shroud of Turin
வரலாற்றில் இதை ஆராய்ந்ததை போல வேறு எதையும் ஆராய்ந்து இருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கு மேலாக புதிது புதிதாக வரும் எல்லா technology களை கொண்டு ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் இது போலி என்றாலும் மக்களுக்கு இதன் மீதான நம்பகத்தன்மை குறைந்ததே இல்லை.
அது shroud of Turin! இத்தனை ஆண்டு காலமாக பல கோடி மக்களை ஆணித்தரமாக இதன் மேல் நம்பிக்கை வைக்க காரணம் பக்தியா? அல்லது இதை உருவாக்கிய the great Leonardo da Vinci யின் மேஜிக்கா?
Shroud of Turin என்றால் என்ன? இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், Arimathea என்னும் ஊரை சேர்ந்த Joseph என்னும் பணக்காரர், அவரது உடலை ஒரு linen துணியில் சுற்றி அவருக்கு சொந்தமான குகையில் வைக்கிறார்.
இயேசு உயிர்த்தெழுந்து சென்றதும், அவரது சீடர்கள் வந்து அந்த குகையில் பார்க்கும் போது அவரை சுற்றி இருந்த அந்த linen துணி மட்டும் இருக்கிறது. எல்லா 4 gospel களிலும் இந்த துணியை பற்றி இருக்கிறது. சீடர்கள் வந்து பார்த்தபோது அங்கு இயேசுவின் உடல் இல்லை,
அவரை மூடி இருந்த அந்த பருத்தி துணி மட்டும் இருந்து இருக்கிறது. அந்த துணி அதற்கு பின் என்ன ஆனது அது எப்படி இருந்தது போன்ற விவரணைகள் பைபிளில் இல்லை.
இயேசு இறந்து 1300 வருடங்கள் கழித்து, அவர் இறந்த இடத்தில் இருந்து 4000 km தள்ளி Turin என்னும் இத்தாலியில் இருக்கும்
ஒரு சிறிய கிராமத்தில், திடீரென்று இதுதான் இயேசுவை மூடி இருந்த துணி என்று ஒரு linen துணி மக்களிடம் பேசு பொருளாகிறது. 40000 மக்கள் அந்த துணியை பார்க்க கூடுகிறார்கள். அதன் பின்னர் 1898 இல் அந்த துணி உலகமெங்கும் பிரபலமாகிறது.
இது 1578 இல் இருந்து இத்தாலியில் இருக்கும் Turin என்னும் ஊரில் உள்ள San Giovanni cathedral லில் வைக்கப்பட்டு இருக்கிறது. காற்றுப் புக முடியாத, குண்டு துளைக்காத, செயலற்ற வாயு நிரம்பிய கண்ணாடி பெட்டியில் ஒரேவிதமான தட்பவெப்ப நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த துணி 14 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்டது (4.4 by 1.1 meters) இதில் ஒரு மனிதரின் உருவம் பதிந்து இருக்கிறது. இப்போது கேள்வி இந்த linen துணி, 20 நூற்றாண்டுகளுக்கு முன்பாக இயேசுவின் உடலை சுற்றியிருந்த அதே துணிதானா?
கிறிஸ்துவர்களுக்கு இது வெறும் துணி மட்டும் அல்ல. உயிர்த்தெழும் போது, அதாவது தன்னை மூடி இருந்த துணியை ஒளிவடிவமாக துளைத்து மேலெழும்போது அந்த உடலின் வடிவமைப்பு, சிலுவையில் அறையப்பட்டதால் உண்டான காயங்கள், ரத்தம் எல்லாம் அந்த துணியில் அப்படியே பதிந்திருக்கிறது.
