'1956' ஆம் ஆண்டு "இந்தியா" மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தனி மாநிலமாக மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவாக இருந்தது. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் மிகச் சிறிய பகுதி குடகு.
அப்போது குடகு மக்கள் தங்களை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக
அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், நேரு யூனியனாக உங்களை இணைக்க முடியாது, ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.
குடகு மக்கள், 'தமிழகத்துடன்' இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழகத்தில்
அப்போதிருந்த 'ஆட்சியாளர்கள்' அதனை மறுத்து விட்டார்கள்.
தமிழகம் போல் கர்நாடகமும் முதலில் மறுத்தது. ஆனால் பிறகு சம்மதித்து தம்முடன் குடகு பகுதியை இணைத்து ஒரு மாவட்டமாக ஏற்றுக் கொண்டது.
எந்த குடகு பகுதியை தமிழகம் வேண்டாம் என்று சொல்லியதோ அந்த குடகில் தான் 'தலைக்காவிரி' என்னும்
இடத்தில் தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. அப்போது 'பெரியார்' குடகை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். விடுதலையில் எழுதினார், பேரணி நடத்தினார், இருந்தும் அவர் குரலை அன்றைய காமராஜர் அரசாங்கம் அலட்சியம் செய்தது. அன்றைக்கு குடகு மக்களின் என்னம் போல் நாம் அந்த
தமிழ்நாட்டுடன் இணைத்திருந்தால் காவிரி சிக்கல் இந்த அளவுக்கு முற்றி இருக்காது. தமிழ்நாட்டின் உரிமை இன்னும் பலப்பட்டு இருக்கும். அத்தகைய வாய்ப்பை விட்டுக் கொடுத்தவர்கள் யார்.? காங்கிரஸ் கட்சியும், அப்போது ஆண்ட காமராஜரும் என்பது கசப்பான உண்மை. எதற்கெடுத்தாலும் பெரியாரை, திராவிடத்தை,
கலைஞரை குறை சொல்லி திரியும் தில்லுமுல்லு பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்க இந்த வரலாற்றை உரக்கச் சொல்வோம்...
விலை உயர்ந்த காரை ஓட்டுநர் ஓட்டி வருகிறார். அதில் 'துக்ளக் அறிவாளி' #சோ வின் அக்காள் மகள் நடிகை #ரம்யா_கிருஷ்ணன் அவரது சகோதரி 'வினயா கிருஷ்ணனும்' உள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து வந்த அந்த காரை தமிழக போலீசார் சோதனை செய்ததில், 96 பீர் பாட்டில்களும், ஜானி வாக்கர் பிளாக் லேபிள்,
ரெட் லேபிள், பிளாக் டாக், ஸ்மிரனாப் (அதாவது ஒரு ஓட்டுநர் சாப்பிடமுடியாத விலையுயர்ந்த மது வகைகள்) நிறைய மது பாட்டில்களும் இருக்கின்றன.
சட்டப்படி கைதாகவேண்டிய நடிகையும், அவரின் சகோதரியும் ஓட்டுனரை உடனடியாக ஜாமினில் அழைத்துச் செல்கின்றனர். மதுபாட்டில்களுடன் காரில் வந்த அந்த
நடிகைக்கு தெரியாமல் தான் மது கடத்தியதாக ஓட்டுநர் வாக்குமூலம் கொடுக்கிறார்...