ஆராய்சியாளர்களால்
3 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்பட்ட தலம்.
3000 ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தை தலவிருட்சமாக கொண்ட தலம்.
பிரளயகாலத்திலும் அழியாத தலம்.
நடுநாட்டின் 22 சிவதிருத்தலங்களில் 9வது தலம்.
சைவ சமயத்தின் 28 ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை
முருகபெருமானே நிலைநிறுத்தியதாக அறியப்படும் ஒரே தலம்.
இல்லற வாழ்விலும் ஈசனை இடைவிடாது வழிபட்ட நாதசர்மாவும் அனவர்த்தியும் சிவகணங்களாகவே ஆன தலம்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்ட தலம்.
(பின்னர், திருஆரூர் கமலாயகுளத்தில் எடுத்தார்).
உலகபடைப்பில் சிவபெருமானே மலையாக தோன்றியதால் பழமலைநாதர் என பெயர் பெற்ற தலம்.
பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தின்படி இத்திருகோவிலில் அனைத்தும் ஐந்து ஐந்தாக இருப்பது வேறெங்கும் காண இயலாத சிறப்பாகும்.
பதிவின் முடிவில் நமக்கு மிகவும் தேவையான ஐந்தும் உள்ளது ஐயா.....
ஐந்து மூர்த்தங்கள்:
விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்
ஈசனின் ஐந்து திருநாமங்கள்: விருத்தகிரீஸ்வரர்
பழமலைநாதர்
விருத்தாசலேஸ்வரர்
முதுகுன்றீஸ்வரர்
விருத்தகிரிநாதர்
ஐந்து விநாயகர்கள்:
ஆழத்து விநாயகர்
மாற்றுரைத்த விநாயகர் முப்பிள்ளையார்
தசபுஜ கணபதி
வல்லப கணபதி
இறைவனை தரிசனம் கண்ட ஐவர்:
உரோமச முனிவர்
விபசித்து முனிவர்
குமார தேவர்
நாத சர்மா
அனவர்த்தினி
ஐந்து கோபுரங்கள்:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்
ஐந்து நந்திகள்:
இந்திரநந்தி
வேதநந்தி
ஆத்மநந்தி
மால்விடைநந்தி
தர்மநந்தி
ஐந்து உள் மண்டபங்கள்:
அர்த்த மண்டபம்
இடைகழி மண்டபம்
தபன மண்டபம்
மகா மண்டபம்
இசை மண்டபம்.
ஐந்து வெளி மண்டபங்கள்:
இருபது கால் மண்டபம் தீபாராதனை மண்டபம் நூற்றுக்கால் மண்டபம்
விபசித்து மண்டபம்
சித்திர மண்டபம்
ஐந்து வழிபாடுகள்:
திருவனந்தல்
காலசந்தி
உச்சிகாலம்
சாயரட்சை
அர்த்த ஜாமம்
ஐந்து திருவிழாக்கள்:
வைகாசி வசந்த உற்சவம்
ஆனி திருமஞ்சனம்
ஆடிப்பூரம் திருக்கல்யாணம்
மார்கழி திருவாதிரை
மாசிமகம் 10நாள் பிரம்மோற்ஸவம்.
ஐந்து தேர்கள்:
விநாயகர் தேர்
முருகன் தேர்
பழமலை நாதர் தேர்
பெரியநாயகி தேர்
சண்டிகேஸ்வரர் தேர்
தலத்தின் ஐந்து பெயர்கள்: திருமுதுகுன்றம்
விருத்தகாசி
விருத்தாசலம்
நெற்குப்பை
முதுகிரி
பெருமானின் பம்பர் பரிசு:
இத்தலத்தில் பிறந்தால்,
வாழ்ந்தால், வழிபட்டால்,
நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட நமக்கு முக்தி நிச்சயமாம்.
எம்பெருமான் அருளால் தங்களை இத்தலத்தை நினைக்க வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
பெரும் பேறு பெற்றீர்கள் ஐயா !
கடைசியாக.......
இத்தலத்தை தரிசித்ததால் அடியேனுக்கு ஏதேனும் பலன் இருப்பின் அவை அனைத்தையும் இப்பதிவை படித்தோருக்கு பழமலைநாதர் மீது ஆணையாக மனதார அளிக்கிறேன்.
நன்றி🙏
திருச்சிற்றம்பலம்🚩
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சீடன் ஒருவன், “குருவே! இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?” என்று சந்தேகம் கேட்டான்.
“சமயம் வரும்போது சொல்கிறேன்” என்றார் குரு.
சில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான்.
அச்சமயம் அங்கு வந்த குருநாதர், “சீடனே… பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா?” எனக்கேட்டார்.
குழம்பிய சீடன், “சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்?” எனக்கேட்டான்.
“இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?”
“கயிறை விட்டால் அது ஓடிவிடும்!”
“அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?”
“குருவே, பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன்.
ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.
உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார்.
பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார்
“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி.
“ஆமாம்!.அது சரி....