இது இயேசுவின் உயிர்த்தெழுதலை சொல்லும் சாட்சி என்று நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இயேசுவின் ஓவியமோ, புகைப்படமோ, அல்லது அவரது தோற்றம் குறித்த விவரிப்புகளோ, ஒல்லியா? குண்டா? உயரமா? குட்டையா? அவர் எப்படி இருந்தார் என்பதற்கான எவ்வித ஆதாரமோ அல்லது பைபிளில் விவரிப்புகளோ நம்மிடம் இல்லை.
அப்படி இருக்கையில் இயேசுவின் உடல் அச்சு இந்த துணியில் பதிந்து இருப்பதால், இயேசு எப்படி இருந்து இருப்பார்? அவரது தோற்றம் என்ன? கடவுளின் மகன் எப்படி இருந்தார்? என்பதை நாம் தெரிந்துகொள்ள Shroud of Turin ஐ விட்டால் வேறு வழியில்லை.
இத்தாலியை சேர்ந்த Secondo Pia என்பவர் May 25 ஆம் தேதி 1898 இல் அந்த துணியை முதல் முறையாக புகைப்படம் எடுக்கிறார். இருட்டு சர்ச்க்குள் ஒரு electric light bulb இன் உதவியுடன் ஒரு amateur photographer எடுத்த போட்டோ. இப்பதான் ட்விஸ்ட்!
இதுவரை வெறும் ரத்தக்கறையும் பழுப்பு நிறமேறி இருந்த துணி, போட்டோ எடுத்து அந்த நெகட்டிவை பார்க்கும் போது, நெகட்டிவில் ஒரு மனித முகம் தெரிந்தது.
தோள் வரை நீண்டு இருக்கும் முடி, தலையில் முள் கீரிடம் பதிந்த தடங்கள், மீசை தாடி என்று ஒரு முகம்...
இயேசுவின் முகம், கடவுளின் மகனின் முகம், இதுவரை யாரும் பார்த்திராத முகம்! Secondo Pia வை உற்று நோக்கும் கனிவான முகம். எப்படி சிலிர்த்திருக்கும் பாருங்கள் அவருக்கு. அதிர்ச்சியில் develop செய்துகொண்டு இருந்த plates ஐ அப்படியே கீழ போட பார்த்தாராம்.
அவ்வளவுதான் வெறும் துணி என்றதற்கே உலகம் முழுவதும் மக்கள் திரண்டு அதை பார்த்தார்கள். இப்போது இயேசுவின் முகம் அதில் தெறிகிறது என்றால் கேட்கவும் வேண்டுமா? உலகமே உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தது, பக்தி பரவசத்தில் திக்கு முக்காடியது.
பலர் அந்த போட்டோ ஒரு forgery என்றார்கள்.
Secondo Pia ஒரு ஏமாற்றுக்காரர் என்றார்கள். 1931 இல் Giuseppe Enrie என்னும் தொழில்முறை photographer அழைக்கப்பட்டார். அவர் மீண்டும் ஒரு போட்டோ எடுத்து அதே முகம் தெரிந்ததை உறுதி செய்யவும், எல்லாரும் வாயடைத்து போனார்கள்.
அதுவரை Vatican church உம் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அது உண்மை என்றும் சொல்லாமல், போலி என்றும் மறுக்காமல் tactical ஆக நடந்து கொண்டு இருந்தது. இந்த போட்டோ உறுதியானதும், Vatican church தடாலன்னு ஓடிவந்தது.
பெரும்பாலும் நாத்திகர்கள், அறிவியல் ஆர்வலர்கள் ஒரு அற்புதத்தை கண்டால் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.
பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால், 'சரி அதுக்கு என்ன இப்போ?' என்பதாக தான் உடனடி reaction இருக்கும். ஏன் என்றால், அது சாத்தியமற்ற ஒன்று என்று தெரியும். அதில் போய் நேரத்தை செலவிடுவானேன் என்று அலட்சியமாக தான் இருப்பார்கள்.
