#இலங்கை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் #ஆனைக்கோட்டை என்ற இடத்தில், பெருங்கல் சின்னம் ஒன்றை அகழாய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட முத்திரையில்,
மூன்றுக் குறியீடுகளைக் கொண்ட தொடர் மேல்வரிசையிலும் அதன் கீழ்ப்பகுதியில் #கோவேத என்ற...
#தமிழி எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. #கோ என்பது அரசனை (அ) தலைவனைக் குறிக்கின்றது.
#கோவேத என்பதனையடுத்து முத்தலைத் தண்டு போன்ற ஒரு குறியீடுக் காணப்படுகின்றது.
இதுவும் அரசுக்குரிய (அ) தலைமைக்குரிய இலச்சினையாகக் கொள்ளப்படுகிறது.
முனைவர் இரா. மதிவாணன்
தமிழிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.
கேரளாவில் உள்ள #எடக்கல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "கடும்மி புத சேர்" என்ற தமிழிக் கல்வெட்டின் இறுதியில்...
ஒரு குறியீடு காணப்படுகிறது. இக்குறியீடும் #ஆனைக்கோட்டை குறியீட்டைப் போல, முத்தலைத் தண்டு வடிவில் உள்ளது.
#சேர என்று அரசனைக் குறிப்பதாலும், மேலும் முத்தலைத் தண்டைக் கொண்டிருப்பதாலும் இக்கல்வெட்டும் ஒரு அரசன் (அ) தலைவனைக் குறிப்பதாக இருக்கலாம்.
#கடும்மிபுத என்ற வாசகத்தில் தமிழும், பிராகிருதமும் கலந்துள்ளது.
இதில் #கழுமாறன் என்பது #கடுமான் என்பதன் மாற்றுச் சொல்லாகக் கருதலாம். #மாறன் என்பது பாண்டிய மரபின் பெயராகும். எனவே #கடுமாறன் என்னும் பாண்டியனாக இவனைக் கருதலாம்.
பொ.மு 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பழந்தமிழ் கல்வெட்டுகள் #அரிட்டாபட்டி மலையில் கண்டறியப்பட்டன.
ஒன்றில், 'நெல்வெளிஇய் சிழிவன் அதினன் வெளியன்' என்னும் பெயரும், மற்றொன்றில் 'இலஞ்சி இளம் பேராதன்' என்னும் பெயரும் வரக் காணலாம்.
#சிழிவன் என்பதைச் #செழியன் என்னும் சொல்லின் மாற்றுவடிவமாகக் கொண்டு, இதனைப் பாண்டிய மரபுப் பெயராகக் கொள்ளலாம்.
'இலஞ்சி இளம் பேராதன்' என்பதில் #இலஞ்சி என்ற ஊரைச் சேர்ந்த இளைய தலைவன் என்று கொள்ளலாம். #இலஞ்சி என்ற மதுரைக்கு அருகில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கரூரில் கிடைத்துள்ள மூன்று தமிழிக் கல்வெட்டுகளில் #பிட்டன், #பிட்டந்தை, #கொற்றந்தை ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
‘நலி(ய்) ஊர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி' என்று ஒரு கல்வெட்டிலும்,
'நல்லி(ய்)ஊர் ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி அதிடானம்' என்று மற்றொரு கல்வெட்டிலும் #பிட்டன் என்ற பெயர் இடம் பெறுகிறது.
இவ்விரு கல்வெட்டுகளும் பொ.பி 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
சங்க இலக்கியங்களில் #பிட்டன் என்னும் தலைவன் குதிரை மலையின் தலைவனாகவும், சேரர் படைத்தலைவனாகவும் பேசப்படுகிறான்.
எனவே #பிட்டன், #பிட்டந்தை ஆகிய பெயர்களையுடைய குறுநில மன்னர்கள், சேர மன்னர்களோடு இணைந்து சமண முனிவர்களுக்கு படுக்கைகளை வெட்டியுள்ளனர் எனக் கருதலாம்..
