"கல்லூரி காணாத கிழவர்.! காளைப்பருவ முதல் கட்டுக்கடங்காத முரடர்.! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டு மென்று அறியாத கிளர்ச்சிக்காரர்.! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே
ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்பவேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்.! யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்.! கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர்.! தமிழ் ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்.! ஆரியமதம், கடவுள் எனும்
Jan 24 • 5 tweets • 1 min read
#பெரியார் எனும் ஓர் பெரும் சகாப்தம்
90 ஆம் வயதில் 180 கூட்டம்.
91 ஆம் வயதில் 150 கூட்டம்.
93 ஆம் வயதில் 249 கூட்டம்.
94 ஆம் வயதில் 229 கூட்டம்.
வாழ்க்கையின் "கடைசி" 98 நாட்களில் (95- ஆம் வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.
ஹெர்னியா பிரச்னையினால்
சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்...
சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்...
இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்.?
எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார்.?
அவருக்கும் கடவுளுக்கும்
Nov 26, 2023 • 7 tweets • 1 min read
"சிறை"க்கு வெளியே அனுப்பினால் "மீண்டும் சட்டத்தை கொளுத்துவேன்"!
திருச்சி வாளாடியைச் சேர்ந்தவன் சிறுவன் #பெரியசாமி அவனுடைய தாய்க்கு ஒரே மகன். பதினெட்டு வயது கூட நிறையாத (16 வயது) பெரியசாமி தீவிரமான கருஞ்சட்டைத் தொண்டன்.
பெரியாரின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தவறால் கலந்து
கொள்ளும் போர் வீரன். பெரியாரின் ஆணையை ஏற்று அவனும் சாதியை பாதுகாக்கும் "அரசியல் சட்ட நகலை" எரித்தான். இரண்டாண்டுகள் கடும் தண்டனை விதிக்கப்பட்ட அவன் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவன் என்பதால் தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த நிகழ்ச்சிக்கு பெயர் "பாரிவேட்டை உற்சவம்". இன்னொரு பெயர் "மட்டையடி உற்சவம்" என்றும் சொல்வார்கள்.
இன்றும் திருக்கண்ணபுரம், சிறீரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில்
இந்த உற்சவத்தை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.
வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்றும், மறுநாளும் இந்த உற்சவம் நடைபெறும்.
குதிரை வாகனத்தில் கிளம்புகிறார் பெருமாள். மேளதாளம் முழங்குகிறது. நாதஸ்வரம் இசைக்கிறது. குதிரைமீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல் ‘சைக்கிள் கேரியர்’-ல்
Sep 9, 2023 • 5 tweets • 1 min read
// பார்ப்பன - இந்துத்துவ கும்பலுக்கு அடியாள் வேலை பார்க்கும் சூத்திரவாள்களுக்கு இந்த பதிவு அர்ப்பணிப்பு.. //
********************************
இந்துத்துவா போஸ்டர் BOY மாறியது எப்படி..? 2002க்கும் 2019 க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன..?
இஸ்லாமியர்களை வேட்டையாடிய கொடூரமான
2002 குஜராத் கலவரத்தின் இரு முகங்களாக அறியப்பட்டவர்கள், ரத்த காயங்களுடன் கைகூப்பி என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் குத்புதீன் அன்சாரி, மறுபுறம் மதவெறி கொப்பளிக்க கத்தியை வெறிகொண்டு உயர்த்தி காண்பிக்கும் அசோக் பார்மர்...
இந்த அசோக் பார்மர் அகமதாபாத்தில் புதிதாகத் துவக்கி
Aug 26, 2023 • 8 tweets • 1 min read
1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் மறைந்து விடுகிறார். சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் நடந்தது.
அன்றைய கல்வி அமைச்சர் நாவலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என எதிர்ப்பார்த்ததிற்கு மேல் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நடிகவேள் ராதாவின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாவலர், ஏ.எஸ்.கே. ஆகியோர் ஆற்றிய உரைகள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவில் இருந்தன.
நடிகவேள் இவ்வாறு பேசினார்.