எப்போது அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றால், 'பிள்ளையார் குடிச்ச மீதி பாலை குடிச்சா கேன்சர் குணமாகும்' என்றால் கடுப்பாவார்கள். 'நீ என்னமோ பண்ணிட்டு போ, ஆனா இப்படி ஒரு வதந்தி கிளப்பி தேவையில்லாமல் கேன்சர் நோயாளிகளின் மருத்துவத்தில் ஏன் தலையிடுகிறாய்?' என்பதாக,
வெறும் கடுப்பு பிள்ளையார் பால் குடிப்பது பொய் என்று நிரூபிக்கும் வரை செல்லும்.
இந்த பக்தியாளர்கள் என்ன செய்வார்கள் என்றால், பெரும்பாலான நேரம் அறிவியலை மட்டம் தட்டுவார்கள். அது பன்னாட்டு சதி, அறிவியல் நம்மை கொன்று விடும், ஆபத்தானது, முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை
என்றெல்லாம் சொல்லும் அவர்கள், ஒருவேளை அவர்களது நம்பிக்கையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றால் உடனே ஓடி வந்து அறிவியலை அணைத்து கொண்டு அறிவியலே சொல்லிடுச்சு... என் நம்பிக்கை உண்மை என்று மார் தட்டி கொள்வார்கள்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ராமர் கட்டிய பாலத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க சாத்தியக்கூறு இருக்கு என்று தெரிந்தால் உடனே அதற்கு நிதி அளித்து, வேலையை முடுக்கிவிட்டு, பார்த்தீர்களா அறிவியலே சொல்லிடுச்சு இது ராமர் கட்டிய பாலம் ராமர் இருக்கிறார் என்பார்கள்.
இதே ஆர்வக்கோளாறு வேலையை தான் Vatican church அன்று செய்தது. 'என்னது இயேசு முகம் ஒரு பழைய துணியில் தெரியுதா? இது மட்டும் உண்மை என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டால்.... இயேசு தான் one and only கடவுள்! நாங்க தான் அவருக்கு authority! என்று நிரூபித்து விடலாமே' என்று ஆர்வமாக,
'ஓடியாங்க ஓடியாங்க எல்லா scientist உம் வந்து இதை சோதித்து பாருங்கள்' என்றது.
1978 இல் John Jackson (former US Air Force physicist), தலைமையில் ஒரு 40 scientist கள் கொண்ட குழுவிடம் (shroud of Turin research project) அந்த துணியை Vatican ஒப்படைத்தது.
5 நாட்கள் ராப்பகலாக ஆராய்ச்சி செய்து "இது இயேசுவை மூடியிருந்த துணியாக இருக்க வாய்ப்புள்ளது ஆனால் இல்லாமலும் இருக்கலாம்" என்பது போன்ற ஒரு குழப்பமான அறிக்கையை வெளியிட்டது அந்த குழு. 1. முதலில், ரத்தக்கறை மற்றும் அந்த உருவம் ஒருவேளை paint உபயோகபடுத்தி உருவாக்கி இருக்கலாமோ
என்ற கோணத்தில் ஆராய்ந்தார்கள். ஆனால் இல்லை. எவ்வகை paint ஆக இருந்தாலும் அது துணியின் இழைகளுக்குள் ஊடுருவி செல்லும். 13ஆம் நூற்றாண்டில் மக்கள் பயன்படுத்திய dye எல்லாமே துணியின் இழைகளுக்குள் ஊடுருவி செல்ல கூடியவைதான். ஆனால் இந்த துணியில் இழைகளில் எவ்வித வண்ணமும் இல்லை.
ரத்தக்கறையும் முகமும் paint ஆல் உண்டாக்கப்பட்டது அல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள்.
2. அடுத்து ரத்தகறை களில் இருந்து மாதிரிகளை எடுத்து microchemical analysis க்கு உட்படுத்தியதில் அவை ரத்தம் தான் என்பது நிரூபணம் ஆயிற்று.
