Senthazal Ravi 🇸🇪 Profile picture
Stockholmer. My Books: https://t.co/aDnXjldxYr Follow to Get Follow Back ! Good Posts https://t.co/r5BeSgVOgy
Apr 3, 2024 15 tweets 6 min read
இயந்திரவியல் துறையில் - ரோபோட்டிக்ஸ் - விருப்பம் இருப்பவர்கள் பயன்படுத்த புரோகிராமிங், சிமுலேஷன் பற்றிய பதிவு. (செயற்கை நுண்ணறிவு நுட்பம் அடுத்து அங்கே தான் போகும் - ஐ படத்தில் பார்க்கும் சிட்டி ரோபோ செய்ய, அதை சிந்திக்க வைக்க).

இந்த இணைய தளத்தில் திறந்தமூல மென்பொருட்கள் பற்றிய தகவல் - உதாரணமாக நிரல் எழுத, மென்வடிவாக்க (சிமுலேஷன்), உள் வெளி இணைப்புகள் செய்ய (interoperate) நேரடியாக ஆங்கிலத்தில் சொன்னால்

Program your robots with ROS simulate them with Gazebo, interoperate your systems using Open-RMF.

இதில் ROS இலோ அல்லது Gazebo சிமுலேஷன் மென்பொருளிலோ அல்லது Open Robotics Middleware Framework (Open-RMF) நல்ல பயிற்சி, இருந்தால் உலகம் எங்கும் போக இலவச விசா டிக்கெட் கிடைத்தது போல.

வெறுமனே இந்த மென்பொருட்கள் மட்டும் பழகாமல் அதில் இருக்கும் குழுவில் (community) உங்கள் பங்களிப்பு மிக அதிகமாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு லட்சங்களில் ஆகும் ரோபோட் கை போன்ற வன் பொருட்கள் (hardware) வரும் காலத்தில் 20 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும். அப்போது அந்த கையை பயிற்சி கொடுத்து தொழில் சாலைகளில் என்ன என்ன கடுமையான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய முடியும். அப்படி செய்ய வேண்டும் என்றால் காஸீபோ போன்ற சிமுலேஷன் மென்பொருட்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு தேவை.

நான் சொன்ன மூன்று விஷயங்கள் பற்றிய முழு தகவல்கள், சுட்டிகள் இந்த இணைய தளத்தில் இருக்கிறது, கெட்டியாக பிடித்து கொள்ளவும்.

ரோபோட் செய்து அதுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி கொடுக்க ஐஐடி யில் படித்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட செய்யலாம் என்பதை இந்த தளத்தை பயன்படுத்தினால் - அதில் இருக்கும் கம்யூனிட்டி இல் செயல்பட்டால் தெரிந்துகொள்வோம். வாழ்த்துக்கள்.

openrobotics.org ROS பற்றிய தளம் ros.org
Image
Sep 4, 2023 13 tweets 5 min read
எங்கே, எப்படி வேலை தேடுவது ?

இன்றைக்கு இருக்கின்ற சூழலில், நேரடி கேம்பஸ் / Off கேம்பஸ் இண்டர்வியுவிலும் - ஒரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியில் இணைத்துக்கொண்டு பணியாற்றிய சூழலிலும், அல்லது 10-15 ஆண்டு அனுபவம் நிறைந்த சூழலிலும் சிலர் அடுத்த பணி வாய்ப்பை நோக்கி போகிறார்கள். Image பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த - புதிய கமிட்மெண்ட்ஸ் மீட் செய்ய - இருக்கும் பணி வாய்ப்பில் மேலே உயர எந்த வாய்ப்பும் இல்லாத சூழலை எதிர்கொள்ள - கேரியரில் எடுத்த பிரேக் முடிந்து மீண்டும் பணி சூழலுக்கு திரும்ப - என பல காரணங்கள் இருக்கலாம். Image
Feb 23, 2023 14 tweets 2 min read
கடுமையான டிராபிக் ஜாம் இல் சிக்கி இருப்பவர்கள் மட்டும் படிக்கவும்.

