" ஹைதர் அலிக்கு தண்ணி காட்டிய உலக்கை தாய் #ஒனகே_ஓபாவ்வா ".
சித்ரதுர்கா கோட்டை பெங்களூருவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நம் சங்ககிரி துர்க்கத்தைப் போன்றே மலையில் அமைந்த கோட்டையாகும்.
ஊர் சுற்றியாகிய நான் இந்தக் கோட்டைக்கு சென்றிருந்த பொழுது அங்கிருந்த இந்திய சுற்றுலாத் துறையின் வழிகாட்டி இந்தக் கோட்டையின் மகத்துவத்தை கண்களில் கண்ணீர் கசிய சொன்னபொழுது நான் அப்படியே உறைந்து போய்விட்டேன்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்டு வந்த இந்து மன்னர் தன் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக சித்ர என்ற மலையின்மீது மாபெரும் கோட்டை ஒன்றை கட்டி அதில் நூற்றுக்கணக்கான வீரர்களையும் தங்க வைத்திருந்தார்.
அப்பொழுது மைசூரை கட்டியாண்ட திப்பு சுல்தானின் தந்தையாகிய ஹைதர் அலிக்கு சித்ரதுர்காவை பிடிக்கும் ஆசையில் கோட்டைக்கு கொஞ்சம் தொலைவில் மறைவாக தனது படையை நிறுத்திவிட்டு கோட்டைக்குள் நுழையும் வழியை கண்டுபிடித்து வருமாறு இரண்டு ஓற்றர்களை அனுப்பி வைக்கின்றார்.
ஒற்றர்களும் அந்தப் பகுதி மக்கள் போல வேடமணிந்து கோட்டையை சுற்றிச்சுற்றி வந்த பொழுதிலும் அவர்களால் கோட்டைக்குள் எவ்வாறு நுழைவது என்பதை கண்டறிய முடியவில்லை. களைத்துப் போன அவர்கள் ஒரு மர நிழலில் அமர்ந்தவாறு இந்தக் கோட்டைக்குள் நுழையும் வழியை நம்மால் கண்டறிய முடியவில்லையே,
இதை ஹைதர் அலியிடம் சொன்னால் நம் தலையை வேறு காவு வாங்கி விடுவாரே என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவர்கள் பேசியதை மறைந்திருந்து கவனித்த கோட்டையின் தூய்மைப் பணியாளரான ஒபாவ்வா என்ற பழங்குடியினப் பெண் தனது தோழி ஒருத்தியை சைகையின் மூலமாக
தன் அருகில் வரவழைத்து அவளிடம் நம் அரசர் எதிரிகள் யாரும் கோட்டையினுள் நுழையாதவாறு கோட்டையை பலமாக கட்டியுள்ளார்.
ஆனால் தூய்மைப் பணியாளர்களாகிய நமக்கு தெரிந்து எதிரிகள் நுழைவதற்கு வசதியாக ஒரு இடம் இருக்கின்றது என்றால் அது கோட்டையின் கழிவுநீர் வெளியேறும் குறுகலான ஓட்டைதான்!
இரவு நேரத்தில் காவல் இருக்கும் சொற்ப வீரர்களைத்தவிர அனைத்து வீரர்களும் உறங்கி விடுவதால் கோட்டையில் இருந்து கழிவுநீர் எதுவும் அந்த ஓட்டையின் வழியாக வெளியேறாது, அப்பொழுது எதிரிகள் எறும்பு போல படுத்தவாறு ஊர்ந்துகொண்டே சுமார் 50 அடி தூரம் வரை சென்றால் எளிதில்
கோட்டைக்குள் சென்று விட முடியும் என்று ஒற்றர்களில் காதுகளில் விழுமாறு சத்தமாக கூறுகின்றாள்.
இதைக்கேட்டு மகிழ்ந்த ஒற்றர்களும் ஹைதர் அலியிடம் சென்று தூய்மைப் பணியாளரான ஒபாவ்வா கூறியதை அப்படியே ஒப்பிக்கின்றனர்.
உடனே அன்று இரவே நடுச்சாமத்தில் தனது படை வீரர்களை கழிவு நீர் வெளியேறும் ஓட்டை வழியாக கோட்டைக்குள் புகுந்து போர் புரியுமாறு கட்டளையிடுகின்றார் ஹைதர் அலி.
