Swathika Profile picture
Jul 28 35 tweets 6 min read
பல காலமா நான் யோசித்தது உண்டு chess ல மட்டும் king ஐ விட queen ஏன் powerful? நம்ம சண்முகங்கள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்று? அந்த கேள்விக்கான விடை தான் Marilyn Yalom எழுதிய "Birth of the Chess Queen" புத்தகம்.
chess தோன்றிய ஆரம்ப காலங்களில் ஒரு 500 வருடத்திற்கு அதில் queen கிடையாது. இந்தியாவில் ஆரம்பித்த chess விளையாட்டு பெர்சியா, அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என்று பரவியது. Renaissance காலத்தில் ஐரோப்பியாவிற்கு சென்ற போதுதான் queen என்னும் powerful piece வருகிறது.
அதுவரை ராஜாவிற்கு பக்கத்தில் vizier எனப்படும் ஆலோசகர் தான் இருக்கும். இந்த piece, பிஷப் போல diagonal ஆக ஆனால் ஒரே ஒரு கட்டம் மட்டும் நகரும்.
ஐரோப்பாவில் அப்போது Eleanor of Aquitaine, Margaret of Denmark, Isabella of Castile, மற்றும் Catherine the Great என பல ராணிகள் கோலோச்சி வந்தார்கள். அவர்களின் தாக்கமாக அதென்னது ராணி இல்லாம ஒரு போர் முறை என்று vizier ஐ தூக்கிவிட்டு
ராஜாவை பாதுகாக்கும் ஒரு fierce warrior ஆக இருப்பதிலேயே மிக powerful ஆன queen piece உள்ளே வந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
இதை பற்றிய பல சுவாரசியமான விஷயங்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்
இந்த புத்தகத்தை எழுத காரணமாக இருந்த சம்பவம், ஒரு வினோதமான ஆச்சரியமான சம்பவம் என்று முன்னுரையில் Marilyn குறிப்பிடுறாங்க. ஆமா உண்மையில் அது சுவாரசியமான சம்பவம் தான்.
Gender Research இல் ஈடுபட்டுக்கொண்டிருந்த Marilyn Yalom, A History of the Breast என்றொரு புத்தகத்தை எழுதி அதை பற்றி ஒரு விரிவுரை குடுக்க Gardner Museum க்கு வராங்க அங்க அவங்களுக்கு Madonna and Child, Mary யிடம் பால் குடிக்கும் baby Jesus கொண்ட சிறிய சிலையை காட்டுறாங்க.
இங்க தான் twist. இது ஒரு chess queen piece. ஏதே மேரி மாதா ஒரு chess queen ஆ? இதெப்படி என்று நம்மை போலவே அவங்களும் அதிர்ச்சி ஆகி அங்க இருந்து அப்படியே நூல் பிடிச்சு போய் ஆராய்ந்து எழுதிய புத்தகம் தான் இது.
real life ல பெண்ணின் நடவடிக்கை எல்லாமே ஒரு கட்டத்திற்குள் அடங்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அங்க போகாத... இங்க போகாத... ஆனா சதுரங்கத்தில் ஒரே ஒரு பெண் தான், அது ராணி! அவளை ஒரு கட்டத்திற்குள் அடக்கமுடியாது. அவள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகலாம்.
ராணியின் பக்கத்தில் வரவே எல்லாரும் அஞ்சி நடுங்குவார்கள். "அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க sirrrrrrrr...." என்பது ராக்கி பாயை விட ராணிக்கு தான் பொருந்தும். ராஜாவை கைப்பற்றுவதுதான் சதுரங்க ஆட்டத்தின் நோக்கம். அந்த நோக்கத்திற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது எதிராளியின் ராணிதான்.
ராணியை முடக்கினால் தான் ராஜா மேல் கை வைக்க முடியும். சினிமாவில் ஹீரோக்கள் பேசும், "என்னை தாண்டி அவன் மேல கையை வைடா பார்ப்போம்" எல்லாம் ராணிக்கு தான் 100% பொருந்தக்கூடியது. chess விளையாட்டின் மிகப்பெரிய paradox இதுதான். ராஜாதான் முக்கியம் ஆனால் ராஜாவை காட்டிலும் powerful ஆனது ராணி
விக்ரம் படத்தில் காயத்திரி இறந்ததும் அமர்க்கு தொடை நடுங்கும், கால் வேர்க்கும், நடை தள்ளாடும் அது போல ராணியை இழந்தால் எல்லார்க்கும் கை வேர்க்கும்.
இப்படி ஒரு potent queen வந்த வரலாறு என்ன?
இந்தியாவில் உதயமான சதுரங்கம் இந்திய போர் முறையை அடிப்படையாகக் கொண்டது காலாட்படை, யானை படை, குதிரை படை, சேனாதிபதி, மந்திரி, முதன்மை ஆலோசகர். இவர்கள் தான் போர்க்களத்தில் இருப்பார்கள் இவர்கள் தான் சதுரங்கத்திலும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
முதன்மை ஆலோசகர் ராஜாவுடன் எப்போதும் இருப்பார். ராஜாவிற்கு அடுத்த அதிகாரம் அவரிடம். பொன்னியின் செல்வனில் வரும் சோழப் பேரரசின் முதன்மை அமைச்சர் அநிருத்தப் பிரம்மராயரை இங்கு நினைவுபடுத்தி பார்க்கலாம்.
தனக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது என்ற கர்வம் கொண்டவர் அவரை கண்டு குந்தவையே அஞ்சி நடுங்குவார்.
இதே அரசியலமைப்பு முறை தான் முகலாயர்களிடமும்.
vizier தான் shah வின் second- in- command. இன்றும் அரேபியர்களிடத்தில் ராணி கிடையாது. vizier தான்! ராணியை வைத்து ஆடும் chess க்கு அங்கு தடை.
இதற்கு நேரெதிர் அமைப்பு ஐரோப்பியர்களுடையது. ஐரோப்பாவில் ராணி தான் ராஜாவிற்கு அடுத்து. இதுவே ஆண் வாரிசு இல்லாமல் ராஜா இறந்தால் அவரது மகள் தான் ராணி அவரது கணவர் ராஜா கிடையாது வெறும் இளவரசர் மட்டுமே. எலிசபெத் ராணியின் கணவர் Philip, இளவரசர் மட்டும்தான் ராஜா அல்ல.
ராஜா இறந்துவிட்டாள் ராணி அரியணைக்கு வருவார்.
5ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய சதுரங்கத்தில் ராணிக்கு வேலை இல்லை. ஏனென்றால் அப்போது இந்தியாவில் ராணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இந்திய ராணிகள் இருந்தார்கள்.
ரசியா சுல்தான், ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்றவர்கள். இவர்களும் அசாதாரணமான சூழலில் ஆட்சிக்கு வந்தவர்களே.
இந்தியாவில் இருந்து சென்ற சதுரங்கம் ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்ற மாதிரி அவர்களது கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி மாறியது.
ஐரோப்பாவில் தோன்றிய ராணிக்கும் ஆரம்ப காலங்களில் vizier போல weak தான் ஒரு கட்டம் மட்டுமே நகரும். 15ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினை ஆண்ட Isabella of Castile காலத்தில் தான் ராணி தனது எல்லையற்ற அதிகாரத்தை பெற்றது.
Spanish Inquisition என்கிற பெயரில் மதமாற்றமும், புதிய நாடுகளை கைப்பற்றுவதும் ஸ்பெயினின் எல்லையை விஸ்தரிப்பதும் என Isabella of Castile செய்தவை வரலாற்றில் மறக்கமுடியாத பக்கங்கள். இவரது ஆட்சியில் தான் Christopher Columbus அமெரிக்காவை கண்டுபிடித்தார்.
Isabella of Castile பற்றியும் Spanish Inquisition பற்றியும் பல volume கொண்ட புத்தகங்கள் போடலாம்.
Isabella of Castile ஆண்டு கொண்டு இருந்தபோது ஸ்பெயின் க்கு சென்ற chess, queen க்கு எல்லையற்ற power ஐ தந்தது.
கிறிஸ்துவ மதம் pagan களை மதம் மாற்றம் செய்தபோது, எப்படி அது pagan வழிபாட்டு முறைகளை எடுத்துக்கொண்டது என்று நான் நிறைய சொல்லி இருப்பேன். பெரும்பாலான pagan கள் பெண் தெய்வங்களை வழிபடுபவர்கள்.
அவர்களை சமாதானப்படுத்த அவர்களது பெண் தெய்வங்களுக்கு மாற்றாக கிறிஸ்துவம் முன்வைத்துதான் கன்னி மரியாள். 11ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பா முழுவதும் கன்னி மரியாள், இயேசுவின் அதிசய பிறப்பு போன்றவை பற்றிய பாடல்கள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவை அதிகம் வந்தன.
தெருவிற்கு ஒரு Our Lady church முளைத்தது. pagan கள் பெண் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாதலால் இந்த கன்னி மரியாள் மிக பிரபலமடைந்தது. இயேசுவை பின்னுக்கு தள்ளி மரியன்னை முன்வந்தார்.
இன்றும் Protestants மற்றும் Eastern Orthodox Church கள் catholic மேல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு இயேசுவை பின்னுக்கு தள்ளிய மரியன்னையின் வழிபாடுதான்.
இந்த மரியன்னையின் வழிபாடு எல்லாவற்றிலும் Mary யை உள்ள கொணர்ந்தது.
முக்கியமாக chess விளையாட்டிலும் ராணியின் இடத்தில் Mary யை கொண்டு வந்து வைத்தது. Mary மூலமாக தான் இயேசுவை அடைய முடியும். அதே போல ராணியை தாண்டினால் தான் ராஜாவை அடைய முடியும்.
சரி அதிகாரம், மதம் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஸ்பெயின் க்கு எல்லாம் போன chess ரொம்ப முக்கியமான ஒரு இடத்துக்கு வந்தது, அது France! France உணவுக்கு பெயர் போனது. இன்னொன்றிற்கும் பெயர் போனது அது காதல்! 💘
Etiquette ஐ தொடங்கி வைத்தவர்கள் பிரெஞ்சு மக்கள்.



