*பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?*
சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது.
அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற
பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள்.
இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
*கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?*
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே!
அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது
பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்?
ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம்.
ஆனால், அப்படி யாரும்
கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது.
அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை.
இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த
தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம்.
அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு.
அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’
என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும்.
இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்........!!*
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
*திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.*
🇮🇳🙏1
*திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். ஆயிரம் கண் உடையவள் என்பதால் இந்த அம்மன் ‘ஆயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.*
🇮🇳🙏2
*பல்லாண்டு காலத்திற்கு முன்பு இந்த அம்மன், பட்டாளத்து லயனில் (தற்போது உள்ள சமாதானபுரம்) ஒரு ஓலைக்குடிசையில் குடிகொண்டு இருந்தாள்.*
*அப்போது இந்தப் பகுதியில் கொடிய தொற்று நோய் பரவியது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் பீதியடைந்தனர்.*
உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
🙏🇮🇳1
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.
🙏🇮🇳2
இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.
(சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு தன் நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹா பெரியவா)
குருநாதன் முகத்தில் குறும்பு நகை. விளையாட்டுப் பிள்ளை போல் கண்களில் ஓர் ஒளி. எதிரே இருந்தவரிடம் கேட்கிறார்; "இப்போ இங்கே இருந்து போறானே, அவன் பேர் என்ன?"
ஏன் என்று புரியாமல் அடியார் விழிக்கிறார். அவரை விழிக்க விட்டு சிறிது வேடிக்கை பார்த்த பின் பெரியவாள் சொல்கிறார். "திருக்கண்டன்-னு
சொன்னாத்தான் ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்வர்."
சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத் தில் ஆடித்தபசு விழா கொண்டா டப்படுகிறது.
🙏🇮🇳1
கோமதி அம்மன் ஊசிமுனையில் ஒற்றை காலில் தவம் இருக்கிறாள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு. யாருக்காக இந்த தவம் இத்தனை பக்தியோடுஅம்மன் தவம் இருப்பதே அண்ணன் நாராயணரும் கணவர் சங்கரரும் ஒருவரே என்பதே உலகிற்கு உணர்த்துவதற்காகத்தான்.
🙏🇮🇳2
சங்கரநாராயணர் திருக்கோவில்
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கர நாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித் ததை நினைவு கூரும் வகையில் ஆடி மாத த்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயம் துளசிதாசர் காசியில்,
கங்கையில் நீராடி விட்டு
விஸ்வநாதரை தரிசித்தார்.
விஸ்வநாதர் கருணை காட்டுவார்
என்று காத்திருந்தார்.
ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில்உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார்.
ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறிஅக்கரைக்கு சென்று கங்கையில் நீர்
எடுத்துக் கொண்டு வெகுதூரம்
சென்று ஒரு காட்டில் காலைக்கடன்களை கழிப்பார். பின் உடம்பைசுத்தம் செய்து கொண்டுமீதியுள்ள தண்ணீரை ஒருஆலமரத்தில் கொட்டி விடுவார்.
அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்தஆவி ஒன்று வசித்து வந்தது. அதுஅந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கிஒருவாறு அமைதி கிடைத்தது.
இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்துகொண்டது.