ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி *குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா* என்று அழைக்கப்படுகிறது.
சன்னியாச ஆசிரமத்தில், ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
*குடீசகர்கள்* என்று அழைக்கப்படும் சன்னியாசிகள் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்;
*பஹுதகர்கள்* என்று அழைக்கப்படும் இன்னொரு விதமான துறவிகள், அதிக நீர் உள்ள நதிக்கரையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்;
*பரிவ்ராஜகர்கள்* என்று அழைக்கப்படும் மற்றும் ஒரு விதமானவர்கள், பயணம் செய்துகொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் (ஊரில்) மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாட்கள்தான் தங்குவார்கள்.
பரிவ்ராஜகர்கள் ஞானத்தை அடைந்திருப்பார்கள்; குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருப்பார்கள். தாங்கள் தங்கும் கிராமத்திலோ நகரத்திலோ பிச்சை எடுத்துதான் உணவு உட்கொள்வார்கள். சன்னியாசிகளுக்குப் பற்றின்மை எனும் பண்பு மிகவும் முக்கியமானது.
ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கினால் அந்த இடத்திலோ, அங்கு வாழும் மக்களின் மேலோ, மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு இவர்கள் மீதோ பற்று வந்துவிடும். அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பார்கள்.
ஆனால் மழைக் காலத்திலோ ஊர் ஊராக சஞ்சரிக்க முடியாது. ஏனெனில் மழைக் காலத்தில் புதிதாகப் புட்கள், செடிகள் துளிர் விடும்; புழு பூச்சிகள் மண்ணிலிருந்து வெளிவரத் தொடங்கும். துறவிகளுக்கு அகிம்சை என்ற பண்பும் மிகவும் முக்கியமானது.
புட்களையும், செடிகளையும், புழு பூச்சிகளையும் மிதியாமல் சஞ்சரிப்பது கடினம் என்பதால், மழைக்காலம் தொடங்கி முடியும் வரை (நான்கு மாதங்கள்) ஒரே இடத்தில் தங்கி விடுவார்கள். குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆனி மாத பவுர்ணமி அன்று தான் மழைக்காலமும் தொடங்கும்.
அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும்பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கிவிடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக்கொள்வார்கள்.
அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள்.
வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும்.
சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், *தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.*
இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும்.
வியாச பகவானை நிமித்தமாக வைத்து, (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.
வியாசரை விஷ்ணுவின் மறுவடிவம் எனக் கூறுவர். இவர் வேறு அவர் வேறு அல்ல என்று பொருள்படுமாறு அமைந்தது இந்த ஸ்லோகம்:
வ்யாஸாய விஷ்ணு ரூபாய
வ்யாஸ ரூபாய விஷ்ணவே।
நமோவை ப்ரஹ்ம நிதயே
வாசி'ஷ்டாய நமோ நம:।।
வியாசர் க்ருஷ்ண த்வீபம் என்ற இடத்தில் பிறந்ததால் இவரை "க்ருஷ்ண த்வைபாயனர்" "த்வைபாயனர்" என்றும் அழைப்பர். வசிஷ்டரின் குலத் தோன்றல் என்பதால் வாசிஷ்டர் என்ற பெயரும் உண்டு. இன்றும் சிரஞ்ஜீவியாக வாழும் இவர் பதரிகாஸ்ரமத்தில் இருப்பவர். பாதராயணர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
வியாசர், நால் வேதங்களையும் தொகுத்தது மட்டுமின்றி, வேத ஸாரங்களை ஸ்ம்ருதிகளாகவும் ஆக்கி உதவியுள்ளார். பதினெட்டுப் புராணங்களை இயற்றியவரும் இவரே. அப்புராணங்களைப் பராமரிக்கும் பணியை ஸூத பௌராணிகர் வசம் ஒப்படைத்தார்.
நம் நாட்டு இரட்டை இதிஹாஸங்களான ராமாயணம் வால்மீகி முனிவராலும், மஹாபாரதம் வியாச முனிவராலும் இயற்றப் பட்டவை. ராமாயணம் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால்,
மஹாபாரதம் (அதில் அடங்கியுள்ள பகவத்கீதை (ம) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உட்பட) 100,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால் எவ்வளவு பெரிய சாதனை என்று மலைக்கத் தோன்றுகிறது அல்லவா?