ஆக துணியில் எப்படி அந்த உருவம் வந்தது என்பதற்கு விடை இல்லை.
அடுத்து ரத்தக்கறை உண்மையில் ரத்தக்கறை தான். அப்படியானால் அது இயேசுவின் ரத்தமா?
யோவான் 19:1 'அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து,'
இதில் பிலாத்து இயேசுவை சாட்டையால் அடித்திருக்கிறான். சாட்டையால் அடித்தால் உடல் முழுவதும் தோல் பிய்ந்து காயங்கள் இருக்கும். அந்த துணியில், அதே போல தலை முதல் கால் வரை அங்கங்கே ரத்த கீற்றுகள் இருக்கின்றன. தலையில் முள் அழுத்தி அதனால் வந்த ரத்தம், தடமும் இருக்கின்றன.
3. அடுத்து 100 கிலோவுக்கும் அதிகமாக உள்ள எடைகொண்ட சிலுவையை தோளில் சுமந்தபடி இயேசு செல்கிறார். ஏற்கனவே அவர் உடலெங்கும் சாட்டையால் அடிபட்டு காயம் உண்டாகி அதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. இப்போ அதன் மேல் 100 கிலோவுக்கு அதிகமான ஒரு சிலுவை வைக்கப்படுகிறது.
அவர் தள்ளாடி தள்ளாடி நடந்து போகும்போது தோளில் உள்ள சிலுவை ரத்தத்தை தோள் மேல் முழுவதும் படர்த்தி தேய்த்திருக்கும் இல்லையா? அப்படியான ஒரு smudged கறை அந்த துணியில் இருக்கிறதா?
இருக்கு!
4. அடுத்து சிலுவையில் இயேசு அறையப்படுகிறார். அவரது கைகளில் ஆணி அடிக்க படுகிறது. ஆணி அடித்த தடம் இருக்கா துணியில்?
துணியில் கைகள் இரண்டும் உடல் மேல் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டது போல் இருக்கிறது.
இந்த துணி 14 அடி துணி. மேடை மேல் துணியை விரித்து இயேசுவை மேலே படுக்க வைத்து தலை வழியாக மீதி துணியை கொண்டு இயேசுவை மூடி இருக்கிறார்கள். இந்த 14 அடி துணியை விரித்தால் 7 அடிக்கு உடலின் கீழ் புறத்தின் அச்சும், மீது 7 அடிக்கு உடலின் மேல் புற அச்சும் இருக்கிறது.
கைகள் 2ம் உடல் மேல் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்ட அச்சில் ஆணி அடித்த தடயம் இருக்கிறதா? மேலே முள் குத்தியதால் வழிந்த ரத்த தடம் தலையில் இருப்பதை பார்த்தோம். சின்ன முள் குத்தி வழிந்த ரத்த தடமே இருக்கும் போது, பெரிய ஆணி உள்ளங்கையில் துளைத்த தடம் இருக்க வேண்டும். இருக்கா?
இல்லை! உள்ளங்கையில் ஆணி அடித்த தடம் இல்லவே இல்லை. உள்ளங்கை இரண்டும் காயங்களின்றி இருந்தன.
அடுத்த ட்விஸ்ட்.
ஆணி குத்திய இடம் உள்ளங்கையில் இல்லை மணிக்கட்டில் இருந்தது.
Romans பொறுத்தவரை சிலுவையில் அறைவது என்பது capital punishment. மிகப்பெரிய தண்டனை. அந்த தண்டனை என்பது மரணம் மட்டுமல்ல humiliation. ஒரு நாள் முழுக்க உயிரோடு சிலுவையில் துடித்தபடி இறக்க வேண்டும். போவோர் வருவோருக்கு காட்சி பொருளாக இருக்க வேண்டும்.
