சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.
ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.
தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.
'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.
புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும்போது நடை கடக்க முடியாத #கன்றுகள் பின்தங்கி விடுகின்றன.
தாயின் பிரிவால் அவை கண்ணீர் விடுகின்றன. அவற்றின் கண்ணீரைத் துடைக்க #மறவர்கள் ஆநிரைகளை மீட்டு வருகின்றனர்.
அவ்வாறு மீட்டவர்களில் சில #மறவர்கள் மாண்டு போகின்றனர்.
#அகநானூறு 309-ஆம் பாடல் அடிகள், நிரையை வெற்றியுடன் கவர்ந்த #மழவர்கள் தங்களுடைய தெய்வமான கொற்றவைக்குக் கொழுத்த ஆவினைப் பலியிட்டுப் படைத்த உணவினை உண்டு மகிழ்கின்றனர்.
இப்பாட்டு மழவர்களின் இறை நம்பிக்கையைக் காட்டுகிறது.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.
வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.
மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
#இலங்கை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் #ஆனைக்கோட்டை என்ற இடத்தில், பெருங்கல் சின்னம் ஒன்றை அகழாய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட முத்திரையில்,
மூன்றுக் குறியீடுகளைக் கொண்ட தொடர் மேல்வரிசையிலும் அதன் கீழ்ப்பகுதியில் #கோவேத என்ற...
#தமிழி எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. #கோ என்பது அரசனை (அ) தலைவனைக் குறிக்கின்றது.
#கோவேத என்பதனையடுத்து முத்தலைத் தண்டு போன்ற ஒரு குறியீடுக் காணப்படுகின்றது.
இதுவும் அரசுக்குரிய (அ) தலைமைக்குரிய இலச்சினையாகக் கொள்ளப்படுகிறது.
முனைவர் இரா. மதிவாணன்
தமிழிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.
கேரளாவில் உள்ள #எடக்கல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "கடும்மி புத சேர்" என்ற தமிழிக் கல்வெட்டின் இறுதியில்...
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.
போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.