#தாய்மை_தந்தமை

மருத்துவமனையில் பிரசவத்திற்காக தன் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவித்துக்கொண்டிருந்தான் கணவன்.

வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம்

அந்த பெண்வீட்டார்கள் மகள் இறந்து விட்டாள் என்றே கூறிவிட்டார்கள்

துனைக்கு யாரும் இல்லாமலே தாய்க்கு தாயாக
இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து

இன்று இவ்வளவு தூரத்திற்க்கு அழைத்து வந்த அவனுக்கு இப்பொழுது சற்று பயமாகவே இருந்தது

ஒரு வருட காலமாக பேசாத அவன் அன்று அவன் தாய்க்கு போன் செய்கிறான்

அம்மா மருத்துவமனையில் யாரும் இன்றி அனாதையாக நிற்கிறேன் உள்ளே
அவள் வயிற்று பிள்ளையுடன் போராடுகிறாள்

ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லா அனாதையாக நிற்கிறேனம்மா...

கேட்ட அம்மா பதில் ஏதும் சொல்லாமல் அழுதவாரே கை பேசியை கீழே வைத்து விட்டு நிற்க

அவன் அப்பா யாரிடம் பேசினாய் என கேட்க அம்மா விபரத்தை சொன்னாள்
சிறிய மௌனத்திற்கு பிறகு உன் மகன் செய்த தவறுக்கு அந்த பெண் என்ன செய்யும்

நீ போய் பார்த்து விட்டு வா ஆனால் நான் செத்தாலும் அவன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்றார்

அம்மா கிளம்பி வெளியே போன சில நிமிடங்களில் மற்றும் ஒர் கைபேசி அழைப்பு வர அதை அப்பா எடுக்கிறார்
எதிரில் செல்ல மகனின் குரல்

அம்மா ஆண் குழந்தை பிறந்திருக்கிறதம்மா பார்ப்பதற்க்கு அப்பாவை போலவே உள்ளதம்மா

அப்பா பாக்க வருவாரா அம்மா மறு நொடி கைககள் நடுங்கி அப்பாவின் கண்கள் குளமாய் காட்சி அளித்து கரையையும் உடைத்து கொண்டு கண்ணீர் வர ஆரம்பித்தது
முகத்திலேயே விழிக்கமாட்டேன் என்ற அப்பா சட்டையை போட்டுக்கொண்டு அம்மாவை பின் தொடர்ந்தார்

யாராவது வருவார்களா தன் குழந்தையை பார்க்க என்ற ஏக்கத்தில் மகன் நிற்க

வாசலில் அம்மாவை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம் சிறு குழந்தை போல் அம்மாவின் கைககளை
பிடித்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்

பிறகு உள்ளே சென்று குழந்தையை கொஞ்சிய அம்மா பின்னால் வந்த அப்பாவை பார்க்கவில்லை

அவர் கதவருகே நின்று நடப்பதை பார்த்த வாரே தன்னை யாராவது அழைத்தவுடன் போகலாம் என இருந்தார்..

அப்போது மயக்கத்தில் இருந்த மருமகள்
கண் விழித்து கணவரின் அம்மாவை பார்த்து ஆணந்த கண்ணீர் வடித்தார்

அவள் அந்த அம்மாவின் கைககளை பிடித்தவாரே ஒரு வார்த்தை சொன்னாள்

இதோ இப்பொழுது பிறந்திருக்கிறதே என் குழந்தை இது எப்படி வளருமோ எவ்வாறு நடக்குமோ அது எனக்கு தெரியாது ஆனால்
நீங்கள் பெற்ற குழந்தை போல் இனி ஒரு குழந்தை எனக்கு கிடைக்காது

அப்படி என்னை பார்த்து கொண்டார் என்றவுடன் தாய் தன் மகனை பெற்ற பலனை அடைந்தாள்

பிறகு ஏன் மாமா வரவில்லையா என கேட்க

வாசலில் நின்றவருக்கு கால்கள் தன்னையும் மீறி உள்ளே ஓடப்பார்த்தது

அவள் கணவனிடம் கேட்டாள்
அம்மாவுக்கு தான் உங்களை மிகவும் பிடிக்குமா

அப்பாவுக்கு பிடிக்காதா என்றவுடன்

அப்பா மகன் என்ன சொல்வான் என பார்க்க

மகன் சொன்னான் அம்மா சிறு வயதில் நான் நடந்து செல்லும் போது வழியில் சிறு பள்ளம் வந்தால்