ஒரு நல்ல குடும்பத்து பெண் எப்படி இருக்க வேண்டும் என்று தான் நீங்கள் எல்லாம் கேள்வி பட்டு இருப்பீர்கள்.
ஆனால் ஒரு நல்ல குடும்பத்து ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கே பாடம் எடுத்தவர்கள் பிரெஞ்சு மக்கள். பெண்களிடம் பழகும் போது, அதாவது dating அப்போ பெண்களை impress செய்ய ஒரு ஆண் chess தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது நல்ல குடும்பத்து ஆண் விதிமுறைகளில் ஒன்று.
chess விளையாட்டு ஒரு ஆணையும் பெண்ணையும் சமமாக வைக்கிறது. chess விளையாடும்போது ஒருவரை ஒருவர் பேசி புரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமைகிறது. இன்றைக்கு எப்படி காபி குடிக்கலாமா? என்று ஒரு பெண்ணிடம் உள்ள தனது விருப்பத்தை நாசூக்காக தெரிவிக்கிறார்களோ...
அது போல அன்று chess விளையாடலாமா? என்று கேட்பார்கள்.
பிரெஞ்சு மக்களை பொறுத்தவரை chess, ஒரு பெண்ணை கவர்வதற்கான ஒரு வாய்ப்பு. அதனால் அவர்களும் ராணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். (இப்போ அந்த எடுக்கவோ? கோக்கவோ? scene நினைச்சா வேற மாதிரி தோணுதே... 🤔🤔)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

