள்.
அதைவிட ஜாப் ஆபர் லெட்டர் வந்த பிறகு அதை எப்படி கையாள்வது என்று ஒரு பாடம் அய்யா. உள்ளபடியே அருமை. இது முற்றிலும் இலவச கல்வி. நீங்கள் கொடுக்க வேண்டியது எல்லாம் உழைப்பை மட்டும் தான்.
100 நாள் நீங்கள் இதை படித்தால் கண்டிப்பாக ஒரு தகவல் தொழில் நுட்ப பணியை பெற்று விடலாம். எந்த வயது வரம்பும் இல்லை. எந்த கல்வி தகுதியும் தேவை இல்லை. என்ன ரெடியா ?
ஒடின் ப்ராஜக்ட் பற்றி தமிழில் எழுதப்படும் முதல் கட்டுரை இது தான். இந்த கட்டுரை, டைடல் பார்க் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த முரசொலி மாறன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை ஏழ்மை நிலையில் இருந்து நடுத்தர குடும்பங்களாகவும், உயர் நடுத்தர குடும்பங்களாகவும் வெர்ஷன் அப்கிரேடு செய்த திட்டம் இந்த டைடல் பார்க். ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது என்பது ஆச்சர்யம்.
வாங்க தகவல் தொழில் நுட்ப துறைக்கு. வருக வருக என வரவேற்கிறேன். பிரபல நார்டிக் கடவுளான ஒடின் உங்களை ஆசிர்வதிக்கட்டும் (இவர் யாரும் இல்ல, நம்ம தோர் உடைய டாடி. தோர் யாருன்னு கேட்டு தொலையாதீங்க அவர் ஒரு அவெஞ்சர், நம்ம அயர்ன் மேன் டிகிரி தோஸ்து).
கொரோனா உச்ச கட்டத்தில் இருந்த நேரம். முன்பெல்லாம் உயர் நடுத்தர வர்க்கமும், பெரும் தனக்காரர்களும் மட்டும் சிகிச்சை பெற்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமவனைகள் கூட பயம் காரணமாக யாரையும் அனுமதிக்காத நிலை.
பணக்காரர், பெரும் அரசியல் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனையில் ஒரு ஓரத்தில் இடம் கிடைத்த நிலை இருந்தது. எங்கே பார்த்தாலும் மரண ஓலம்.
உடன் பிறந்தவர் மட்டுமல்ல டிகிரி தோஸ்துகள் கூட ஒரு உதவி கேட்டால் போனை அணைத்து வைக்கும் நிலை இருந்தது. மனைவியின் தம்பிக்கு திடீர் என உடல் நிலை மோசமாகி, சேலத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அங்கே லைட்டா பீவர் இருக்கு நாங்க எடுக்க மாட்டோம் என்கிறார்கள்..
In October 2020, the first diagonal crossing in Stockholm was opened at the intersection of Mäster Samuelsgatan and Regeringsgatan
A pedestrian scramble, also known as scramble intersection and scramble corner (Canada), 'X' Crossing (UK), diagonal crossing (US), scramble crossing (スクランブル交差点, sukuranburu-kōsaten) (Japan), exclusive pedestrian interval, or Barnes Dance
Is a type of traffic signal movement that temporarily stops all vehicular traffic, thereby allowing pedestrians to cross an intersection in every direction, including diagonally, at the same time.
சைபர் கிரைம் போலீஸ் ஒருவரை எப்படி கைது செய்கிறார்கள்...
இழை.
இணையம் தரும் முகமிலி தகுதியில் (Anonymous Status) கருத்து சுகந்திரம் என்ற எல்லையை தாண்டி தனிமனித வசை, வன்மம் என்ற வகையில் இறங்கி, அதனால் கைது செய்யப்பட்ட சிலரை நேற்று கண்டீர்கள். ஆனால் எப்படி ?