அதன்படியே வீரர்களும் நடுச்சாமத்தில் ஒவ்வொருவராக கொஞ்சமும் அருவருப்பு அடையாமல் கோட்டையின் கழிவு நீர் வெளியேறும்
குறுகிய ஓட்டையினுள் படுத்தவாறு எறும்பு போல ஊர்ந்துகொண்டு மெதுவாக கோட்டையினுள் நுழைய ஆரம்பிக்கின்றார்கள்.
அப்பொழுது கோட்டையினுள்ளே கழிவுநீர் வெளியேறும் குறுகிய ஓட்டையின்முன் தன் கையால் சாகப்போகும் முதல் அதிஷ்டசாலி ஹைதர் அலியின் படை வீரனின் வருகையை எதிர்பார்த்து
ஒபாவ்வா கையில் உலக்கையுடன் ஆவேசமாக நிற்கின்றாள்.
சிறிதுநேரத்தில் கழிவு நீர் ஓட்டையின் வழியாக கோட்டையினுள் நுழைய மெதுவாக ஊர்ந்துவந்து தலையை நீட்டிய முதல் அதிஷ்டசாலி வீரனின் தலையில் உலக்கையால் ஒரு போடு்போட்டு கபாலத்தைப் பிளந்து மெதுவாக அவனின் உடலை வெளியே இழுக்கின்றாள்.
அந்த உடல் வெளியே வந்ததும் வரிசையில் ஊர்ந்துவரும் அடுத்த வீரன் தனது தலையை ஓட்டையின் வெளியே மெதுவாக நீட்டுகின்றான், உடனே அவனது தலையில் உலக்கையால் நங்கென்று அடித்து மூளையை சிதறவிட்டு அவனின் உடலை மெதுவாக வெளியே இழுத்து வைக்கின்றாள்,
சில நிமிடங்களில் வரிசைப்படி ஊர்ந்துவரும் அடுத்த வீரன் தலையை வெளியே நீட்டுகின்றான், அவனையும் நடு மண்டையில் உலக்கையில் அடித்து பரலோகம் அனுப்பி அவனது உடலை மெதுவாக வெளியே இழுக்கின்றாள்,
பிறகு அடுத்த வீரனை போட்டுத் தள்ளுகின்றாள் அவனின் உடலை வெளியே இழுக்கின்றாள் என இப்படியே
ஐமபதடி அகலமுள்ள கோட்டைச்சுவருக்குள்ளே இருக்கும் கழிவுநீர் ஓட்டையில் வரிசையாக ஊர்ந்து வரும் வீரர்கள் ஒவ்வொருவராக சளைக்காமல் தன் உலக்கையால் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கின்றாள்.
பொழுது புலர்ந்து உறக்கம் கலைந்து வீரர்கள் எழுந்து வந்ததும் உலக்கையுடன் ஒபாவ்வா
ஹைதர் அலியின் வீரர்களை அடித்து துவம்சம் செய்வதையும் மண்டை பிளந்து இறந்த வீரர்களின் உடல் மலைபோல குவிக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து விஷயத்தை புரிந்துக் கொண்டு உடனே ஆயுதங்களுடன் வெளியே வந்த அவர்கள்,
இது வரை விடியவிடிய கோட்டைக்குள் புகுந்த
நம் சக வீரர்கள் இந்நேரம் அங்கிருக்கும் வீரர்களைக் கொன்றுவிட்டு கோட்டையின் கதவுகளை நமக்காக ஸ்பெஷலாக திறப்பார்கள் என்று காத்திருந்த ஹைதர் அலியின் மிச்ச சொச்ச படை வீரர்களையும் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
நண்பர்களே நாம் அனைவரும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் ஹைதர் அலியைப் படித்திருக்கின்றோம் அவரது மகன் திப்பு சுல்தானைப் படித்திருக்கின்றோம், ஆனால் நடுவில் இருக்கும் கொஞ்ச பக்கங்களைக் காணோம் என்பது போல மதம் கொண்ட ஒற்றைப் பெண் யானையாக
வீர தீரச் செயல் புரிந்த ஒபாவ்வாவை படித்திருக்கின்றோமா என்றால் இல்லை!
