Stem-cells மூலம் என்ன நோய்கள் மற்றும் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும்?
Stem cells உடலின் மூல செல்கள் ஆகும், இதிலிருந்து சிறப்பு செயல்பாடுகளைக் கொண்ட மற்ற அனைத்து செல்கள் உருவாக்கப்படுகின்றன.
Stem cells therapy என்பது உடலில் உள்ள சேதமடைந்த செல்களை சரிசெய்ய வடிவமைக்கப்பட்ட மீளுருவாக்கம் செய்யும் மருத்துவத்தின் ஒரு வடிவமாகும்.பல சந்தர்ப்பங்களில், ஸ்டெம் செல் சிகிச்சையானது நோயாளிகளின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கலாம் மற்றும் நோய் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம்.
ஸ்டெம் செல்கள் மனித உடலில் பல்வேறு வகைகளில் வழங்கப்படலாம்;
1) IV ஸ்டெம் செல் சிகிச்சை (நரம்புகள் வழியாக),
2) நேரடியாக முதுகெலும்புக்குள்,
3) பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊசி போடுதல் (முழங்கால், இடுப்பு, கைகள் போன்றவை)
பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது இரத்தம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் நோய்கள் மற்றும் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க இரத்த ஸ்டெம் செல்களை மாற்றுவது அல்லது குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கான சிகிச்சையின் பின்னர் இரத்த அமைப்பை மீட்டெடுப்பதாகும்.
chemical burn போன்ற காயத்திற்குப் பிறகு Cornea சேதத்தை சரிசெய்ய ஒரு புதிய ஸ்டெம் செல் அடிப்படையிலான சிகிச்சை சமீபத்தில் Europe-il ஒப்புதல் பெற்றது.Stem cells உள்ளடக்கிய பல மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன அல்லது முடிக்கப்பட்டுள்ளன. முக்கிய ஆய்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன
1) நீரிழிவு நோய்
2)பார்கின்சன் நோய், ஹண்டிங்டன் நோய் மற்றும் மோட்டார் நியூரான் நோய் போன்ற நரம்பியல் நிலைமைகள்
3)முதுகுத் தண்டு காயம்
4)இதயம் தொடர்பான குறைபாடுகள்
முன்னர் குணப்படுத்த முடியாத நரம்பியக்கடத்தல் நோய்கள் இப்போது மேம்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். மீளுருவாக்கம் செய்யும் மருத்துவம் மற்றும் அதன் பலன்கள் மனித ஆயுளை நீடிப்பதற்கு முக்கியமாக இருக்கலாம்.
ORS சர்ச்சை - 8 வருட வலி மிகுந்த சட்ட போராட்டம் #thilli_info
ORS = Oral Rehydration Solution. அதாவது உடல் dehydrate ஆகாமல் தடுக்க, Dr.Dhilip என்பவர் 1971ஆம் ஆண்டு Bangladeshல் கண்டுபிடித்து, பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றியது.WHO ஏற்கும் ORS வடிவமைப்பில் sodium chloride, glucose
anhydrous, potassium chloride, trisodium citrate dihydrate ஆகியவை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து இருக்க வேண்டும். இந்த Glucose-உப்பு அளவு எக்காரணமும் கொண்டு மாற்ற கூடாது. மாறாக, அதிக sugar சேர்த்தால், cellகளின் நீரை உரிந்து, இன்னும் அதிக dehydration உண்டாகும்.