Jul 29
"gaslighting” என்பது ஒரு psychological term. 'ஒருவேளை நாம பைத்தியமோ'அப்படின்னு ஒருத்தரை நினைக்க வைக்கிற அளவுக்கு அவங்களை manipulate பண்றதுக்கு பெயர் gaslighting.
போக்கிரி படத்துல வர லிப்ட் சீன் ல, "நமக்குதான் தப்பு தப்பா தோணுது போல, நாமதான் அவன் பாட்டு பாடுற மாதிரி கற்பனை பண்ணிக்கிறோம்" அப்படின்னு அசினை விஜய் நினைக்க வைக்கிறார் இல்லையா அது தான் gaslighting. இருக்குறதிலேயே ரொம்ப dangerous type of manipulation இதுதான்.
நாமதான் பைத்தியம் நமக்குதான் எல்லாம் தப்பு தப்பா தோணுது என்று ஒருவரை நினைக்க வைப்பது.
gaslighting என்கிற வார்த்தை எப்படி வந்தது? Patrick Hamilton 1938 இல் Gaslight என்னும் மேடை நாடகத்தை எழுதினார். இது 1940 இல் படமாகவும் வந்தது. Image
Read 8 tweets
Jul 28
அந்த நாடு நகரங்களைப் பற்றி விவரிக்கும்படி ஆச்சாரிய பிக்ஷவுக்கு ஓய்வு கிடைத்த போதெல்லாம் பொன்னியின் செல்வர் அவரைக் கேட்டு வந்தார். அவரும் அலுப்புச் சலிப்பில்லாமல் சொல்லி வந்தார். அந்நாடு களில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றியும் வர்த்தகப் பெருக்கத்தைப் பற்றியும் கூறினார்.
பொன்னும் மணியும் கொழித்துச் செந்நெல்லும் கரும்பும் செழித்துச் சோழ வள நாட்டுடன் எல்லா வகையிலும் போட்டியிடக் கூடிய சிறப்புக்களுடன் அந்நாடுகள் விளங்குவதைப் பற்றிக் கூறினார். பழைய காலத்திலிருந்து தமிழகத்துக்கும், அந்த நாடுகளுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றிக் கூறினார்.
பல்லவ நாட்டுச் சிற்பிகள் அந்த தேசங்களுக்குச் சென்று எடுப்பித்திருக்கும் அற்புத சிற்பத் திறமை வாய்ந்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னார். தமிழகத்திலிருந்து சென்ற சித்திர. சங்கீத, நாட்டிய கலைகள் அந்நாடுகளில் பரவியிருப்பதைப் பற்றியும் கூறினார்.
Read 4 tweets
Jul 28
“Marilyn Yalom has written the rare book that illuminates something that always has been dimly perceived but never articulated, in this case that that the power of the chess queen reflects the evolution of female power in the western world.” —Cleveland Plain Dealer
Everyone knows that the queen is the most dominant piece in chess, but few people know that the game existed for five hundred years without her. It wasn't until chess became a popular pastime for European royals during the Middle Ages that the queen was born
and was gradually empowered to become the king's fierce warrior and protector.

