Stress என்றால் என்ன? எப்படி எதிர்கொள்வது #thilliinfo
மன அழுத்தம் (Stress) என்பது நம் உடல் எதிர்கொள்ளும் ஒரு இயல்பான எதிர்வினை. மனிதன் மாற்றங்கள் அல்லது சவால்களை எதிர்கொள்ளும்போது, அவன் உடல் மற்றும் மனரீதியான எதிர்வினையை உருவாக்குகிறது. அதற்கு பெயர்தான் Stress.
Stress response உங்கள் உடல் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உதவுகிறது. மன அழுத்தம் நம்மை எச்சரிக்கையாகவும், உந்துதலாகவும், ஆபத்தைத் தவிர்க்கத் தயாராகவும் இருக்கும். நமக்கு முக்கிய தேர்வு வரவிருந்தால், ஸ்ட்ரெஸ் response நம் உடல் கடினமாக உழைக்கவும் நீண்ட நேரம் விழித்திருக்கவும் உதவும்
ஆனால் அது நெடுங்காலம் தொடரும்போது மன அழுத்தம் ஒரு பிரச்சனையாகிறது, பல உபாதாதைகள் உருவாக்குகிறது. உடல்ரீதியான சில அறிகுறிகள்: 1. சோர்வு அல்லது தூங்குவதில் சிக்கல்
2 .உடல் வலி 3. செரிமான பிரச்சனைகள் 4. உடலுறவில் பிரச்சனை 5. பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம்
அதிதீவிரமான மன அழுத்தம், ஒருத்தரை குடி பழக்கம், போதை, சூதாட்டம், தவறான பழக்கங்களுக்கு அடிமையாக மாற தூண்டும். நீங்கள் மன அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது, ஆனால் சில தினசரி உத்திகளைப் பயிற்சி செய்வதன் மூலம் அதை அதிகமாக்குவதைத் தடுக்கலாம்.
மன அழுத்தம் வருவதற்கான அறிகுறிகளை உணரும்போது உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு சிறிய நடை கூட உங்கள் மனநிலையை அதிகரிக்கும்.ஒவ்வொரு நாளின் முடிவிலும், நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள் - நீங்கள் செய்யாததைப் பற்றி அல்ல.
உங்கள் நாள், வாரம் மற்றும் மாதத்திற்கான இலக்குகளை அமைக்கவும். உங்கள் பார்வையைச் சுருக்குவது, கணம் மற்றும் நீண்ட காலப் பணிகளைக் கட்டுப்படுத்துவதை நீங்கள் உணர உதவும்.
உங்கள் கவலைகளைப் பற்றி ஒரு சிகிச்சையாளர் அல்லது உங்கள் சுகாதார வழங்குநரிடம் பேசுவதைக் கவனியுங்கள்.
சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் உங்கள் உடல் மன அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது
நீங்கள் மிகவும் பிஸியாக இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது கூடுதல் பொறுப்புகளுக்கு "இல்லை" என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
தியானம், யோகா, முட்டுச்சு பயிற்சி பழகலாம்.
மன அழுத்தம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து குறுகிய கால பிரச்சனையாகவோ அல்லது நீண்ட கால பிரச்சனையாகவோ இருக்கலாம்.
உங்கள் மன அழுத்தம் உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்தால் நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மதிப்பிற்குரிய முதல்வர் @mkstalin ஐயா அவர்களே,
சமீபகாலமாக தெருநாய்கள் பிரச்சனை குறித்து பல awareness-threads எழுதி வருகிறேன்.சமீபத்தில் நீங்களும் இந்த தெருநாய் பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.ஆனால் அவைஅனைத்தும் longterm solutions
என்னதான் தடுப்பூசி போட்டு,sterilize பண்ணாலும் கூட அந்த நாய்களை எந்த தெருவில் இருந்து எடுத்துச் சென்றார்களோ, மறுபடியும் அதே தெருவில் விடுவது தான் ABC சட்டம்.எனவே,அந்த நாய்கள் குழந்தைகளை மீண்டும் தாக்குவது உறுதி.சமீப காலமாக ராபீஸ் வந்து இறந்து போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
Rabies விட மோசமான ஒரு நோயை இந்த உலகம் பார்த்திருக்காது🙏. பிற நோய்கள் மனிதனை மனிதாய் வைத்து சாகடிக்கும் ஆனால் Rabies மனிதனை மிருகமாக்கி துடிக்கத் துடிக்க சாகடிக்கும் 🥹. தற்போது, இந்த நோயால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான்.