பயந்து போய் என்னை இடுப்பில் தூக்கி வைத்து கொள்வார்கள் ஆனால் என் அப்பாவோ
என் கைககளை பிடித்து கொண்டு மகனே நான் இருக்கேன்டா தான்டுடா இந்த பள்ளத்தை என்பார்

அவர் காட்டிய தைரியம் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது என்றதும் கேட்ட

அப்பா ஓடி வந்து மகனை கட்டி பிடித்து அழ ஆரம்பிக்க அவர்களை பார்த்து அனைவரும் அழ
அங்கே ஆணந்த கண்ணீர் அற்புதமாய் கரை புரன்டோடியது......

அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் பிள்ளைகளை ஏமாற்றியதில்லை...

மாறாக ஒரு சில மகன்களால் ஏமார்ந்தவர்களே...

மனிதநேயமும் சிறந்த வாழ்வியலும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Aug 10
பாரிமுனையிலிருந்து ராயப்பேட்டை செல்வதற்கு அந்த ஆட்டோக்காரர் ₹150 கேட்டார்.

நான் ₹100ல் இருந்தேன். பிறகு ₹120க்கு உடன்பட்டு, கிளம்பி மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த போது

அவர் சட்டென்று வேகத்தைக் குறைத்து நடைபாதையோரத்தில்
ஆட்டோவை நிறுத்தியபோதுதான் அங்கே வெயில் சூடு உறைக்காமல் ஒருவன் விழுந்து கிடப்பதை கவனித்தேன்.

குடித்துவிட்டு விழுந்திருக்கிறான் என்று நினைத்தேன்.

இல்லையென்று பிறகு தெரிந்தது.
ஆட்டோ டிரைவர் என்னிடம் "உங்க பின்னால மீல்ஸ் பாக்கெட் இருக்கும்,
அதை எடுங்க சார்" என்றார்.

சீட்டுக்குப் பின்னால் இருந்த அந்த சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு அவனிடம் சென்று தட்டி எழுப்பினார்.

அவன் எழவில்லை. மீண்டும் ஆட்டோவுக்கு வந்து அவருடைய இருக்கைக்கு பின்னாலிருந்து
Read 8 tweets
Aug 10
_*நீ அழுதபோது..*_

_*உன்னை*_ _*தரதரவென்று*_
_*இழுத்துப் போய்*_
_*பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன்...!*_

படித்து பெரிய ஆளாக
வர வேண்டும் என்ற எண்ணத்தில்...!

இன்று...!

நான் அழுகிறேன் என்னை இழுத்துப்போய்
முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று....?
பத்துமாதம் உன்னை
வயிற்றில் சுமந்தபோது
பாரமாக
நான் நினைக்கவில்லை...!

உன் பத்தினி வந்ததும்
உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
இருப்பதையே....
நீ பாரமாக நினைக்கிறாயே...!

நீ ஓடி ஓடி விளையாடிய போது
நீ செல்லும் இடமெல்லாம்
உன் பின்னாலே வந்து
உனக்கு சோறு ஊட்டி
உன் வயிறு நிறைந்ததில் என் வயிறும் மனமும் நிறைந்தது...!

எனக்கு வயிறாற
உணவு வேண்டாம்..
ஒரு வேளையானலும்
உன் வீட்டு சோறு போதும்...!

உன் வருங்காலத்திற்காக உன்னை பெற்று வளர்த்து
படிக்க வைத்து,
கல்யாணம் முடித்து
நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்....
Read 5 tweets
Aug 10
ராம நாமத்தால் வந்த மதிப்பு...!

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். Image
விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர்.

வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். Image
நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.

யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. Image
Read 14 tweets
Aug 10
🍀⭕ இந்தியர்கள் தேவையில்லாமல் எங்கள் வழியில் குறுக்கிடுகிறார்கள் -- புலம்பும் சீனா.

