🍀⭕ இந்தியர்கள் தேவையில்லாமல் எங்கள் வழியில் குறுக்கிடுகிறார்கள் -- புலம்பும் சீனா.
இது எப்படி இருக்கிறது....⁉️
சீனா அமெரிக்க இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தைவான் நீரிணை பகுதியில் தனது போர் ஒத்திகையை மேற்கொண்டு வரும் சீனா,
அதன் ஓர் பகுதியாக இலங்கையில் தனது கட்டுப்பாட்டுக்குள் வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது உளவு கப்பல் ஒன்றை நிறுத்தி வைக்க ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டது. ஏற்கனவே தைவான் விஷயம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த இந்தியா
இந்த விஷயத்திலும் பேசாமல் தான் இருந்தது. ஆனால் திரை மறைவில் காரியங்கள் வேக வேகமாக நடந்தது.
இலங்கை அரசாங்கத்தை விட்டு சீன கப்பலுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல வைத்தது. எங்கோ தென் சீனக் பசிபிக் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த
அமெரிக்காவின் ராணுவ கப்பல் ஒன்றை பழுது நீக்கம் என்கிற பெயரில் நம் சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைக்க அனுமதி அளித்தது.
தெற்காசிய பசபிக் நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டு கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி ப்ளிக்கன்
சீனாவின் வெளியுறவுத் துறை செயலர் வாங் லீ நம் இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு சுப்பிரமணியன் ஜெய்சங்கர் கலந்து கொண்ட போது இது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் சீன வெளியுறவு துறை செயலர் வாங் லீ
தாங்கள் எப்போதும் இந்திய நலன்களை மதிப்பதாக உறுதி அளித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இத்தனை களேபரத்திற்கும் நடுவில் இந்தோ திபெத் பிராந்தியத்திலும் சரி, சிக்கிம் அருணாசல பிரதேசத்திலும் சரி... தனது படை பலத்தை
இந்திய அரசு அதிகரித்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. HAL நிறுவன தயாரிப்பான இலகு ரக ஹெலிகாப்டர்களான துருவ்வை கொண்ட பாட்டாலியன் ஒன்றை புதியதாக நிறுவி இருக்கிறது நம் இந்திய அரசு. அதுபோக இந்த உலகின் அதி நவீன இலகு ரக தேஜாஸ் விமானங்களை கொண்ட
பாட்டாலியனும் அந்த பிராந்தியத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு அமெரிக்காவுடன் இணைந்த போர் பயிற்சி ஒத்திகையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவையெல்லாம் சேர்த்து சீனாவிற்கு கிலி ஏற்படுத்தி உள்ளது என்பதை அப்பட்டமாக தெரிகிறது.
தற்போது அவர்கள் வாய் விட்டு புலம்பவே ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஊம குசும்பு மாத்திரம் குறையவேயில்லை.
இலங்கை மீது நம் இந்திய அரசு தேவையில்லாத அழுத்தம் கொடுப்பதாக புலம்பும் அவர்கள்..... அதே இலங்கையை விட்டு ஷாங்காயில் இருந்து
மலேசியா சிங்கப்பூரில் போர் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கும் பாகிஸ்தான் கப்பற்படையை சேர்ந்த கப்பலான #தைமூர் எனும் பெயர் கொண்ட கப்பல் ஒன்றை வரும் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த முடிவு செய்து இருப்பதாக
அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். தாக்குதல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்த கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் நிரப்ப நிறுத்த இருப்பதாக சொன்னாலும் இதன் பின்னணியில் வேறோர் திட்டமிடலும் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தியா உளவு கப்பல் வருவதற்கு தடைவிதித்ததற்காகவே
இந்த நடவடிக்கை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.....
ஆனாலும் நம்மவர்களின் செயல்பாடுகளிலும் கொஞ்சம் விவகாரமான விஷயம் உள்ளூர ஓடிக் கொண்டிருக்கிறது.
சீனாவின் யுவான் சுவாங் உளவு கப்பல் இந்திய கடல் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் என்றால்.....
அதே குணாம்சம் கொண்ட அமெரிக்க கப்பலான சார்லஸ் ட்ரூ டெக்கினால் இல்லையா..... என்கிற ரீதியிலான கேள்வி எழுவது இயல்பே.
இப்பொழுது பாகிஸ்தானின் நடுத்தர போர் கப்பல் ஒன்று ஏவுகணைகளோடு இலங்கை துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்ப என புருடா விட்டு கொண்டு வர இருக்கிறது.
அதுவும் சொல்லி வைத்தார் போல இந்திய 75 ஆம் ஆண்டு சுதந்திர கொண்டாட்ட நிகழ்வுகளை ஒட்டியே வருகிறது.
மேலோட்டமாக பார்த்தால் ஏதோ ஒன்று நெருடலாக இருந்தாலும் இந்த இத்தனை நகர்வுகளுக்கு பின்பும் நம்மவர்களின் நுட்பமான
காய் நகர்த்தல் ஒன்றும் இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்........
ஏற்கனவே சென்னையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பலை வைத்து கொண்டே வரவிருக்கும் பாகிஸ்தானிய கடற்படை கப்பலான தைமூரை தொழில்நுட்ப ரீதியாக கொஞ்சம் போலும் பதம் பார்க்க இருக்கிறார்கள்.
பொதுவாக கப்பல்களில் தகவல் தொடர்பு சாதனங்கள் உயர் ரக ட்ரான்ஸ்மீட்டர்கள் மற்றும் ட்ரான்ஸ்பாண்டர்களுடன் செயற்கை கோள்களினால் நேரிடையாக இணைக்கப்பட்டு இருக்கும். இதனூடாகவே தகவல் பரிமாற்றங்களும் கண்காணிப்பு ரேடார் சாதனங்களும் இயங்குகின்றன.