எல்லா விலங்கு கடிகளும் ரேபிஸ் நோய் தாக்கக்கூடியது-எலி போன்ற Rodents தவிர சில காட்டு எலிகள் கடித்தாலும் ரேபிஸ்தடுப்பூசி போடுவது அவசியம்.நாய்க்கடி 3 கேடகரியில் இருக்கும்.எந்த கேடகிரியில் இருக்கு என்பது பொறுத்து வைத்தியம் இருக்கும்.
Cat 1- skin intact
Cat 2- minor scratches without bleeding
Cat 3- scratches/bites with bleeding
ஒரு சின்ன ஸ்கரேட்ச் + லைட்டா ஒரு பொட்டு ரத்தம் வந்தாலும் அது cat 3 சேரும்.
முதலில் கடிபட்ட இடத்தை அட்லீஸ்ட் 15mins ஓடும் தண்ணீர்/டேப் வாட்டரில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
Cat 3 கடிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி கூட சேர்ந்து ரேபிஸ் Immunoglobulin அல்லது monoclonal antibodies சேர்ந்து குடுப்பது அவசியம்.
ரேபிஸ் தடுப்பூசி antibody ரெஸ்பான்ஸ் உண்டுபண்ண 10-14 நாட்கள் தேவைப்படும். இடைப்பட்ட காலத்துல இந்த ரேபிஸ் இம்முனோக்ளோபின் தான் ரேபிஸ் வராம உடனே தடுக்கும்
பல வைரஸ்கள் மனிதனை தாக்கினாலும், அவற்றில் ஒரு சில வைரஸ்கள் நம் உயிரை பறிக்கும் ஆற்றல் உள்ளது. அப்படி பட்ட ஒரு மிக மோசமான வைரஸ்தான் இந்த RABIES. இந்த VIRUS பற்றி 1000 வருடங்களுக்கு முன்னரே பல சரித்திர ஏடுகளில் எழுதி வைக்க பட்டுள்ளது. பக்கத்து வீட்டு நாய் கடிச்சத பெற்றோரிடம் மறைத்த குழந்தை, RABIES நோயினால் பாதிக்கபட்டு, அந்த அப்பாவின் மடியில் துடித்து இறந்தான். Sensitive and disturbing video.
இந்த RABIES virus பெரும்பாலும், பாதிக்க பட்ட மிருகங்களிடமிருந்து(வௌவால்கள், நாயிகள், பூனைகள், நரிகள், etc.,) மனிதர்களுக்கு வருகிறது. இந்தியாவில் வருடத்திற்கு 20,000 இறப்புகள் இந்த RABIES virusஆல் நிகழ்கிறது. அதிலும் குழந்தைகள்தான் மிக அதிகம். இந்த virus பாதிக்க பட்ட நாய் ஒருத்தரை கடிக்கும் பட்ச்சத்தில், அந்த virus நம் திசுக்களில் புகுந்து பெருகி, பின்பு நம் மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) மூலமாக, மூளையே சென்று அடைகிறது.
அப்படி பரவும் பட்சத்தில் அந்த நபர் மனித இயல்பை மீறி, நாயின் குணாதிசயங்கள் பெற்று கிட்ட தட்ட நாயாக மாறி துடிச்சு துடிச்சு மடிந்து போவார்.Hydrophobia - ஒருவர் தண்ணீரை கண்டாலே அதிர்ந்து போகுவார்.தன் எச்சில் கூட அவரால் விழுங்க முடியாமல், வாய் முழுக்க நுரை தள்ளி பரிதாபமாக இறப்பார். அவ்வாரு இறந்த நபரின் சடலத்தை சட்டப்படி hospitalலிருந்து தகனம் செய்யபடும். ஏனனில், பாதிக்க பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கும் அது 100% பரவும். Hydrophobia symptoms வெளி படும் பட்ச்சத்தில், அந்த நபரை யாராலும் காப்பாற்ற முடியாது. Rabies நோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் ஒரு glass தண்ணீர் குடிக்க எவ்வளவு துடிக்கிறான் பாருங்க. Unfortunately, he is no more.sensitive and disturbing video.