வேடிக்கை பார்ப்பவர்கள்க்கு பீதியை உண்டு பண்ண வேண்டும். தவறு செய்ய அவர்களுக்கு எண்ணமே வரக்கூடாது. அதே சமயம் சிலுவையில் இருப்பவருக்கு, உயிர் போகிறது என்பதை விட போவோர் வருவோர் எல்லாம் இப்படி வேடிக்கை பார்க்கும் படி இருக்கிறதே என்கிற அவமானம்.
மரணத்தை விட இந்த அவமானத்தை தான் Romans பெரிய தண்டனையாக கருதினார்கள். அதனால் சிலுவையில் அறைத்ததும் உயிர் போய்விட கூடாது குறைந்தபட்சம் 1 நாள் முழுவதும் உயிரோடு இருக்கும் வகையில் technical ஆக மனிதனை சிலுவையில் அறைவதில் வல்லவர்கள் Romans.
மனித உடலின் weight bearing value உள்ளங்கையை விட மணிக்கட்டிற்கே அதிகம். அதாவது உள்ளங்கையில் ஆணி அடித்து தொங்க விட்டால் எடை தாங்காமல் சதை பிய்ந்து கை கீழே விழ வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் மணிக்கட்டில் சிலுவை அடித்து தொங்கவிட்டால் கீழே விழும் வாய்ப்பு இல்லை.
so Romans மணிக்கட்டில் தான் ஆணி அடித்து இருக்கிறார்கள். இந்த விஷயம் shroud of Turin ஆராய்ச்சிக்கு பின் தான் நமக்கு தெரிய வந்திருக்கிறது. அதுவரைக்கும், ஏன் இப்போதும் எல்லா சர்ச் களிலும் இயேசுவின் உள்ளங்கையில் ஆணி அடித்து தான் தொங்க விட்டு இருந்திருக்கிறார்கள்.
5. அடுத்து சிலுவையில் அறையப்பட்டவர்கள் இறந்தாலும் அப்படியே சிலுவையில் சில நாட்கள் காக்கா கழுகு கொத்த இருப்பார்கள் again humiliation is the intent. ஆனால் மறுநாள் Passover, Jewish festival. அதனால் அன்றைக்கு இப்படி சிலுவையில் உடல்கள் இருந்தால் நன்றாக இருக்காது என
உடல்கள் கீழே இறக்கப்படுகின்றன. இப்போ இயேசு இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்ய,
"போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது."
இந்த துணியிலும் விலாவின் அருகில் ஒரு காயம், அதை சுற்றி தேங்கிய ரத்தத்தின் கறை இருக்கு.
அதுல பாருங்க, பைபிளில் இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது என்று இருக்கிறதா? இந்த கறையும் சில இடங்களில் அடர்த்தியாகவும் சில இடங்களில் லேசாகவும் இருக்கிறது. தண்ணீரும் ரத்தமும் கலந்த கறை.
ஆக இந்த முடிவுகளின் அடிப்படையில் இது இயேசுவின் உடலை சுற்றிய துணி தான் என்ற முடிவுக்கு வர முடிகிறது. ஒரே ஒரு விஷயம் பாக்கி இருக்கிறது அது அந்த துணியின் வயது. Radiocarbon dating மூலம் ஒரு பொருளின் வயதை நம்மால் கணக்கிட முடியும்.
அதற்கு 'துணியை லைட்டா பிச்சுக்கறேன் சோதனை செய்ய' என்று கேட்டப்போ church மறுத்துவிட்டது. புனிதமான துணியை கத்தரிப்பதாவது? இதுவரை வந்த ஆராய்ச்சி முடிவுகள் இது original என்று சொல்லுகிறதல்லவா? அது போதும் கிளம்புங்க என்றது.
அப்புறம் மறுபடி 1988 இல் சிறிது துணியை கத்தரித்து ஆய்வு செய்ய Vatican ஒப்புக்கொண்டது. 3 தனி தனி ஆய்வகங்களில் (London, Zurich, Arizona) ஆய்வாளர்கள் துணியை carbon-dated செய்தார்கள். முடிவுக்காக உலகமே காத்திருந்தது.