Birth of the Chess Queen examines the five centuries between the chess queen's timid emergence in the early days of the Holy Roman Empire to her elevation during the reign of Isabel of Castile.
Read 6 tweets
Jul 27
Atheism has nothing to do with communism. communism is much more related to anti-theism. atheism is just a non belief in supernatural. A huge percent of the clergy in the Russian Orthodox Church are members of the Communist Party of the Russian Federation.
Atheist are all communist or all communist are atheist is just a capitalist propaganda during the red scare. It was a way to shame people.

People who believe in God are people who like to sing. Many of them join singing groups.
There are groups that sing classical music, early music, gospel, Broadway songs, etc. What about a group for people who don’t like to sing? That is not likely to happen. People who don’t like to sing pass their time doing other things.
Read 4 tweets
Jul 27
மதங்களின் ஆட்டம்
================
sridhar subramaniam

போப்பின் மன்னிப்புக்கு என்ன பெரிய முக்கியத்துவம் என்று பலர் கேட்கிறார்கள். இதனால் எல்லாம் என்ன மாறுதல்கள் வந்து விடும் என்றும் அங்கலாய்க்கிறார்கள்.
* நடந்தது தவறு என்று ஒப்புக் கொள்வது.

* நடந்தது உண்மைதான் என்று அங்கீகரிப்பது. (Fake History எனும் பிரச்சாரம் செயலிழக்கும்.)

* இனி அப்படிப்பட்ட கொடுமைகள் தொடராமல் இருக்கும் எனும் குறைந்த பட்ச உத்திரவாதம் கிடைக்கும்.
'Problem identified is half solved' என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை இருக்கிறது. ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு கொண்டு விட்டால் அது பாதி தீர்ந்தது மாதிரிதான். நான் அடிக்கடி சொல்வது போல மதங்கள் பற்றிய தூய்மையான பிம்பத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.
Read 22 tweets
Jul 26
Accountability matters! எதோ ஒரு குழுவின் அடையாளத்தை தன்னுடைய அடையாளமாக முன்னிறுத்தும் போது, Proud Indian, Proud Hindu, Orthodox Muslim, வீர சத்திரிய குலம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, peaceful Christian, ஆம்பளைடா என்று மீசையை முறுக்கும் போதெல்லாம்
அந்த குழுவின் மூலம் கிடைத்த பெருமைகளை உங்கள் பெருமையாக அடையாள படுத்துகிறீர்கள். அப்படி இருக்கையில் அந்த குழு செய்து இருக்கும் தவறுகளை, முன்பு எப்போதோ செய்த தவறுகளை சரி செய்யும் பொறுப்பும் கடமையும் கூட உங்களை சார்ந்ததே.
தவறுகளை சரி செய்யாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் அத்தகைய தவறுகள் நடந்தது என்று ஒப்புக்கொள்ளும் accountability யாவது வேண்டும்.
நான் திரும்ப திரும்ப சொல்வது தான், "எப்போதோ நடந்த ஒன்று, பாதிக்கப்பட்டவர்கள் இப்போது நன்றாக தானே இருக்கிறார்கள்?
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(