சென்னையின் துணை நகரம் திட்டம் கைவிடப்பட்டது எப்படி ? கலைஞர் 4 ஆவது முறை ஆட்சிக்கு வந்த போது நிறைவேற்றப்பட்ட திட்டங்களான இலவச டிவி இன்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பேசப்படுகிறது.
Feb 16, 2023 7 tweets 3 min read
தென் கொரிய நாடு இந்த ஆண்டு (2023), 1300 சர்வதேச மாணவ மாணவிகளுக்கு முழு கல்வி உதவி கொடுக்க இருக்கிறது. இந்த கல்வி உதவியில் கல்வி கட்டணம், வாழும் கட்டணம், விமான கட்டணம், மருத்துவ காப்பீடு கட்டணம் அனைத்தும் அடங்கும். இதில் தேர்ந்து எடுக்கப்படும் மாணவ மாணவிகள் கொரியன் எம்பசி மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் (இதற்கு நான் உதவ முடியும்). இதில் மாஸ்டர் டிகிரி 3 ஆண்டுகள் (முதல் ஆண்டு கொரிய மொழி, மற்ற இரண்டு ஆண்டுகள் கல்வி). கொரிய மொழி கற்க எளிதானது.
Jan 31, 2023 6 tweets 2 min read
ஆடி கார் நிறுவனம் Audi Hungaria Faculty of Vehicle Engineering ஹங்கேரியில் நடத்தும் இளங்கலை பட்ட படிப்பு (12 வகுப்பு படித்தால் இணையலாம்). மொத்தம் 7 செமஸ்டர். வேலை வாய்ப்பு உறுதி என்பதை சொல்ல தேவையில்லை.

admissions.sze.hu/bachelor-in-ve… விண்ணப்ப கட்டணம் 100 யூரோ , ஒரு செமஸ்டருக்கு 2600 யூரோ கட்டணம். வேலை பார்க்கும்போதே பார்ட் டைம் வேலை பார்த்து சம்பாதித்து மிக எளிதாக கட்டிவிடலாம். விசா போன்ற விவரங்களை நானும் முல்லை அக்கதமியும் இணைந்து செய்கிறோம்.
Jan 8, 2023 22 tweets 3 min read
Launching MadeInIndia ecom B2B / B2C in Scandinavia / Nordic to Identify new markets for Tamil Nadu!

தமிழ் நாட்டில் தயாராகும் உடைகள், மற்ற பொருட்களை ஸ்கண்டிநேவியாவில் சந்தைப்படுத்த ஒரு இணைய தளத்தை கட்ட வேண்டும் என்பது என் கனவு.
இதில் முக்கியமாக நான் கொண்டுவர விரும்பியது உடைகள். சுவீடனில் பத்து மில்லியன் மக்கள் - மற்ற ஸ்காண்டிநேவிய நாடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் (டென்மார்க் - பின்லாந்து - நார்வே), அல்லது மொத்த நார்டிக் நாடுகளும் என்றால் ஐஸ்லாந்து கூட இதில் வரும், ஆக 25 மில்லியன் மக்கள் தொகை. இது தான் நான் டார்கெட் செய்ய நினைக்கும் சந்தை.
Dec 27, 2022 29 tweets 7 min read
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2022 ஆண்டு நிறைவு பெற்று அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கிறேன். இந்த ஆண்டு முழுதும் தனி செய்தியில், மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு உங்கள் / உங்கள் சார்ந்தோர் கல்வி வேலை வாய்ப்பு பற்றி உரையாடிய அனைவருக்கும் நன்றி. என்னால் முடிந்த அளவு அனைவருக்கும் மீண்டும் அஞ்சல் / செய்தி அனுப்பி இருக்கிறேன், இன்னும் இருக்கும் சில நாட்களில் அனைத்து செய்திகளையும் பார்த்து பதில் சொல்லி விட உத்தேசம்.
Oct 30, 2022 49 tweets 5 min read
ஆங்கில ஆசிரியராக ஜப்பானுக்கு எப்படி வருவது

மூன்று பொதுவான நுழைவு நிலை பாதைகளின் ஒப்பீடு
(ஆசிரியர் தகுதிகள் தேவையில்லை!) நீங்கள் உங்கள் ஜப்பானில் இருக்கும் கடலில் நனைக்க விரும்பினாலும் அல்லது ஜப்பானுக்கு ஆங்கிலம் கற்பிக்க வர வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமையாக ஈடுபட்டாலும் - விருப்பங்களைச் சுற்றி உங்கள் தலையைச் சுற்றிக் கொண்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது சோர்வாக இருக்கும்.
Oct 29, 2022 5 tweets 1 min read
ஏய் பருத்தி மூட்ட உனக்கு என்ன வேணும்..

திருப்பூர் பனியன் கம்பெனி எல்லாம் அவுட் ஆப் பிசினஸ் ஆகிடுச்சு வேற ஐடியா சொல்லுங்க..

நேரா பங்களா தேஷ் போ. டாக்காவுல இறங்கு. அங்க Savar அப்படீன்னு ஏரியா இருக்கு அங்க போ.. ஒரு கம்பெனி போடு. சீனாவில் இருந்து RMG ரெடி மேட் கார்மென்ட் இறக்கு. அதுல made in Bangladesh அப்படீன்னு ஒட்டு. திருப்பூர் கொண்டு வந்து கடைய போடு. இல்லைன்னா அங்க இருந்தே வட இந்தியாவுக்கு அனுப்பு. இப்ப எல்லாம் அவனுக வங்காள தேசத்தில் இருந்து வந்தா தான் எடுக்கிரானுகளாம்.