Aug 20, 2023 • 9 tweets • 1 min read
புதுச்சேரியை விழுங்க முயன்ற "அரவிந்தர் ஆசிரமம்" எதிர்ப்பின் வரலாற்றுப் பதிவு...!
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் புதுச்சேரிக்கு விடுதலை வேண்டும் என, பிரெஞ்சு அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது. பிரெஞ்சு அரசிடமும், இந்திய அரசிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி
புதுச்சேரியை அரவிந்தர் ஆசிரமத்திடம் தானமாக ஒப்படைக்கவேண்டும் என "அன்னை" என்றழைக்கப்படும் மீரா அல்பாசா முயற்சி எடுத்தார். இந்தத் திரைமறைவு வேலைகள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தவுடன், 24-11-1947 அன்று வெகுண்டெழுந்த புதுச்சேரி மக்கள், அன்னை மீராவின் சூழ்ச்சி ஒழிக, ஆசிரமம் செய்வது
Jul 1, 2023 • 5 tweets • 1 min read
பெரியாரிடம் ஒரு கையெழுத்து கேட்டால் கூட காசு வாங்காமல் போடமாட்டார்.. அவ்வளவு "கஞ்சன்"...
தமிழக முதலமைச்சராக பக்தவத்சலம் இருந்தபோது, அரசிடம் பணம் இல்லை கல்லூரிலாம் கட்டமுடியாது என்று கூறிவிட்டார். மாணவர்கள் பெரியாரை சந்தித்து,
"அய்யா எங்களுக்கென்று ஒரு கல்லூரி இல்லை..
ஜோசப் கல்லூரிக்குப் போனால், கிறிஸ்துவர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்..
ஜமால் முகமது கல்லூரிக்குப் போனால், இசுலாமியருக்குத்தான் முன்னுரிமை.. தேசியக் கல்லூரிக்குப் போனால், மேல்சாதியினருக்குத்தான் முன்னுரிமை"
"எனவே நீங்கள் எங்களுக்கு படிப்பதற்காக உதவவேண்டும்" என்று
"அனுராதா ரமணன்" என்ற ஒரு பெண் எழுத்தாளர், காஞ்சி "சங்கராச்சாரி" தன்னை தவறாக அணுகினான், அசிங்க அசிங்கமாய் "பாலியல் டார்ச்சர்" செய்தான் என்று எழுதிய போது "பார்ப்பனர்கள்" அன்றும் பாதிக்கப்பட்ட
பார்ப்பன பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பக்கம் நிற்கவில்லை.. மாறாக அயோக்கியத்தனம் செய்த சங்கராச்சாரி பக்கமே "நின்றது"...
எழுச்சியுடன் நடைபெற்று முடிந்த புதுச்சேரி "பெரியாரியல் பயிலரங்கம்"...
புதுச்சேரி - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "பெரியாரியல் பயிலரங்கம்" நேற்று 28/05/2023, ஞாயிறு 10 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு நிறைவு பெற்றது.
தந்தை பெரியார் தி.க புதுச்சேரி தலைவர் வீரமோகன் twitter.com/i/web/status/1…
தலைமையில், துணைத்தலைவர் ம.இளங்கோ, செயலாளர் செ.சுரேஷ் @periyar_suresh முன்னிலையில் நடைபெற்ற பயிலரங்கில் தந்தை பெரியார் தி.க பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பயிலரங்கை தொடங்கி வைத்தார். "சனாதனம் - வர்ணாசிரமம்" என்ற தலைப்பில் ஆய்வறிஞர் கருனானந்தன் அவர்களும், "சமூக
May 28, 2023 • 5 tweets • 1 min read
டி.எம்.சவுந்தர்ராஜன் நினைவு நாள்...
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னாள் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் மறைந்த டி.எம்.எஸ் அவர்களின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் நடிகர், இயக்குனர், இசைஅமைப்பாளர் திரு. டி.ராஜேந்தர் அவர்களைப்பற்றி பேசும்போது குறிப்பிட்ட செய்தி ஒன்றை உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.