இது இயேசுவின் காலத்தை சார்ந்த துணி என்றால் இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இயேசு தான் இறைவனின் மகன் அவர் இந்த உலகை இரட்சிக்க இப்புவியில் பிறந்து நமது பாவங்களுக்காக உயிரை விட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விடும்.
ஆய்வு முடிவை அப்போதைய Archbishop of Turin அறிவித்தார், இயேசுவின் உருவத்தை தாங்கிய, அவரது ரத்தக் காயங்களை சுமந்த பல 100 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை சுமந்த இந்த shroud of Turin, இயேசுவின் காலத்தை சேர்ந்தது அல்ல!
இந்த துணியின் தோராயமான வருடம் 1260-1390 CE என கண்டறியப்பட்டது. ஆய்வாளர்கள் இது இயேசுவின் உடலை மூடி இருந்த துணியாக இருக்க முடியாது என்றார்கள். காரணம் இயேசு இறந்ததாக கணிக்கப்பட்ட காலம் 33 CE . இயேசு இறந்து 1000 வருடங்கள் கழித்து உருவான துணி இந்த shroud of Turin.
இந்த முடிவு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. பலர் அதை இன்று வரை ஏற்று கொள்ளவில்லை. 500 வருடங்களுக்கு மேலாக அது இயேசுவின் உடலை போர்த்திய துணி என்று அதை வணங்கிய மக்களுக்கு "sorry bro, யாரோ ஒரு ஏமாத்துக்காறன் உங்களை நல்லா ஏமாத்திட்டான்."
என்றால் எவ்ளோ பெரிய ஏமாற்றம் அதிர்ச்சி இருக்கும்? உடனே நமது மூளை அந்த வலியில் இருந்து தப்பிக்க என்ன சொல்லும்? denial mode க்கு போகும். 'இல்ல... இல்ல... இந்த ஆராய்ச்சி தான் ஏமாற்றுவேலை நான் நம்பமாட்டேன். இது இயேசுவை போர்த்திய துணி தான்' என்று மக்கள் தொடர்ந்து நம்பினார்கள்.
medieval period (dark ages) ல கிறிஸ்துவ மதம் வேகமாக பரவியது அல்லவா? அப்போ மிகப்பெரிய வியாபாரம் இது போன்ற அற்புத பொருட்கள்தான். இயேசு முள் கிரீடம், St. John Baptist தலை, St. Paul அ கட்டிவச்ச சங்கிலி, என நிறைய எக்கச்சக்கமான அற்புத பொருட்கள் படு வேகமாக விற்பனையாகி கொண்டு இருந்தன.
அதில் ஒன்றுதான் இந்த shroud of Turin. சரி, இது forgery ரைட்டு. ஆனா அந்த உருவம் எப்படி அந்த துணியில் வந்துச்சு? அதற்கு ஆய்வாளர்களிடம் பதில் இல்லை. ஆய்வாளர்கள் இதை கண்டுபிடிக்க தலை கீழ நின்னு தண்ணி குடிச்சுட்டு இருந்தாங்க.
பக்தி மான்களுக்கு இது போதுமே... god of the gaps தத்துவத்தின் படி, 'அது தெரியலைல அப்போ இது ஒரிஜினல் தான்' என்று ஒவ்வொரு முறை, அது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் போதும் லட்சக்கணக்கில் வந்து வழிபட்டு போனார்கள்.
இங்க தான் ஒரு முக்கியமான ஆளு, ஆராய்ச்சியாளர்கள் மண்டையை பிச்சிகிட்டு இருப்பதையும், shroud of Turin அ மக்கள் விழுந்து விழுந்து கும்பிடுவதையும் மேல இருந்து பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தாரு. அவரு வேற யாரு? நம்ம தல... ஆல் இன் ஆல் அழகுராஜா Leonardo di ser Piero da Vinci தான்!
