மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.
வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.
மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
ஒத்த மந்திரம் ஒத்தது ஒத்ததை உருவாக்கும் எனும் அடிப்படையையும், தொத்து மந்திரம் ஒரு முறை தொடர்பு கொண்டால் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கும் எனும் அடிப்படையையும் கொண்டவையாகும்.
இத்தகு மந்திரச் சடங்குகளை மனிதனுக்கும், இயற்கைக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு எனக் கருதும் #வானமாமலை அவர்கள்
மந்திர முறைகளால் இயற்கையை மனிதன் வசப்படுத்த முயன்றான், இயற்கையை அறியப் புறவயமுறை தோன்றிய பின் மந்திரத்தைக் கொன்றுவிட்டு, அதன் வயிற்றில் விஞ்ஞானம் தோன்றியது எனக் கூறுகிறார்.
அவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததினாலேயே, அதுபோலச் செய்தல் என்னும் மந்திர உத்திகளைக் கடைபிடித்தனர்.
உதாரணத்திற்கு இடிமுழக்கம் போன்று ஓசையை எழுப்பிக் கூத்தாடினால், தங்களின் செய்கையைப் பார்த்து இயற்கையும் இடியோசையுடன் மழைபொழியும் என்று நம்பினர்.
உளவியல் ரீதியாக மனவலிமையை மனிதர்க்கு அளிக்கக்கூடிய இத்தகைய நம்பிக்கைக்குரிய செயல்கள் மந்திரச் சடங்குகள் எனப்பட்டன.
வேட்டைக்குச் செல்லும் குழுவினர், வேட்டையில் தாம்விரும்பும் விலங்குகள் கிடைக்க அந்த விலங்குகள் போன்ற பாவனையுடன் நடனமிடுவர்.
மேலும் அந்த விலங்குகளைக் கொல்வது போன்ற சைகைகளுடன் நடனமாடுவர்.
வேட்டைக்குச் செல்லுமுன்பு வேட்டைக்குரிய விலங்கின் வடிவத்தை ஓவியமாக வரைவர்.
கால்நடை மேய்ப்பர்கள் ஆநிரை, செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றை வளர்த்துள்ளனர்.
இவர்கள் வாழ்விடங்களையும், பட்டிகளையும் அகழாய்வு செய்து பார்த்த பொழுது, சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை மாட்டு உருவங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.
அவர்கள் குகைக் குன்றுகளில் அனைத்திலும் எருது, எருமை, மான் ஆகியவற்றின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இக்குகைகளில் சிலவற்றில் பாறை செதுக்குதல் மூலம் கால்நடைகளைச் சித்தரித்துள்ளார்கள்.
இவையனைத்தும் உயிரோட்டமுள்ள கலைக்காட்சியாக இருப்பினும், தொல்பொருள் ஆய்வாளர்கள் இவற்றைச் சடங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுகின்றனர்.
சங்க இலக்கியப் பாடல்களில் மந்திரச் சடங்குகள் பதிவாகியுள்ளன.
குறவர்களின் #மழைச்சடங்கு குறிப்பிடப்படுகிறது. மழை பெய்வது போன்ற ஓசையை, ஆரவாரத்தை எழுப்பி மழைச்சடங்கை குறவர்கள் மேற்கொண்டதை #ஐங்குறுநூறு கூறுகிறது.
போதிய மழை பொழிந்தவுடன் மழைப் பொழிவை நிறுத்தும் பொருட்டு 'மழை மேக்கு உயர்க' எனக் கட்டளையாக சடங்குகளைச் செய்தனர் என்கிறது #புறநானூறு.
#கொற்கை முன்துறையில் உவாதினத்தன்று மகளிர் கடலில் முத்து, சங்கு ஆகியவற்றைச் சொரிந்தனர் என்கிறது #அகநானூறு. இச்சடங்கு தொத்து மந்திரத்தின் விளைவாகும்
அதாவது எவற்றையெல்லாம் நீரில், வேள்வித்தீயில் பலியிடுகிறோமோ அவையெல்லாம் பல்கிப்பெருகும் என்ற பழங்குடி மாந்தரின் நம்பிக்கையில் விளைந்தவையே இச்செயல்களாகும்.
யாகத்தீயில் பலியிடப்படும் விலங்குகள், பொன் முதலான அனைத்து வளந்தரு பொருட்களும், தானியங்களும் பல மடங்காக...
மீண்டும் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததே வேள்வியாகும்.
#பரிபாடல் ஒன்றில் வெள்ளியாலான மீன் செய்து, வைகை ஆற்றில் மக்கள் விடுகின்ற சடங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நீரிலும், நெருப்பிலும் பண்டைய கால மக்களால் பலிகள் மேற்கொள்ளப்பட்டன.
#நீலகிரி மாவட்டம் #கோத்தகிரி அருகே அமைந்துள்ள #கொணவக்கரை பழங்குடியினர் வாழ்கின்ற மலைப்பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள் மந்திரச் சடங்குகள் தொடர்பானவை.
கொணவக்கரையில் காணப்படும் மனித உருவங்கள் வரிசையாக நின்றவாறு உள்ளன.
ஒரு பெரிய உருவத்தின் முன் பல சிறிய உருவங்கள் கையில் சிறிய வில்லுடன் நிற்கும் நிலையில் காணப்படுகின்றன. இதனைப் 'பேய் ஓட்டுதல்' எனும் முறையைச் சுட்டுவதாகக் கருதுவர்.
ஆனால் மந்திரம், சடங்கு தொடர்பில் இதனைக் காணும்போது இது ஒரு மந்திரச் சடங்கு முறையைச் சுட்டுவதாகும்.
#திண்டுக்கல் மாவட்டம் #சிறுமலை பகுதியில் காணப்படும் ஒரு ஓவியத்தில், மிகப்பெரிய மனித உருவம் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளது.
இதனை இனக்குழுவின் தலைவன் (அ) வழிபாட்டிற்குரிய தெய்வம் எனக் கருதலாம்.
சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.
ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.
தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.
'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.
புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
#இலங்கை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் #ஆனைக்கோட்டை என்ற இடத்தில், பெருங்கல் சின்னம் ஒன்றை அகழாய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட முத்திரையில்,
மூன்றுக் குறியீடுகளைக் கொண்ட தொடர் மேல்வரிசையிலும் அதன் கீழ்ப்பகுதியில் #கோவேத என்ற...
#தமிழி எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. #கோ என்பது அரசனை (அ) தலைவனைக் குறிக்கின்றது.
#கோவேத என்பதனையடுத்து முத்தலைத் தண்டு போன்ற ஒரு குறியீடுக் காணப்படுகின்றது.
இதுவும் அரசுக்குரிய (அ) தலைமைக்குரிய இலச்சினையாகக் கொள்ளப்படுகிறது.
முனைவர் இரா. மதிவாணன்
தமிழிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.
கேரளாவில் உள்ள #எடக்கல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "கடும்மி புத சேர்" என்ற தமிழிக் கல்வெட்டின் இறுதியில்...
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.
போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.