"ஒரு தலை ராகம்" திரைப்படப் பாடல்கள் பதிவு செய்யும்போது முதல் பாடலாக ''என் கதை முடியும் நேரம் இது, என்பதை சொல்லும் ராகம் இது '' என்ற பாடலை பதிவு செய்ய தயாரானபோது, டி.ராஜேந்தரைப் பார்த்து டி .எம். எஸ் அவர்கள்,''தம்பி முதல் முதலா இசை அமைக்கறீங்க அபசகுனமான
May 22, 2023 • 6 tweets • 2 min read
சார்... "பெரியார் அண்ணா கலைஞர்"ன்னு பேசும் "திமுக"வில் ஜாதி...
ஒரே ஒரு நிமிஷம்... சார்...
எது.. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட்ட...
எது.. இந்தியாவிலேயே ஊரகப் பகுதிகளில் கூட அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் "பெரியார்_நினைவு சமத்துவபுரம்"
உருவாக்கிய...
எது... பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) ஓட்டு வங்கி பற்றி கவலைப்படாமல், "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)" என்ற பிரிவை உருவாக்கி தனி இடஒதுக்கீடு தந்த...
எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், "பழங்குடியினருக்கு" தனி இட ஒதுக்கீடு தந்த...
தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் 2 பெரிய சமூகங்களான "நாடார் சமுதாயமும், தேவர் சமுதாயமும்" 18 ஆம் நூற்றாண்டில், இந்து மத ஜாதியின் பெயரால் தங்களுக்குள் மோதி சிந்திய ரத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. ஏறக்குறைய நூறாண்டு
காலமாக அவர்களுக்குள் தீராத சண்டை நடந்து கொண்டிருந்தது. மன்னர்களைப் போலவோ, பாளையக்காரர்கள் போலவோ தங்கள் மண்ணை மீட்டெடுக்க நடந்த சண்டையல்ல அவைகள். இரு சமுதாயமும் இந்து மதத்தை பின்பற்றக் கூடியவர்கள்; இரு சமுதாயமும் ஏறத்தாழ ஒரே வாழ்க்கை முறையை கொண்டவர்கள். ஆனாலும் தங்களுக்குள்
May 20, 2023 • 4 tweets • 1 min read
"MBC/OBC மக்களே"..
உங்களுக்கு மண்டல் பரிந்துரையின்படி வி.பி.சிங் அரசால் 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அதை எதிர்த்து கிளர்ச்சி நடத்தியவர்கள் யார்..?
உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய 11 ஆயிரம் மருத்துவர் படிப்புகளை திருடி சென்றது யார்...?
MBC/OBC இடஒதுக்கீடு பெற
உச்ச நீதிமன்றம் வரை போராட வைப்பது யார்...?
ஐ ஐ டி/ ஐ ஐ எம் இன்னும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்கவிடாமல் தடுப்பது யார்...?
இவைகள் அனைத்துக்கும் ஒற்றை விடை "பார்ப்பனர் ஆதிக்க இனவெறி கும்பலே"அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பது பாஜக/ஆர்.எஸ்.எஸ்
1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், பாராளுமன்ற வாதியுமான 'தாமஸ் பாபிங்டன் மெக்காலே'. அவர் மூன்று
சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.
1)அனைத்துச் சாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும் கல்வி
2)அதுவரை பயிற்று மொழியாக இருந்த சமஸ்கிருதம், அரேபிய மொழிகளுக்கு மாற்றாக ஆங்கிலமே பயிற்று மொழி.
3)வேதம், சாஸ்திரங்களுக்கு மாற்றாகக் கணிதம், அறிவியல், பூகோளம் பாடங்களைக் கற்பித்தல்.
" ஆரியம் என்ற கலாச்சாரம் உழைப்புக்கு மதிப்பளிக்காது. உழைப்பாளிகளிடம் ஆசை காட்டியோ, அச்சமூட்டியோ பொருளைப் பறித்துச் சுகப்படுவதற்காக உள்ள ஒருமுறை!
இந்த முறை பெரும்பாலானவர்களின் உழைப்பைக் கொண்டு, ஒரு சிறு கூட்டம் வாழ்வதாக
அமைகிறது.