இது எப்படி இருக்கிறது....⁉️

சீனா அமெரிக்க இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தைவான் நீரிணை பகுதியில் தனது போர் ஒத்திகையை மேற்கொண்டு வரும் சீனா, ImageImageImageImage
அதன் ஓர் பகுதியாக இலங்கையில் தனது கட்டுப்பாட்டுக்குள் வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது உளவு கப்பல் ஒன்றை நிறுத்தி வைக்க ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டது. ஏற்கனவே தைவான் விஷயம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த இந்தியா
இந்த விஷயத்திலும் பேசாமல் தான் இருந்தது. ஆனால் திரை மறைவில் காரியங்கள் வேக வேகமாக நடந்தது.

இலங்கை அரசாங்கத்தை விட்டு சீன கப்பலுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல வைத்தது. எங்கோ தென் சீனக் பசிபிக் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த
Read 25 tweets
Aug 10
நிதீஷ்குமார் கூட்டணியை உடைக்கிபோகிறார் என்பதோ
கூட்டணி முறியும் என்பதோ தெரியாமலா பாஜக தலைமை இருந்திருக்கும்.

தெரிந்தவுடன் அழைத்து பேசவில்லையே ஏன்?
பாஜக தலைவர்களுக்கு நேரத்தை செலவிட அருமையாக பயிற்சி தந்து திட்டமும் தீட்டி தரும் தலைமைக்கு நிதீஷை அழைத்து பேசியிருக்கமுடியாதா? Image
கடைசியாக நிதிஷை பாஜக தலைவர்கள் எப்போது சந்தித்தார்கள்?

மத்தியிலே இருந்த அமைச்சருக்கு திரும்பவும் ராஜ்யசபா இடம் தராதது உட்பட பல அறிகுறிகளை நிதீஷ் காட்டிய போதும் ஏன் பாஜக தலைமை கண்டுகொள்ளாமலே இருந்தது?

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் கடைசியாக எப்போது நடந்தது? Image
இதெல்லாம் சொல்லுவது ஒன்றே ஒன்று தான்.

இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொள்ளாத கட்சிகளுடன் பாஜக கூட்டணி இருக்காது.

அகாலிதளமும் சந்திரபாபு நாயுடுவும் திரும்ப வருகிறோம் என சொன்னபோதும் பாஜக ஏற்கவில்லை.

உண்மையான சிவசேனாவை விட்டால் பாஜக கூட்டணியிலே பெரியகட்சிகள் ஏதுமில்லை. Image
Read 5 tweets
Aug 9
வெய்ட் அதிகமா இருக்கு சார், எதாவது மருந்து குடுங்க...

மருந்து வேணாம், வாக்கிங் போங்க...

ஓகே சார்... எட்டு போட்டு நடக்கவா சார்...

நேராவே நடக்கலாம்.

எட்டு போட்டா நல்லதுன்னு சொன்னாங்க...

சரி நடங்க...

மொட்டை மாடில நடக்கலாமா...

நடக்கலாம்.
மொட்டை மாடில ஓடு ஒட்டிருக்கோம் அதான்.

அதனால என்ன?!

போன வருஷம் நடந்தப்போ குதிகால் வலி வந்துச்சு அதான்...

நடக்காமலே இருந்துட்டு புதுசா நடந்தா வலிக்கும். ஒரு வாரத்துல பழகிடும், நடங்க.

எவ்ளோ நேரம் நடக்கலாம் சார்...

30 நிமிஷம் ஆரம்பிங்க.., போக போக கூட்டிக்கலாம்.
ஷூ போட்டுக்கவா

போட்டுக்கோங்க..

என்ன ஷூ வாங்கலாம்..?

பேட்டா வாங்குங்க..!

ஷூ போட்டா முட்டி வலிக்காதா?

வலிச்சா சொல்லுங்க, பாத்துக்கலாம்.

சரி, தொடர்ச்சியா மொட்டை மாடியை ரவுண்ட் அடிச்சா தலை சுத்தாதா..?

சுத்துனா சொல்லுங்க, மருந்து தாறேன்.

இல்ல, பார்க்ல வாக்கிங் போலாமா...
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(