Da Vinci பிறப்பதற்கு 60 வருடங்களுக்கு முன் உண்டான துணி Shroud of Turin என்று carbon dating சொல்கிறது. டாவின்சி அவருடைய peak இல் அதாவது நிறைய படங்கள் வரைந்து கொண்டு இருந்த போது அவரது வயது 50.
அப்படியானால் 100 வருடங்களுக்கு முன்னால் உள்ள துணியை டாவின்சி எப்படி பயன்படுத்தி இருக்க முடியும்?
ஆனால் சாத்தியக்கூறுகள் இருந்தன. டாவின்சி அப்போது இருந்த Florence ஊர் அன்றைய trade center. உலகம் எங்கும் இருந்தும் பொருட்கள் அங்கு வந்து விற்பனையாகின.
டாவின்சி 1000 வருடங்கள் பழமையான ஒரு relic ஐ உண்டாக்க போவதாக இருந்தால்... அந்த genius, கடைக்கு சென்று fresh ஆ நெய்த துணியை வாங்க போவதில்லை (ஏற்கனவே பல shroud கள் forgery என புறம்தள்ளப்பட்டதை பார்த்து அதில் இருக்கும் தவறுகளை திரும்ப செய்யக்கூடாதென்று நினைத்திருப்பார்).
தன்பாலின ஈர்ப்பு பற்றிய எனது பதிவுகளில் மத நம்பிக்கையாளர்கள் வந்து தன்பாலின ஈர்ப்பாளர்களை படு கேவலமான வார்த்தைகளில் அர்ச்சிக்கிறார்கள். போலவே பெண்ணியம் சார்ந்த என் பதிவுகளில் வந்து அந்தப் பெண்களை அவல வார்த்தைகளில் விமர்சிக்கிறார்கள்.
அந்த எந்த கமெண்ட்டுகளையும் நான் நீக்குவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். எனவே தைரியமாக வந்து வண்டி வண்டியாக வசை பாடுகிறார்கள்.
அவர்கள் கமெண்ட் இடட்டும். அது பிரச்சினை இல்லை. ஆனால் எனக்கு இதில் ஒரு முக்கிய ஆச்சரியம் வருகிறது.
இந்த மத நம்பிக்கையாளர்கள் உலகில் பல்வேறு விஷயங்களை கேலி, கிண்டல், மற்றும் இழிவு செய்கிறார்கள். நாத்திகர்களை, பெண்ணியவாதிகளை, தன்பாலின ஈர்ப்பாளர்களை, பல நேரங்களில் அறிவியலாளர்களை என்று பல்வேறு தரப்பினரை இழிவு செய்கிறார்கள்.
Leonardo da Vinci ஏன் இப்படி ஒரு forgery யை உருவாக்க வேண்டும்? என்ன அவசியம் அவருக்கு?
Leonardo da Vinci ஒரு Catholic. பெரும்பான்மையான அவரது படங்கள் பைபிள் பற்றியதே. பலர் அவர் ஒரு atheist என்பார்கள்.
சர்ச்க்கு தெரியாமல் பிணங்களை எடுத்து ஆய்வு செய்பவர், ஓய்வு நாள் அன்று வேலை செய்வார், Vatican தடை செய்த alchemy ஆராய்ச்சியில் ஈடுபட்டார், அவரது எல்லா மதம் சார்ந்த படங்களிலும் ஒரு உள் குத்து இருக்கும் இதெல்லாம் அவர் சர்ச்க்கு எதிரானவர் என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது என்பார்கள்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவர் ஒரு curious ஆன ஆள். சுற்றி நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்டதை ஊருக்கு சொல்லணும். டார்வின் கூட atheist இல்லை. பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் priest தான்.
Carbon dating முடிவுகள் இது இயேசுவின் காலத்திய துணி இல்லை என்று அறிவித்ததும், இது 13ஆம் நூற்றாண்டின் துணி என்றதும், 'சரி அப்போ இது forgery யாக தான் இருக்க முடியும்' என்னும் முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள்.