மேலும் பொ.பி 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு #புகளுர் கல்வெட்டு, ‘கொற்றந்தை ளவன் முன்று' என்று பயின்று வருகிறது.
இதில் வரும் #கொற்றந்தை எனும் பெயர் #குடுமியான்மலை கல்வெட்டிலும் இடம்பெறுவது கொண்டு, இப்பெயர்கள் பரவலாகச் சங்ககாலத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டமை பெறப்படும்.
#காஞ்சிபுரம் மாவட்டம் #மாமண்டூர் பல்லவர் குடைவரைக் கோயில்களுக்கு வடபகுதியில் உள்ள ஒரு குன்றில் பொ.பி 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டொன்று,
'கணிமான் தேனூர் தந்த கோன் குன்று ஆசி செயிதான் தசன் சிறுஞ்வன்' என்று குறிப்பிடுகிறது.
இதில் பயின்று வரும் 'தேனூர் தந்த கோன்' என்பதில் தேனூரை வெற்றி கொண்ட தலைவன் (அ) அரசன் என்று பொருள்படும்.
பொ.பி 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'காபிஊர் ஆதன் சாத்தன்' என்னும் வாசகமுள்ள கல்வெட்டு குன்னக்குடியில் அமைந்துள்ளது. #காப்பியம் என்பது ஒரு குடிப்பெயராக இருக்கவேண்டும்.
தொல்காப்பியர், காப்பியாற்றுக் காப்பியனார், காப்பியன் சேந்தனார் முதலிய புலவர்கள் இருந்துள்ளனர்.
காப்பி ஊரைச் சேர்ந்த தலைவன் #சாத்தன் என்பது இதன் பொருளாகும்.
#ஆதன் என்ற பெயரும் தலைமைக்குரியவரைக் குறிப்பதாகும்.
சங்ககாலப் பெயர்களில் கருங்குழலாதனார், கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், குடவாயில் நல்லாதனார், குன்றுகட் பாலியாதன், ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஓய்மான் வில்லியாதன், வட்டாற்று எழினியாதன் பெயர்கள் #ஆதன் என்ற பெயரை ஒட்டி அமைந்தவை.
சேர மன்னர்களுள் பலரது பெயர் #ஆதன் எனப் பயின்று வருவதுண்டு.
'கோ ஆதன் செல்லிரும்பொறை' என #புகளுர் கல்வெட்டில் காணப்படுகின்றன.
#குன்னக்குடி கல்வெட்டிலுள்ள, 'ஆதன் சாத்தன்' போன்றவை #ஆதன் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டமைந்தவை.
அம்பாசமுத்திரத்திலிருந்து 6 கிமீ தொலைவிலுள்ள #அய்யனார்குளம் பகுதியில் இராஜாக்கள் பாறை, நிலாப்பாறை என்றழைக்கப்படும் குன்றுப்பகுதியில் உள்ள, பழந்தமிழ்க் கல்வெட்டில், பள்ளி செய்வித்த கொடையாளரின் பெயராக ‘குணாவின் ளங்கோ' என்று பயின்று வந்துள்ளது.
இந்தப் பெயருக்கு 'இளவரசனாக இருந்த குணாவன்' என்றும்,
#குணா என்ற தலைவனின் #இளவல்' என்றும், 'குணா என்ற ஊரைச் சேர்ந்த இளங்கோ' என்றும் பல்வேறு விதமாக பொருள் கொள்ள வாய்ப்புள்ளது.
மேற்கண்டவற்றுள் முடிவுரையாக, கிழாரிலிருந்து வேள் நிலை மாறி பின் வேந்தர் நிலை என்ற பண்டைக்கால தமிழக அரசியல் வாணிகத்தினால் செழிப்புற்றிருந்தது.
