” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?”
“நமக்கெதுக்குங்க அதெல்லாம்?”
“230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபா தான் கிடைக்குது..!”
”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!”
”சரி சரி உள்ளே வா! வீடே ஒரே நியுஸ் பேப்பர் அடைசலா இருக்குண்னு எம் பொண்டாட்டி கத்திக்கிட்டிருந்தா அதான் வரச்சொல்லியிருக்கா எடையெல்லாம் ஒழுங்கா போடுவே இல்லே…!”
”கரெக்டா இருக்கும் சார்!”
அந்த மனிதர் பழைய இரும்புத்தராசுடன் உள்ளே நுழைய
”லட்சுமி! பழைய பேப்பர் எடுக்க வந்திருக்காங்க சீக்கிரம் வா!”
”நான் கொஞ்சம் அடுப்படியிலே வேலையா இருக்கேன்.
நீங்களே எடுத்துப்போடக்கூடாதா?”
”அப்ப திருப்பி அனுப்பிச்சரவா?”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நானே வந்து எடுத்து போட்டுத் தொலைக்கிறேன்.”
லட்சுமி முணுமுணுத்தபடி கிச்சனில் இருந்து வந்து ஹாலில் கப்போர்டில் கிடந்த பேப்பர்களை அள்ளி வராந்தாவில் போட்டாள்.
சிதறிக்கிடந்த பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.
”அப்படியே ஒரு கயிரு போட்டு கட்டி வைச்சிருந்தா எடை போட சுலபமா இருந்திருக்கும்யா…!”
”ஏன் நீ கயிறு கொண்டு வர மாட்டியா? ”
“இருக்குய்யா ! வண்டியிலே இருக்கு! போய் கொண்டு வரனும்!”
” போய் கொண்டு வா!
”அந்த பெரியவர் எழுந்தார். ரொம்ப தாகமா இருக்குய்யா! குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?
”கேட்டு ஓரமா ஒரு பைப் இருக்கு பாரு…! அதுலே பிடிச்சு குடிச்சுட்டு போய் கயிறு கொண்டு.வா!”
பெரியவர் எழுந்து போய் அந்த குழாயை திருகினார். வெயிலில் சுடுதண்ணீராய் கையில் விழுந்த நீரை கொஞ்சம் கீழே விட்டு முகம் கழுவி பின்னர் இரண்டு கை பிடித்து அருந்தினார்.
முகத்தை தோளில் போட்டிருந்த அழுக்குத்துண்டால் துடைத்துக் கொன்டு வெளியே நிறுத்தியிருந்த அந்த மூன்று சக்கர ட்ரை சைக்கிளை உள்ளே தள்ளிக் கொண்டு வந்தார்.
”கயிரை எடுத்து வான்னு சொன்னா வண்டியையே கொண்டு வந்திட்டியே?” மணிவாசகம் கேட்க
”பேப்பர் நிறைய இருக்குதுய்யா!
அதான் எடை போட்டதும் வண்டியிலே எடுத்து போக சவுகரியமா இருக்கும்னு கொண்டு வந்தேன்.”
”சரி பெரியவரே…! உங்க பேரு என்ன?”
“முத்து”
“எத்தனை வருஷமா இந்த தொழில் பண்றீங்க?”
”அது ஆகி போச்சுங்க முப்பது வருஷம்!”
”ஒரு நாளைக்கு எவ்வளோ கிடைக்கும்.?”
உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.
குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.
பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!
சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.
கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.
ஒருவரைச் சொல்ல வேண்டும்; அவர் இன்னார் என்று சொல்லி அவரை அறியாதார்க்குப் புரிய வைக்க வேண்டும்; அவரால் என்ன நன்மை என்பதைச் சொன்னால், ஓ! அவரா? என உடனே உணரும் படியாகச் சொல்ல வேண்டும்!
எப்படிச் சொல்வது?
மிகச் சமீபத்தில் என் தாய் வழிப் பாட்டியைச் சந்திக்கச் சென்றிருந்தேன்; அவருக்கு வயது 94. அவருக்கு சற்றே நினைவில் தடுமாற்றம்!
என் பெயரைச் சொல்லி, வந்திருக்கிறேன் என்று சொன்னேன்; புரியவில்லை; என் அம்மாவின் பெயரைச் சொல்லி என்னை அடையாளப் படுத்தினேன்; அதுவும் மறந்து விட்டது;
நான் இருக்கும் இடத்தைச் சொன்னேன்; லேசாகப் புரிந்தது; பின் என் தந்தையை நினைவு கூர்ந்தார்; பின்னரே என் தாய் நினைவுக்கு வந்தார் என்பது செய்தி!
ஆக, நம்மை அடையாளப் படுத்தவே இத்தனை விவரங்கள் தேவை எனும் போது,
காட்டில் ஒரு முயல் ஒரு குகையின் வாசலில் அமர்ந்து எதோ டைப் பண்ணிக்கொண்டிருந்தது.
அந்த வழியாக போய்க்கொண்டிருந்த நரி அதைப்பார்த்து, என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. முயல்: தெரியாதா உனக்கு,
னது Ph.D. ஆய்வு படிப்பு முடிவுறும் காலம் வந்து
விட்டது அதனால்தான் தீசிஸ் டைப் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
நரி: அப்படியா, நல்ல விஷயம் தானே, தீசிஸ் டாபிக் / டைட்டில் என்ன ?
முயல்: நரிகளை எப்படி முயல்கள் வேட்டையாடி தமது வாழ்வாதாரங்களை காப்பாற்றுகின்றன என்பதுதான் எனது தீசிஸ் டைட்டில்.
நரி: நான்சென்ஸ். முயல்கள் தாவரங்களைதான் உண்ணும். அது மட்டுமல்லாமல், அவை எப்படி நரியை வேட்டையாட வலிமை உடையவை?
யாரோ தனது வீட்டு வாசலுக்கு வந்திருப்பதை பார்த்த அந்த பெண், வெளிய வந்து பார்க்கிறாள். அங்கே நீண்ட வெள்ளை தாடிகளுடன் மூன்று பேர் நின்றுகொண்டிருப்பதை பார்க்கிறாள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. பார்த்தால் மிகப் பெரிய யோகிகளை போல காணப்பட்டனர்.
விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் குடும்பம் அது என்பதால், “நீங்கள் மூவரும் பசியோடிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். உள்ளே வாருங்கள். சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம்”
“உங்கள் கணவர் வீட்டில் இருக்கிறாரா?”
“இல்லை!”
“அப்போது நாங்கள் வரமுடியாது. நாங்கள் எதிரே உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறோம். உங்கள் கணவர் வந்த பின்பு எங்களை கூப்பிடு” என்று கூறிவிட்டு போய்விடுகின்றனர்.
சற்று நேரம் கழித்து அவள் கணவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் விஷயத்தை கூறினாள் அந்த பெண்.