இன்றைய நாளில் பிறந்த
பிடல் காஸ்ட்ரோ, கியூபா புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி. கியூபாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் 49 ஆண்டுகள் பணியாற்றினார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 1/n
634 முறை பலரும் பலவிதம் முயற்சித்தனர். அத்தனையும் முறியடித்து வெற்றி பெற்ற, பிடல் காஸ்ட்ரோ
❤️ 96% மக்களை கல்வியை பெற வைத்தார். 60% பெண்கள் கல்வி பெற்றனர்.
❤️ மகப்பேறு இறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கும் நாடாக்கினார்.
❤️ எழுத்தறிவு இயக்கத்தை ஏற்படுத்தி அதன் முழக்கமாக
2/n
"தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்"
❤️ இதன் பயனாக 30% இருந்த எழுத படிக்க தெரிந்தோர் விகிதம் ஒரே ஆண்டில் 98% ஆக உயர்ந்தது.
❤️அனைவருக்கும் இலவச கல்வி அரசே வழங்கியது.
❤️ 14 வயதில் தனது சகோதரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து அரசியல்
3/n
களம் கண்ட சிறுவன் அந்த நாட்டின் பொற்காலத்தை தனது சிந்தனையால் மாற்றினான்..
❤️ உலகின் மிக நீண்ட கால தலைமை பொறுப்பை வகித்த தலைவன் (46 ஆண்டு பதவி)
❤️ நவம்பர் 1956இல் ஃபிடல், ராவுல், சேகுவேரா உள்ளிட்ட 81 போராளிகள், 12 பேர் மட்டுமே பயணிக்க உகந்த கிரான்மா
எனும் சிறிய படகில் புரட்சியில் ஈடுபட மெக்சிகோவில் இருந்து கியூபா திரும்பினர். 1959இல் கியூப புரட்சி வெற்றிபெறும் வரை, மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்து இந்தக் குழு கொரில்லா போரில் ஈடுபட்டது.
❤️ கியூபா புரட்சி வெற்றி பெற்று காஸ்ட்ரோ 1959 பிப்ரவரி மாதம் பிரதமர் பொறுப்பேற்றார். 4/n
❤️ பிரதமராக இருந்த காஸ்ட்ரோ, அதிபர் பதவியேற்றார். அப்பதவியில் பிப்ரவரி 2008 வரை காஸ்ட்ரோ நீடித்தார். காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமர் மற்றும் அதிபராக இருந்து ஆட்சி செய்த ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு 10 பேர் அதிபராக இருந்தனர்.
❤️ லட்சக்கணக்கான கியூபா மக்களால் வெறுக்கப்பட்ட
5/n
பிடல் காஸ்ட்ரோ கோடிக்கணக்கான கியூபா மக்களால் நேசிக்கப்பட்டார். அவர்கள் அருகில் உள்ள அமெரிக்கா எனும் கோலியாத்தை எதிர்க்கும் டேவிட்டாகவே காஸ்ட்ரோவைப் பார்த்தனர்.
❤️ உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒரு நாட்டு அரசின் தலைவராக பதவி வகித்தவர்களில் ஒருவரான காஸ்ட்ரோ நவம்பர் 25, 2016
6/n
அன்று தனது 90ஆம் வயதில் காலமானார்.
❤️பிடல் காஸ்ட்ரோ பற்றி முத்தமிழறிஞர் கலைஞர் "ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக்குட்டியாக உலவி பெருமைக்குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர்" என்றார்..
உலகம் போற்றும் புரட்சி நாயகன் 7/n
பிடல் காஸ்ட்ரோ சொன்ன "துன்பங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்" என்ற மேற்கோளுடன் முடிக்கிறேன்.. #FidelCastro
⁉️வரலாற்று பிழை⁉️
குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும். ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது". என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் ஆஷ்' என்ற வெள்ளைக்கார கலெக்டர். 1/n
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை, சாதி வெறியனான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு நாள் ஆஷ்துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார் நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது. 2/n
ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்."ஏன்" என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தப்பட்டவர்களின் குடிசை” என்றும் "நீங்கள்அங்கு போகக் கூடாது" 3/n
K.S.ராதாகிருஷ்ணன் பதிவு:
#*திராவிடம்*
*திராவிடக்களஞ்சியம்*
————————————
தினமணியில் “திராவிடத்தை உள்ளடக்கிய தமிழ் தேசியம்” என்ற கட்டுரையை படித்துவிட்டு பலரும் தொடர்பு கொண்டனர். அதன்பிறகு சில தரவுகளும் கிடைத்தன. திருவாடுதுறை ஆதீன மகாவித்துவான் யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர்
இயற்றிய ”திராவிட பிரகாசிகை” 1927-ல் வெளியிட்ட நூல் கிடைக்கப்பெற்றது. தமிழ் இலக்கிய, இலக்கண சாஸ்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப்போதிப்பது இத்திராவிட பிரகாசிகை என இதன் பதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளது.தமிழ் இலக்கிய, இலக்கண மரபியல்களை பல பாடல்களோடு சொல்லப்பட்டுள்ளது.
தமிழறிஞர் சபாபதி நாவலரால் எப்படி திராவிடம் என்ற பதமில்லாமல் 1927-லே ஒரு நூலை இயற்றமுடியும்.
இதைப்போலவே 1908-ல் ”திராவிட வேதத் திரட்டு” என்று தமிழறிஞர் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் திருமுறைகளை திரட்டி திராவிட வேதமென்று நூறாண்டுகளுக்கு முன்பே எழுதி பதிப்பித்துள்ளார்