#thilli_info
காலையில் இருந்து #covidshield குறித்து பல செய்திகள் நம் TL சுற்றுவதை நாம் பார்க்க முடிகிறது. தடுப்பூசியால் வெகு சிலருக்கு (லட்சத்தில் எவரேனும் ஒருவருக்கு) பாதிப்பு வரலாம், அதுவும் ஊசி போடபட்ட 5-30 நாட்களுக்குள் வரலாம். அப்படி வந்தவர்களுக்கும் முறையாக சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. 2-3 மூன்று வருடங்களுக்கு முன் போடபட்ட ஊசியால், இவ்வளோ வருடம் கழித்து இரத்தம் கட்டாது. ஒரு சில ஊடகங்கள், அரைவேக்காடுதனமா தலைப்பு போட்டு, மக்களுக்குள் பயத்தை விதைக்கிரார்கள். அறிவியிலிலும், மருத்துவத்தில் அரசியல், மதம், இனம் கலக்க கூடாது. health.gov.au/our-work/covid…
உடல் நல குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். Self- medication முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஊடகங்கள் பொறுப்போடு தலைப்பு செய்திகளை பகிர வேண்டும்.
எப்பொருள்யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ncbi.nlm.nih.gov/pmc/articles/P…
Liquid Nitrogen foods - உயிர் கொல்லி ?? #thilli_info
Recent-ah ஒரு videoவில், ஒரு சிறுவன் liquid nitrogen உறையவைக்க பட்ட "Smoke Biscuit" சாப்பிட்டு, மூக்கிலும், வாயிலும் குளிர் புகையை வெளி விட்டு , பரிதாபமாக இறந்துளான். இந்த Liquid Nitrogen திரவ நிலையில் உள்ள ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும். இதன் வெப்ப நிலை − 196°C.
இது எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும். பெரும்பாலும் இதை Industries, Research labsல பயன்படுத்துவார்கள். பல்வேறு நாடுகளில் இதை பயன்படுத்தி உறைந்த உணவு பொருள்களுக்கு (Biscuit chocolate, ஐஸ்-cream,etc.,) மருத்துவர்கள் கடும் கண்டனமும் மற்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். உதாரணமாக, இட்லி இந்த Liquid
Nitrogenலில் உறைய வைத்தால், ஒரு சுத்தி கொண்டு அதை உடைக்க முடியும். இந்த வீடியோவில் தெளிவாக காம்பித்து இருப்பார்கள்:
இந்த Liquid Nitrogen நாம் உண்ணும் பொருளில் மீதம் இருந்தால், அதை நாம் உட்கொள்ளும்போது நமது உடல் உறுப்புக்கள் கடுமையான குளிர் ( − 196°C) எதிர் கொள்ளும் சூழல் உண்டாகும். இதனால் உறுப்புக்கள் செயல் இழந்து, மூச்சு திணறல் ஏற்பட்டு மரணிக்க கூடும். Delhi pub Cocktailயில் Liquid Nitrogen கலந்து குடிச்ச ஒருவரை பல மணி நேரம் போராடிம், மருத்துவர்கள் அவரின் பாதி வயிற்றை அகற்றி மட்டுமே காப்பாத்தினர்.
நீர் இன்றி அமையாது உலகு. அதைபோல், நல்ல தூக்கம் இன்றி அமையாது நம் அரோக்கியம். நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல ஊட்டச்சத்து உணவு, உடற்பயிற்ச்சி மற்றும் நல்ல தூக்கம் முக்கியம். ஒரு மனிதன் தினமும் சராசரியாக 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்படி தூங்கும் போது, என்ன நடக்கிறது என்பதை பாப்போம். இதில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன, அதை கீழ கொடுக்கபட்டுள புகை படத்தில் அறியலாம்.
சமீப காலங்களில், Busy schedules, kids, anxiety and technology என அனைத்தும் நல்ல இரவு உறக்கத்திற்குத் தடையாக இருக்கிறது. நாம் தூங்குவதற்கு Melatonin என்கின்ற hormone மிக முக்கியம். இது இருட்டில் சுரக்கும். ஆகவே, நம் படுக்கையறைல் மொபைல்ஸ்.
Laptop, tablets போன்ற கருவிகள் உபயோகிப்பதை வேண்டும். ஏனனில், அதில் இருந்து வரும் வெளிச்ச்ம், Melatonin சுரப்பதை பாதிக்கும், பாதிக்கும் பட்சத்தில் நம் தூக்கம் கண்டிப்பாக முழுமையாக இருக்காது. இது, நாளடைவில் INSOMIA தள்ளும். இது தவிர்த்து,INSOMIA பிற காரணங்களும் கீழ உள்ள புகைப்படத்தில் காணலாம்