வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!
ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.
எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன்
கிடைத்து விடும்.
இங்கு #ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும், #இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,
#மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும். #ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர்
கண் வியாதியின்றி இருப்பர். #திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின்
சிவலோகம் அடைவர்.
#செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர். #புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். #வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம். #வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
#சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.
-----------
- அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்,
- ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்,
- நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்,
- பிறரை ஏமாற்றியிருந்தால்,
- ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்..
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.
---------
பிள்ளைகளில் பகீரதனும்
எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே ''வரராசை'' தான் உயர்ந்தது.
இதற்கு ''புன்னைவனம் சீரரசை''
என்றும் பெயருண்டு.
---------
இங்கே
- ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்.
- இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.
- இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
இத்தலம் எதுவென
இன்னும் புரியவில்லையா?
சங்கரனாகிய சிவனும்
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் #சங்கர_நாராயணர்_கோயில் தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ).
இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநாயிணார் கோவில்.
இத்தலத்திற்கு #எப்படி_செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
#காகம்
காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்
நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம்.
ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது.
இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?
ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும்
இந்த காகத்திற்கு உண்டு என்பதும் உண்மையான ஒன்று.
அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காகத்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும்.
தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.( குறிப்பு: இது கருடாலாயா என்ற குழுவில் நான் படித்தது. அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.🌞வ்ருஷாகபி:..
ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,
“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,
“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
நாளை 26/06/2023 பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம்.
அன்று ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது நம்பிக்கை.
இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.
இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததாலேயே ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் (𝘾𝙀𝙍𝙉) முன்பாக பெரியதொரு நடராஜர் சிலை வைத்துள்ளனர்.