இந்தச் சுரண்டும் கூட்டம் ஒவ்வொரு காலத்தில் - ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமான பெயருடன் விளங்கும்.
கிரீசில் மாஸ்டர் (எஜமான்) என்றும், ரோமில் பெட்ரீஷியன் எனவும், பிரிட்டனில் பிரபுக்கள், பிரான்சில் ஐஸ்வர்யவான்கள், ஜப்பானில் சமுராய் என்று இவ்வண்ணம் பெயர்கள் இருந்தன.
May 3, 2023 • 4 tweets • 1 min read
தகுதி, திறமை - ஓர் மோசடி!
உலகின் முதல் வல்லரசு, பணக்கார நாடு, உலகை தனக்குகீழ் வைத்துள்ள நாடு, பெரிய பயங்கரவாதி, என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம், பிரின்சிடோஸ் பல்கலைக்கழகம், ஏல் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம்,
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் ஒடுக்கப்பட்ட இனமான கருப்பர்கள், ஹிஸ்பானிக்ஸ், செவ்விந்தியர்கள்(பூர்வகுடிகள்) மற்றும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த
Apr 26, 2023 • 7 tweets • 3 min read
#புத்தர் பார்ப்பனியத்தை வீழ்த்த இயக்கம் கட்டினார்,
புத்தருக்கு பிறகு "பார்ப்பனிய எதிர்ப்பு" சிந்தனை கொண்ட அனைவரும் இயக்கமாக திரண்டு போராடாமல், பாடல்கள் மூலமாகவும், எழுத்துக்கள் மூலமாகவும் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்தனர்.
ஆக, புத்தருக்கு பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த ஓர்
இயக்கம் இந்த 2000 வருடங்களாக இல்லாமல் போனது.
2000 வருடத்திற்கு பிறகு, அதே வரலாற்றுத் தொடர்ச்சி என்பது #பெரியார் அவர்களால் நம்மண்ணில் நிகழ்ந்தது.
புத்தர் கட்டிய #பெளத்தம் என்ற இயக்கமென்பது, புத்தரின் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகளில் #நாகார்ஜுனன் என்ற பார்ப்பனரின் ஊடுருவலால்,
Apr 26, 2023 • 5 tweets • 1 min read
"ஊரடங்கு" கற்றுத்தந்த பாடம்...
பல ஆண்கள் பரட்டைத் தலையும் தாடியுமாக இருக்கிறார்கள்.. "சலூன் கடைகள்" திறக்கப்படாததால்...
வீட்டுல திடீர்னு டேங்க் மோட்டார் ஓடல கொஞ்சம் வந்து சரிசெஞ்சு தர முடியுமா..? "எலக்ட்ரீசியன்களுக்கு" போன் செய்கிறார்கள்..
'பாத்ரூம்' ஏதோ அடச்சிக்கிட்டு
பைப் லீக் ஆகுது.. என்னனு வந்து பார்க்கறீங்களா..? "பிளம்பிங்" தொழிலாளர்களுக்கு அழைப்பு..
இன்னைக்கு ஏன் குப்பை எடுக்க "சுத்தம் செய்யும்" ஆட்கள் வரல..? என நீங்கள் நினைத்திருப்பீர்கள்..
காய்கறிக்கடைக்குப் போனப்போ "செருப்பு" பிஞ்சிருச்சி.. அதை தச்சிக்கொடுக்க மாட்டாங்களா என்று
Apr 23, 2023 • 16 tweets • 2 min read
"பேரறிஞர் அண்ணா"வும் சி.பா. ஆதித்தனாரும்!
அண்ணாவுடன் 27 ஆண்டுகள் பழகும் வாய்ப்புப் பெற்றவர் "கவிஞர் கருணானந்தம்". பெரியாரின் முழு முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவர், "அண்ணா சில நினைவலைகள்" என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அந்த நூலில் உள்ள முக்கியமான சம்பவம் இங்கே:
அண்ணா முதல்
அமைச்சராகி சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா வீட்டு மாடியில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன், “அண்ணா, ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டுவிட்டீர்களா என்று. கருணாநிதியும் வர