Carbon dating மட்டுமே இந்த முடிவுக்கு வர காரணம் இல்லை. இந்த சோதனைக்கு முன்னரே பல சந்தேகங்கள் ஆய்வாளர்களிடம் இருந்தன.
ஒருவேளை இது இயேசுவின் துணியாக இல்லாமல் போனாலும், வேறு யாரையாவது அதே போல சாட்டையால் அடித்து முள் கிரீடம் வைத்து என பைபிள் விவரித்த exact scene ஐ recreate பண்ணி,
இதை தயாரித்து இருக்க வாய்ப்புண்டு. காரணம், முன்னரே சொன்னது போல அந்த காலத்தில் புனித பொருட்களுக்கு demand அதிகம். நிறைய காசு வசூலிக்கலாம் அது போக அது உங்களுக்கு தரும் அதிகாரம், ஊருக்குள்ள நல்ல பேரு, etc.
இன்னொரு காரணம் இயேசு ஒருவர் மட்டுமே சிலுவையில் அறையப்படவில்லை.
இது male privilege க்கும் பொருந்தும். பெண்களின் சுதந்திரம் என்பது நுகத்தடி மாட்டின் கயிற்றை போல. ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த கயிற்றின் நீளம் கூட குறைய இருக்கும் ஆனால் எல்லா பெண்களுக்கும் அந்த கயிறு உண்டு.
சில பெண்கள் வீட்டில் பெண் படிக்கவே கூடாது, சில இடத்தில் ஒரு degree படித்தால் போதும், சில இடத்தில் பெண்ணுக்கு என்று இருக்கும் படிப்புகளில் எது வேண்டுமானலும் படிக்கலாம், இப்படி சுதந்திரத்தின் அளவு கூட குறைய இருக்குமே தவிர முழு சுதந்திரம் என்பது பெண்களுக்கு கிடையாது.
(உடனே ஆண்கள் நாங்கள் மட்டும் விருப்பட்டதை படிக்கிறோமோ என்று கேட்கவேண்டாம். நீங்கள் ஒரு ஆண் என்பதால் உங்களுக்கு படிப்பு மறுக்கப்படுவதில்லை. உங்கள் வீடு சூழல் போன்ற வேறு காரணங்கள் இருக்கும். ஆனால் பெண் என்ற காரணத்திற்காகவே ஒரு பெண்ணுக்கு படிப்பு மறுக்கப்படுகிறது.
Wonder Woman படங்களில் Amazon பெண்களை பார்த்து இருப்பீர்கள். Homer எழுதிய The Iliad என்னும் கிரேக்க புராணத்தில் வரும் கதாபாத்திரங்கள் தான் Amazon பெண்கள். இந்த கதாபாத்திரத்தை எடுத்து கொஞ்சம் மசாலா சேர்த்து DC comics எடுத்தது தான் Wonder Woman படம்.
கதைப்படி, ஆண்களின் கைகளால் இறந்த பெண்களை கடவுள் Artemis (வேட்டையின் கடவுள்) மீண்டும் உயிர்த்தெழ வைத்து அவர்களுக்கு உறுதியான உடலும் வீரத்தையும் தருகிறார். இந்த பெண்கள் தான் Amazons. இவர்கள் Amazonia என்னும் பெண்கள் மட்டுமே இருக்கும் நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்புறம் ஒரு நாள் Hercules என்னும் உலகிலேயே யாராலும் தோற்கடிக்க முடியாத வீரன் Amazonia வை பற்றி கேள்விப்படுகிறான். ஆனால் எல்லாரும் அவனால் Amazons ஐ தோற்கடிக்க முடியாது என்கிறார்கள். as usual ஒரு ஆணாகிய Hercules இன் ஈகோவை உரசி பார்க்கிறது.