ஏ திமிங்கலம் ஒனக்கு என்ன வேணும் ?
Aug 23, 2022 27 tweets 4 min read
அமைச்சர் தங்கம் தென்னரசு அழைத்தார்.

சுவிடன்லயா இருக்கீங்க. @ElliAvrRam கூட உங்க ஊர் தானே ? தனுஷ் கூட எதோ படம் பண்ணி இருக்கிறதா கேள்வி. என்றார். ஆமாம் சார். இங்க பாலிவுட் டான்சு என்று சுத்திட்டு இருந்தது இப்ப இந்தியாவில் நிறைய படம் நடிக்குதாம். இந்த பிசியிலும் சினிமா உலகத்தை பாலோ பண்ணிட்டு இருக்கீங்க, நல்லது. என்ன சார் விஷயம் என்றேன்.

என்ன சார் விஷயம் ? என்றேன்.
Aug 8, 2022 114 tweets 39 min read
நூறு நாளில் நீங்களும் மென்பொருள் வல்லுநர் ஆகலாம். நிரல் இல்லா மென்பொருள் கருவிகளின் தொகுப்பு, 100 நாளைக்கு. தினமும் நான் சொல்லும் விஷயங்களை பயின்றால், 100 நாட்களின் முடிவில், உங்களால் ஒரு நிரல் எழுதும் மென்பொருள் வல்லுநர் செய்யும் அத்தனை பணிகளையும் செய்ய இயலும். என்ன தயாரா ? #100நாள்நிரல்இல்லாமென்பொருள்வல்லுநர்பயிற்சி

#நாள்1 #PepperProgrammer

இந்த பயிற்சிகளில் நிரல் எழுதுவது இல்லை என்றாலும், முதலில் நாம் நிரல்களை பார்வையிட கற்பதும், கோப்புகளை சேமிப்பதும் செய்ய வேண்டும். அதற்காய் நீங்கள் உருவாக்க வேண்டியது ஒரு கிட் கணக்கு.
Jul 19, 2022 15 tweets 2 min read
ஒரு வேலையில் இருந்து கண்ணியமாக வெளியேறுதல் - Thread - இழை.. பல்வேறு காரணங்களுக்காக நாம் தற்போது பார்க்கும் வேலையை விட தேவையாக இருக்கும்.

குடும்ப சூழல்
தேவைகள் அதிகரிப்பு
புதிய துறைக்கு மாறும் விருப்பம்
சும்மா கூட ஒரு பிரேக்
Jul 13, 2022 4 tweets 1 min read
#JobsFromRavi

Royal Bank of Scotland Chennai Ambattur இல் நேரடி நேர்முக தேர்வு (வாக் இன்). பணி வாய்ப்பை வழங்குபவர்
@arumugamsevva

Natwest Group, Sai Nagar, Plot No 14, 3rd Main Road, Chennai, Tamil Nadu 600058

Walk-In : 10 am - 12:30 pm Documents Needed:

Resume, Pan Card Copy, Aadhar Card, Mark Sheets, Vaccinaton Certificate (both doses)

Freshers (2020, 2021, 2022) with Any graduate. ready to work in Shifts. Good comminication skills and Microsoft tools skills. (MS Office)
Jul 5, 2022 10 tweets 2 min read
#100நாள்100பதிவு #JobsFromRavi
கல்வி சம்பந்தமான 100 பதிவுகள் இடலாம் என நினைக்கிறேன். அனைத்தும் ஒரே இழையின் கீழ் தொகுக்க திட்டம். முதல் பதிவு. அறிமுகம் ஒடின் ப்ராஜக்ட். இது ஒரு திறந்த மூல கல்வி திட்டம். ரூபி அல்லது ஜாவா ஸ்கிரிப்ட் பழகலாம். அனைத்து பாடங்களும் கல்வியும் இலவசம். Full Stack JavaScript தேர்ந்து படிக்கலாம்.