ப்ரஹ்ம ஸூத்ரம் என்ற இவரது நூல் தான் நம் நாட்டின் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத வேதாந்தங்களின் தோற்றுவாய் ஆகும்.
வியாசர் முனிவர்களுக்கெல்லாம் முனிவர்; ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி. அதனால் தான் வியாச பூஜை, எந்த வேதாந்தத்தைப் பின்பற்றும் ஸ்வாமிகளும் கடைப்பிடிக்க வேண்டிய நோன்பாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
வியாசருக்கு எவ்வளவு பெரிய மகத்துவத்தைத் தந்துள்ளனர் என்றால், அவரை பகவான் வ்யாஸர் என்று அழைப்பதுடன், அவரை "ஒரு தலை உடைய பிரம்மா ; இரு கை உடைய விஷ்ணு , நெற்றிக்கண் இல்லாத சிவன்" என்று போற்றுகின்றனர் :
அசதுர்முகயத் ப்ரஹ்மா
அசதுர்புஜ விஷ்ணவே
அபால லோசனஃ சம்பு
பகவான் பாதராயண:।।
மஹர்ஷி வியாசரின் அவதார தினத்தில் அவரை நன்றியுடன் நினைவு கூர்வது, நம் நாட்டுப் பாரம்பரியங்களை மதிக்கும், நம் அனைவரது கடமையுமாகும்.
எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார். முனிவர் சொன்னார். “ரொம்ப சுலபம். ‘நாரம்’ என்றால் ‘தண்ணீர்’. ‘அயனன்’ என்றால் ‘சயனித்திருப்பவன்’. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா ? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நாராயணனிடமே ஓடினார்..
ஐயனே, உம்மை நான் நாராயணா…நாராயணா… என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான். அடடா…எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக் கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்.
நம் நாட்டு தொடர்புள்ள சரித்திர நிகழ்வுகள் நடக்கும் போது வழக்கப்படி நம்ம உள்ளூர் ஊடகங்கள் அதை கவனிக்க தவறி ஒரே சமயத்தில் 3 பேருடன் கள்ள தொடர்பு கொண்ட பேராசிரியை என்றோ.. அல்லது ஈஸிஆரில் எங்கு நல்ல பிரியாணி கிடைக்கும் என்றோ செய்தி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை என்று சென்ற 1940 கள் வரை "பப்" களிலும் "கிளப்" களிலும் எழுதி வைத்திருந்த அதே இங்கிலாந்தில் இன்று ஒரு இந்திய வம்சாவழி நபர் அந்த நாட்டின் தலைமை பதவிக்கு போட்டியிடுகிறார்.
இவரே தான் கடந்த ஒன்றரை வருடமாக இந்த நாட்டின் நிதி மந்திரியாக பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். அந்த நிதி மந்திரி நிலையை எட்டுவதை ஒரு 30 வருடம் முன்பு நினைத்தே பார்க்க இயலாது. அப்படி இருக்க இன்று அதையும் தாண்டி மேலே ஏற போட்டி போடுகிறார்.
அருள்மிகு ஸ்ரீ கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவில்
பழமை : 1500 ஆண்டுகளுக்கு முன் பல்லவரால் கட்டப்பட்டது
என கோவில் கல்வெட்டு கூறுகிறது.
🇮🇳🙏1
தல விருட்சம் : பனைமரம்.
ஒரு காலத்தில் பனைமரங்கள் நிறைந்த பகுதியாக இவ்விடம் இருந்ததாம்.
பல வரங்கள் பெற்ற
மகிஷாசுரனை வதைக்க அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்று சேர்ந்த ஒரே சக்தியாக மாறிய அம்பிகை 🇮🇳🙏2
ஒரு கருக்கல் (நள்ளிரவு) நேரம் கையில் சூலமேந்தி தாமரை பீடத்தில் அமர்ந்து சூரனை வதம் செய்ததாகவும்,
அதனால் மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள் என்றும் அங்கேயே குடி கொண்டாள் என்றும் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதன் காரணங்கள்!!
இறைவழிப்பாட்டில் மிக முக்கியமானது, எந்தெந்த கோவிலுக்கு சென்றாலும், திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவை நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது. திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவது ஏன் என்று இங்கு பார்போம்.
திருநீறு :
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வது வழக்கம். மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது.
அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.