“ORS” என்ற பெயரில் உள்ள பல பானங்கள் WHO வடிவமைப்பைவிட 10மடங்கு அதிகமான சர்க்கரை கொண்டுள்ளது.உண்மையான ORSல் 13.5gm glucose உள்ளதால், சில பானங்களில் 110-120gm சர்க்கரை உள்ளது.இந்தியாவில் குழந்தைகள் இறப்புகளில் 13% Dehydration காரணமாக உள்ளது.உண்மையான ORS சிகிச்சை பெறும் குழந்தைகள்
புறாக்கள் அமைதியின் அடையாளமாகக் கூறப்படுகின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் நகரப் பகுதிகளில் இவை அதிகமாக வளர்ந்துள்ளதால், அதன் கழிவுகள் மற்றும் இறகுகள் மனிதர்களின் சுவாசக் குழாய்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
புறாக்களின் உதிர்ந்த இறகுகள் மற்றும் உலரும் கழிவுகள் காற்றில் கலந்து நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகின்றன. இது மருத்துவத்தில் Hypersensitivity pneumonitis என்று அழைக்கப்படுகிறது. மருத்துவர் குழுக்கள் தெரிவிப்பதாவது, வீடுகளின் மாடிகளில் புறாக்களுக்கு உணவளிப்பது.
அல்லது கூடு அமைக்க அனுமதிப்பது நுரையீரல் பாதிப்புக்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.இந்த நிலை சுவாசக்குறைவு, இருமல், மார்புவலி, மற்றும் தொடர்ச்சியான களைப்பு போன்ற அறிகுறிகளை உருவாக்குகிறது. அதிகப்படியான பாதிப்பு நிலைகளில் நுரையீரல் திசுக்கள் நிரந்தர சேதமடையக்கூடும்.
மதிப்பிற்குரிய முதல்வர் @mkstalin ஐயா அவர்களே,
சமீபகாலமாக தெருநாய்கள் பிரச்சனை குறித்து பல awareness-threads எழுதி வருகிறேன்.சமீபத்தில் நீங்களும் இந்த தெருநாய் பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.ஆனால் அவைஅனைத்தும் longterm solutions
என்னதான் தடுப்பூசி போட்டு,sterilize பண்ணாலும் கூட அந்த நாய்களை எந்த தெருவில் இருந்து எடுத்துச் சென்றார்களோ, மறுபடியும் அதே தெருவில் விடுவது தான் ABC சட்டம்.எனவே,அந்த நாய்கள் குழந்தைகளை மீண்டும் தாக்குவது உறுதி.சமீப காலமாக ராபீஸ் வந்து இறந்து போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
Rabies விட மோசமான ஒரு நோயை இந்த உலகம் பார்த்திருக்காது🙏. பிற நோய்கள் மனிதனை மனிதாய் வைத்து சாகடிக்கும் ஆனால் Rabies மனிதனை மிருகமாக்கி துடிக்கத் துடிக்க சாகடிக்கும் 🥹. தற்போது, இந்த நோயால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான்.
எல்லா விலங்கு கடிகளும் ரேபிஸ் நோய் தாக்கக்கூடியது-எலி போன்ற Rodents தவிர சில காட்டு எலிகள் கடித்தாலும் ரேபிஸ்தடுப்பூசி போடுவது அவசியம்.நாய்க்கடி 3 கேடகரியில் இருக்கும்.எந்த கேடகிரியில் இருக்கு என்பது பொறுத்து வைத்தியம் இருக்கும்.
Cat 1- skin intact
Cat 2- minor scratches without bleeding
Cat 3- scratches/bites with bleeding
ஒரு சின்ன ஸ்கரேட்ச் + லைட்டா ஒரு பொட்டு ரத்தம் வந்தாலும் அது cat 3 சேரும்.
முதலில் கடிபட்ட இடத்தை அட்லீஸ்ட் 15mins ஓடும் தண்ணீர்/டேப் வாட்டரில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
Cat 3 கடிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி கூட சேர்ந்து ரேபிஸ் Immunoglobulin அல்லது monoclonal antibodies சேர்ந்து குடுப்பது அவசியம்.