ஒவ்வொரு கப்பலும் ஓர் குறிப்பிட்ட அலைவரிசையில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும். இதற்கான அலைக்கற்றைகளை தடம் பிடித்து இடைமறிக்கும் அதி நவீன தொழில்நுட்ப மின்னணு சாதனங்கள் எல்லாம் வந்து விட்டது இதனை டிஸ்டிலேட்டர் ப்ரீக்வென்ஸி ஹாஸிலேட்டர் மூலம்
கண்டறிய முடியும் என்ற போதிலும் நம்மவர்கள் இதில் இன்னமும் மேம்பட்ட தொழில்நுட்ப பண்புகளை கட்டமைத்து இருக்கிறார்கள். ((( பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கு இவை குறித்து மேம்போக்காக எழுதப் படுகிறது.....)))) அதில் வெற்றிகரமாக இயங்கவும் செய்கிறார்கள்.
இதன் மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ளே வரும் கப்பல்களுக்கு என்ன விதமான தகவல்கள் போக வேண்டும் என்பதையும் நம்மவர்கள் தான் தீர்மானிக்க போகிறார்கள். சரியாக சொன்னால் மற்றவர்களால் கப்பல்களுக்கு வரும் தகவல்களை இடைமறித்து பெற முடியும் என்றால்........
நம்மவர்களால் அந்த கப்பல்களுக்கு எந்த மாதிரியான தகவல்கள் போக வேண்டும் என்பதையும் இந்த பிராந்தியத்தில் அந்த கப்பல் இருக்கும் வரை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.
இவற்றை எல்லாம் கொண்டு ஒரு லைவ் டெமோ காண்பிக்க இருப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது நம் இந்திய துறைமுகத்தில்
அமெரிக்க ராணுவ கப்பலை வைத்துக் கொண்டே சீன தொடர்புடைய கப்பல்களுக்கு ஒரு வகுப்பறை பாடம் எடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.கிட்டதட்ட அமெரிக்காவுக்கும் மறைமுகமாக தகவல் ஒன்றை தெரியப்படுத்தவும் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்....
இந்திய பிராந்தியத்தில் மற்றவர்களின் உதவிக்காக....
#கை-யேந்தி நிற்க..... இயங்க இது ஒன்றும் பழைய இந்தியா அல்ல.... தேர்ந்த வல்லுனர்களை கொண்ட ..... தொழில்நுட்ப திறன் படைத்த இளம் தலைமுறையினரை கொண்ட புதிய இந்தியா என்பதை வெளிப்படையாக தெரியும் வண்ணம் செயலில் காண்பிக்க இருப்பதாக சொல்கிறார்கள்.
திறன்கள் வெளிப்படும் சமயத்தில் தான் அதன் தீட்சிண்ணியம் புரிய வரும் என்பது கோட்பாடு..... அதனை மெய்ப்பிக்க இருக்கிறார்கள் நம்மவர்கள். இந்த இடத்தை மற்றவர்கள் எட்டிப் பிடிக்க இரண்டு மூன்று ஆண்டுகளாவது ஆகும் என்கிற போது நாம் எந்த அளவுக்கு
இந்த இடத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறோம் என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இந்த உலகிலேயே மிக பெரிய கப்பற் படையை கொண்டு இருக்கும் சீனாவிற்கும்..... இந்த உலகிலேயே மிக பெரிய போர் கப்பல்களை கொண்டு இருக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாக செய்தி சொல்லப்பட்டிகிறது.
உலகிலேயே நீலக் கடல் அந்தஸ்து கொண்டு இரண்டு நாடுகளில் ஒன்றான நம் இந்தியா நிஜத்திலும் அதனை..... அதாவது இந்திய பெருங்கடலை கட்டி ஆள்கிறது என்பதை வரும் நாட்களில் நிரூபிக்க இருக்கிறார்கள்.
💓 ஜெய் ஹிந்த்.
வந்தே மாதரம்
பாரதம் எங்கள் ஸ்வாசம்
நன்றி ஶ்ரீராம் முகநூல்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நிதீஷ்குமார் கூட்டணியை உடைக்கிபோகிறார் என்பதோ
கூட்டணி முறியும் என்பதோ தெரியாமலா பாஜக தலைமை இருந்திருக்கும்.
தெரிந்தவுடன் அழைத்து பேசவில்லையே ஏன்?
பாஜக தலைவர்களுக்கு நேரத்தை செலவிட அருமையாக பயிற்சி தந்து திட்டமும் தீட்டி தரும் தலைமைக்கு நிதீஷை அழைத்து பேசியிருக்கமுடியாதா?
கடைசியாக நிதிஷை பாஜக தலைவர்கள் எப்போது சந்தித்தார்கள்?
மத்தியிலே இருந்த அமைச்சருக்கு திரும்பவும் ராஜ்யசபா இடம் தராதது உட்பட பல அறிகுறிகளை நிதீஷ் காட்டிய போதும் ஏன் பாஜக தலைமை கண்டுகொள்ளாமலே இருந்தது?
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் கடைசியாக எப்போது நடந்தது?
இதெல்லாம் சொல்லுவது ஒன்றே ஒன்று தான்.
இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொள்ளாத கட்சிகளுடன் பாஜக கூட்டணி இருக்காது.
அகாலிதளமும் சந்திரபாபு நாயுடுவும் திரும்ப வருகிறோம் என சொன்னபோதும் பாஜக ஏற்கவில்லை.
உண்மையான சிவசேனாவை விட்டால் பாஜக கூட்டணியிலே பெரியகட்சிகள் ஏதுமில்லை.