மூவேந்தர் ஆட்சியில் தமிழகம் கிரேக்க, ரோமானியருடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமையால் அவ்வகை நாணயங்கள் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
எனினும் தமிழகத்தில் வேந்தராட்சி ஒரு காலகட்டத்தில் முடிவுற்றது. ஏனெனில் வணிகத்தில் ஏற்பட்ட சுணக்கமே அதற்கு காரணமாகும்.
பொ.பி 3-ஆம் நூற்றாண்டளவில் கிரேக்க, ரோமானியப் பேரரசுகள் வீழ்ச்சியுற்றபோது, அந்நாடுகள் தமிழகத்துடன் கொண்டிருந்த வாணிகமும் முடிவுக்கு வந்தது.
பெருமளவில் வணிகம் நடைபெறும் போது தான், ஒரு நாட்டின் பொருளாதார நிலை உச்சத்திலிருக்கும்.
வரிகளும், காணிக்கைகளும் அந்நாட்டின் தலைவர்களுக்கு சென்று சேரும்.
தமிழகத்தில் வணிகம் வீழ்ச்சியுற்றதால், மூவேந்தரின் அரசியல் செல்வாக்கு வலுவிழந்தது.
'உறந்தையும் வறிதே வஞ்சியும் வறிதே மதுரையும் வறிதே' என்று மூவேந்தர்களின் தலைநகரங்களும், வளமை இழந்ததை மேற்கண்ட #சிறுபாணாற்று வரிகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
மேலும் பல வேளிர்களையும், இனக்குழுத் தலைவர்களையும், வென்றடக்கி வேந்தர் மேனிலைக்கு வந்தனர்.
#மூவேந்தர் செல்வாக்கு இழந்த காலத்தில், இனக்குழுத் தலைவர்கள் எழுச்சி பெறத் தொடங்கினர்.
இந்த இனக்குழுத் தலைவர்களின் எழுச்சி, உள்நாட்டு அரசியலில் ஒரு இருண்ட காலத்தைத் தொடங்கியது. இதுவே #களப்பிரர் காலமாகும்.
இக் #களப்பிரர்கள் வேறு எங்கிருந்தோ தமிழகத்திற்கு வந்தவர்கள் என்று beகொள்வதைவிட,
இங்கிருந்த பழங்குடிகளே வேந்தராட்சி வீழ்ச்சியடையும் நிலையில் எழுச்சியுற்று உள்நாட்டு கலகத்தில் ஈடுபட்டனர் எனக் கொள்ளல் வேண்டும்.
இந்நிலை வடஇந்தியாவிலும், குஷானப்பேரரசு வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்டது. எனவே சுமார் 200 ஆண்டுகள் தமிழகத்தில் நிலவிய #களப்பிரர் காலமானது இனக்குழுத் தலைவர்களின் ஆட்சியே ஆகும்.
பழங்குடித்தலைவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதால் பழங்குடி நம்பிக்கைகளும் சடங்குகளும் பரவலாக தமிழகத்தில் நடைபெற்றன.
இவ்வகைச் சடங்குகளில் #உயிர்ப்பலி இன்றியமையாததாக இருந்தது. அதனைத் தடுக்கும் முகமாகவே #கொல்லாமை நோன்பாகக் கொண்ட #சமணம், #களப்பிரர் காலத்தில் மீண்டும் எழுச்சி பெற்றது.
பல சமணசமய இலக்கியங்களும் தோன்றின. அதே சமயத்தில் #களப்பிரர் சமண பௌத்த சமயத்தின் கொள்கைகளைப் போன்று வேதவேள்விக்கு..
எதிரானவர்களாக இருந்தனர். எனவே வேதவேள்விகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த மூவேந்தர்களும்,
செல்வாக்கிழந்த நிலைபெற்ற காலத்தில், #களப்பிரர் எழுச்சி சமயத்தின் துணையோடு மேலேழுந்தது என்ற கருதுகோளை முன் வைக்கலாம்.
- நன்றி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.
ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.
தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.
'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.
புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.
வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.
மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.
போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.