ரேபிஸ் தடுப்பூசி antibody ரெஸ்பான்ஸ் உண்டுபண்ண 10-14 நாட்கள் தேவைப்படும். இடைப்பட்ட காலத்துல இந்த ரேபிஸ் இம்முனோக்ளோபின் தான் ரேபிஸ் வராம உடனே தடுக்கும்
பல வைரஸ்கள் மனிதனை தாக்கினாலும், அவற்றில் ஒரு சில வைரஸ்கள் நம் உயிரை பறிக்கும் ஆற்றல் உள்ளது. அப்படி பட்ட ஒரு மிக மோசமான வைரஸ்தான் இந்த RABIES. இந்த VIRUS பற்றி 1000 வருடங்களுக்கு முன்னரே பல சரித்திர ஏடுகளில் எழுதி வைக்க பட்டுள்ளது. பக்கத்து வீட்டு நாய் கடிச்சத பெற்றோரிடம் மறைத்த குழந்தை, RABIES நோயினால் பாதிக்கபட்டு, அந்த அப்பாவின் மடியில் துடித்து இறந்தான். Sensitive and disturbing video.
இந்த RABIES virus பெரும்பாலும், பாதிக்க பட்ட மிருகங்களிடமிருந்து(வௌவால்கள், நாயிகள், பூனைகள், நரிகள், etc.,) மனிதர்களுக்கு வருகிறது. இந்தியாவில் வருடத்திற்கு 20,000 இறப்புகள் இந்த RABIES virusஆல் நிகழ்கிறது. அதிலும் குழந்தைகள்தான் மிக அதிகம். இந்த virus பாதிக்க பட்ட நாய் ஒருத்தரை கடிக்கும் பட்ச்சத்தில், அந்த virus நம் திசுக்களில் புகுந்து பெருகி, பின்பு நம் மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) மூலமாக, மூளையே சென்று அடைகிறது.
அப்படி பரவும் பட்சத்தில் அந்த நபர் மனித இயல்பை மீறி, நாயின் குணாதிசயங்கள் பெற்று கிட்ட தட்ட நாயாக மாறி துடிச்சு துடிச்சு மடிந்து போவார்.Hydrophobia - ஒருவர் தண்ணீரை கண்டாலே அதிர்ந்து போகுவார்.தன் எச்சில் கூட அவரால் விழுங்க முடியாமல், வாய் முழுக்க நுரை தள்ளி பரிதாபமாக இறப்பார். அவ்வாரு இறந்த நபரின் சடலத்தை சட்டப்படி hospitalலிருந்து தகனம் செய்யபடும். ஏனனில், பாதிக்க பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கும் அது 100% பரவும். Hydrophobia symptoms வெளி படும் பட்ச்சத்தில், அந்த நபரை யாராலும் காப்பாற்ற முடியாது. Rabies நோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் ஒரு glass தண்ணீர் குடிக்க எவ்வளவு துடிக்கிறான் பாருங்க. Unfortunately, he is no more.sensitive and disturbing video.
#thilli_info
காலையில் இருந்து #covidshield குறித்து பல செய்திகள் நம் TL சுற்றுவதை நாம் பார்க்க முடிகிறது. தடுப்பூசியால் வெகு சிலருக்கு (லட்சத்தில் எவரேனும் ஒருவருக்கு) பாதிப்பு வரலாம், அதுவும் ஊசி போடபட்ட 5-30 நாட்களுக்குள் வரலாம். அப்படி வந்தவர்களுக்கும் முறையாக சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. 2-3 மூன்று வருடங்களுக்கு முன் போடபட்ட ஊசியால், இவ்வளோ வருடம் கழித்து இரத்தம் கட்டாது. ஒரு சில ஊடகங்கள், அரைவேக்காடுதனமா தலைப்பு போட்டு, மக்களுக்குள் பயத்தை விதைக்கிரார்கள். அறிவியிலிலும், மருத்துவத்தில் அரசியல், மதம், இனம் கலக்க கூடாது. health.gov.au/our-work/covid…
உடல் நல குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். Self- medication முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஊடகங்கள் பொறுப்போடு தலைப்பு செய்திகளை பகிர வேண்டும்.
எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ncbi.nlm.nih.gov/pmc/articles/P…