இதில்
INTERMEDIATE HTML AND CSS (23 பாடங்கள்)
JAVASCRIPT (44 பாடங்கள்)
ADVANCED HTML AND CSS (16 பாடங்கள்)
NODEJS (24 பாடங்கள்)
GETTING HIRED (13 பாடங்கள்)
Jul 4, 2022 12 tweets 2 min read
கொரோனா உச்ச கட்டத்தில் இருந்த நேரம். முன்பெல்லாம் உயர் நடுத்தர வர்க்கமும், பெரும் தனக்காரர்களும் மட்டும் சிகிச்சை பெற்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமவனைகள் கூட பயம் காரணமாக யாரையும் அனுமதிக்காத நிலை. பணக்காரர், பெரும் அரசியல் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனையில் ஒரு ஓரத்தில் இடம் கிடைத்த நிலை இருந்தது. எங்கே பார்த்தாலும் மரண ஓலம்.
Jul 3, 2022 7 tweets 1 min read
In October 2020, the first diagonal crossing in Stockholm was opened at the intersection of Mäster Samuelsgatan and Regeringsgatan Image A pedestrian scramble, also known as scramble intersection and scramble corner (Canada), 'X' Crossing (UK), diagonal crossing (US), scramble crossing (スクランブル交差点, sukuranburu-kōsaten) (Japan), exclusive pedestrian interval, or Barnes Dance
Jun 22, 2022 9 tweets 2 min read
சைபர் கிரைம் போலீஸ் ஒருவரை எப்படி கைது செய்கிறார்கள்...

இழை.

இணையம் தரும் முகமிலி தகுதியில் (Anonymous Status) கருத்து சுகந்திரம் என்ற எல்லையை தாண்டி தனிமனித வசை, வன்மம் என்ற வகையில் இறங்கி, அதனால் கைது செய்யப்பட்ட சிலரை நேற்று கண்டீர்கள். ஆனால் எப்படி ? எப்படி எங்கோ ஒரு முலையில் டிவிட்டர் செயலியில் எழுதிய கீச்சு நறுக்கை வைத்து ஆளை பிடித்தார்கள் காவல் துறையினர் ? அறிந்துகொள்ள இந்த இழை. இணையத்தில் உங்கள் லட்சுமண ரேகை எது என்று அறிந்து அதை தாண்டாமல் இருக்க ஒரு வாய்ப்பு..
Jun 16, 2022 29 tweets 4 min read
ஐரோப்பா / ஸ்காண்டிநேவியாவில் தொழில் வாய்ப்புகள் என்ன (B2B / B2C) ? ஒரு தொழில் முனைவோராக இந்த நாடுகளுக்கு சென்று செட்டில் ஆவது எப்படி ? என்ன வகையான விசா வகைகள் இருக்கிறது ? எவ்வளவு செலவு ஆகும் ? விரிவாக இந்த இழையில் பார்க்கலாம்... 70' களில் 80' களில் ஐரோப்பா - நார்டிக் நாடுகளில் குடியேறிவர்கள் இப்ப எல்லாம் அல்டரா ரிச். குழந்தைகள் எல்லாம் நல்ல படிப்பு, நல்ல நிலையில் இருக்காங்க. இன்னும் பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கு, அதை சொல்ல தான் இந்த பதிவு.
May 5, 2022 34 tweets 7 min read
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

மெக்கானிக்கல் - சிவில் - படித்து முடித்து 10 ஆண்டு ஆனவர்கள் எல்லாம் தோபுக்கடீர் என Web Development Engineer ஆவது எப்படி ? 100 நாளில் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு Up Skill செய்துகொள்வது எப்படி ? இழை குறும் பதிவுகள். ஆங். வெப் டெவலப்பர் என்றா சொன்னேன்.. உங்களுக்கு ஏதாவது மனிதவள துறை தோழர் இருந்தால் ஒரு வெப் டெவலப்பர் பிடித்து வேலையில் சேர வைப்பதற்கு என்ன வகையான கதகளி ஆடவேண்டி இருக்கிறது என கேட்டு பாருங்கள்.
Apr 21, 2022 8 tweets 1 min read
Online Jobs Series #1 - மென்பொருள் வரைகலை வகுப்பு. (Digital Design).

Banner Design, Logo Design, Pamplet Design, Brochure design போன்ற பணிகளை இணையம் மூலம் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி ? என்பதை ஒரு இலவச வகுப்பு எடுக்க போறேன். பல காரணங்களுக்காக வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய தேவை இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். இது முற்றிலும் விலையில்லா வகுப்பு. அட Free ப்பா.
Apr 18, 2022 41 tweets 5 min read
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்.

இன்டர்வியூ எடுப்பவரை அசத்தி நேர்முக தேர்வில் வெற்றி பெறுவது எப்படி. தொடர் இழை. நேர்முக தேர்வில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது முதல் 5 விநாடிகள் மட்டுமே என்பது எனது கருத்து.

அது நேரடி நேர்முகம் ஆக இருந்தாலும், மெய் நிகர் வழி இருந்தாலும். பல நேர்முக தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி / தோல்வி அடைந்தவன் என்ற முறையில் என்னுடைய அனுபவ பகிர்வுகள் இழையாக.