வரலாற்று பாடப்புத்தகங்களில் ஹைதர் அலி பற்றியோ அல்லது அவரது மகன் திப்பு சுல்தான் பற்றியோ பாடங்களுக்கு பதில் நம் இந்தியப் பழங்குடியினப் பெண்ணான ஒபாவ்வா ஏன் இல்லை என்று கேட்கின்றேன்.
மறைக்கப்பட்ட நம் இந்திய வரலாற்று வீரர்களை வெளிக்கொணரும் அளப்பரிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிரும் நம் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா ஜி அவர்கள்தான் கடந்த 2018 ல் கர்நாடகாவில் ஒபாவ்வாவிற்கு சிலை அமைத்து வருடம் ஒரு முறை நவம்பரில்
ஒபாவ்வா ஜெயந்தி விழா கொண்டாட வழிவகை செய்ததுடன் கர்நாடகாவில் பெண் காவலர்களின் அதிரடிப் படைக்கு ”ஒனகே ஒபாவ்வா படை” என்றும் பெயரிட்டுள்ளார்.
இப்பொழுது கர்நாடகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் மாறுவேடப் போட்டிகளில் பெண் குழந்தைகள்
கையில் உலக்கையுடன் ஒபாவ்வாவின் வேடம் தரித்து முதல் பரிசினை தட்டிச் செல்கின்றார்கள்.
ஒனகே என்றால் கன்னடத்தில் உலக்கை என்பது பொருளாகும்,
அவ்வா என்றால் பாட்டி என்பது போல ஒபாவ்வா என்றால் பாமர பழங்குடியின கன்னடத்தில் தாய் என்பது பொருளாகும்.
ஒபாவ்வாவிடம் இருந்த தாய்நாட்டுப் பற்று, எதிரிகளைக் கண்டு அஞ்சாமை, எதிரிகளுக்கு தவறான வழிகாட்டுதல், தனக்கு நன்கு பழக்கமான பொருளை ஆயுதமாக பயன்படுத்துதல், எதிரிகளை தன் எல்லைக்குள் வரவழைத்து பாதுகாப்பாக இருந்துக்கொண்டு தாக்குதல், கடைசிவரை வீராவேசம் குறையாமல் இருத்தல் என
தலைமைப் பண்புகளின் பீடமாக இருந்த ஒபாவ்வாவை நம் நாட்டு பெண் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடத்தில் அறிமுகம்செய்து அவர்களை தைரிமானவர்களாய் உருவாக்காமல் வெறுமனே மேடைகளில் இரவு 12 மணிக்கு என்று பெண் ஒருத்தி கழுத்து நிறைய நகைகளுடன் என்று தனியாக தெருக்களில் நடமாடுகின்றாளோ
அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திர தினம் என மேடையில் நீட்டி ம் முழங்கும் முந்தைய ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது?
ஒனகே ஒபாவ்வாவைப் போல இன்னும் எத்தனை எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களை முந்தைய ஆட்சியாளர்கள் மறைத்துள்ளார்களோ தெரியவில்லை..!
ஜெய்ஹிந்த். *Srinivasan Mahadeva*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கார்ல்சனை கொண்டாடிய மீடியா!
ஓரமாக நின்ற பிரக்ஞானந்தா!
அடுத்து நடந்த ட்விஸ்ட்!
நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார்.
இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் புளோரிடாவில் கிரிப்டோ கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது.
இந்த தொடர் செஸ் போட்டிகளில் முக்கியமான ஒரு தொடர் ஆகும்.
சர்வதேச அளவில் ரேங்கை உயர்த்திக்கொள்ள இது முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது.
இதில்தான் கார்ல்சன் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அதே சமயம் இவர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை எதிர்கொண்ட போட்டியில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
After Shri Krishna killed Kamsa, he went to the jail to release Vasudev and Devki, his parents.
Devki matha asked eagerly,
"Child, you are God yourself, and you have divine powers; then,
why did you wait fourteen years to kill Kamsa and release us"?
Shri Krishna replied,
′Respected mother, forgive me. But why did you send me to the jungle for fourteen years in my last birth?
Devki was very surprised and said,
′′Krishna, how is this possible?
Why are you saying this?"
Shri Krishna replied,
′′Mother, you will not remember anything about your previous birth. But you were Kaikayi in your last birth and your husband was Dashrath".