எப்படி எங்கோ ஒரு முலையில் டிவிட்டர் செயலியில் எழுதிய கீச்சு நறுக்கை வைத்து ஆளை பிடித்தார்கள் காவல் துறையினர் ? அறிந்துகொள்ள இந்த இழை. இணையத்தில் உங்கள் லட்சுமண ரேகை எது என்று அறிந்து அதை தாண்டாமல் இருக்க ஒரு வாய்ப்பு..
டிவிட்டர் இணையும்போது மின்னஞ்சல் அல்லது அலை பேசி எண் கொடுத்து இருப்பார்கள்.
உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருக்கும். அதில் கூட சில சமயம் அலை பேசி எண் இணைத்து இருப்பார்கள் பலர்.
அலைபேசி என்பது இன்று எல்லாரிடமும் இருக்கு, அதுக்கு ஒரு IMEI எண் இருக்கு, IP முகவரியும் இருக்கு.
ஐரோப்பா / ஸ்காண்டிநேவியாவில் தொழில் வாய்ப்புகள் என்ன (B2B / B2C) ? ஒரு தொழில் முனைவோராக இந்த நாடுகளுக்கு சென்று செட்டில் ஆவது எப்படி ? என்ன வகையான விசா வகைகள் இருக்கிறது ? எவ்வளவு செலவு ஆகும் ? விரிவாக இந்த இழையில் பார்க்கலாம்...
70' களில் 80' களில் ஐரோப்பா - நார்டிக் நாடுகளில் குடியேறிவர்கள் இப்ப எல்லாம் அல்டரா ரிச். குழந்தைகள் எல்லாம் நல்ல படிப்பு, நல்ல நிலையில் இருக்காங்க. இன்னும் பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கு, அதை சொல்ல தான் இந்த பதிவு.
பி2பி எனப்படும் பிசினஸ் 2 பிசினஸ், அல்லது பி2சி எனப்படும் பிசினஸ் 2 கன்சுயூமர்ஸ் இரண்டு வகையான தொழில் வாய்ப்புகளும் ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்கெண்டிநேவியா எனப்படும் நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து உட்பட நாடுகளில் - கொட்டி கிடைக்கு.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
மெக்கானிக்கல் - சிவில் - படித்து முடித்து 10 ஆண்டு ஆனவர்கள் எல்லாம் தோபுக்கடீர் என Web Development Engineer ஆவது எப்படி ? 100 நாளில் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு Up Skill செய்துகொள்வது எப்படி ? இழை குறும் பதிவுகள்.
ஆங். வெப் டெவலப்பர் என்றா சொன்னேன்.. உங்களுக்கு ஏதாவது மனிதவள துறை தோழர் இருந்தால் ஒரு வெப் டெவலப்பர் பிடித்து வேலையில் சேர வைப்பதற்கு என்ன வகையான கதகளி ஆடவேண்டி இருக்கிறது என கேட்டு பாருங்கள்.
வெப் டெவலப்பர் Front End / Back End என்று இரண்டு வகை. இந்த பதிவில் பேச இருப்பது Front End, அப்புறம் கொஞ்சம் Frameworks. 2 ஆண்டுகள் அனுபவம் 6 - 10 LPA கொடு இல்லைன்னா வேற ஆள பாரு என்னும் இந்த துறையில் 2019, 2020, 2021, 2022 சிவில் மெக் முடித்தவர்கள் கூட மிக எளிதாக நுழையலாம்.
Online Jobs Series #1 - மென்பொருள் வரைகலை வகுப்பு. (Digital Design).
Banner Design, Logo Design, Pamplet Design, Brochure design போன்ற பணிகளை இணையம் மூலம் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி ? என்பதை ஒரு இலவச வகுப்பு எடுக்க போறேன்.
பல காரணங்களுக்காக வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய தேவை இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். இது முற்றிலும் விலையில்லா வகுப்பு. அட Free ப்பா.
என்ன சொல்லி தர போகிறேன்:
Adobe வழங்கும் சில டூல்ஸ். இது தான் முக்கிய வகுப்பு.
பிராஜக்ட் எங்க எடுக்கலாம் என சில வழிகள். (இந்தியா + வெளிநாடு)
வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி எப்படி பணம் பெறுவது (Paypal).