அன்பெழில் Profile picture
Aug 26, 2022 31 tweets 5 min read Read on X
#திருமுருக_கிருபானந்த_வாரியார் பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்த இவருக்கு எத்தனை நமஸ்காரங்கள் செய்தாலும் போதாது. வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூரில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியரின் 11 குழந்தைகளில் 4வது Image
குழந்தையாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை இவருக்குச் சூட்டினார். வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும்
வழங்கியதும் இவரே. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக் கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் 4 வருடங்கள் வீணை கற்றார் வாரியார். 8 வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். 5வது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர Image
தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப் பெற்றார் (கழுத்தில் சிவலிங்கம் அணிந்தார்). வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியைத் தனது 19ஆவது வயதில் திருமணம் புரிந்தார். தினமும் முருகனுக்கு பூஜை செய்த பின்பே உணவு உட்கொள்வது வழக்கம். தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி பூஜை Image
செய்தவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப் பாக்களை இன்னிசையுடன் பாடுவார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் பெற்றார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப்
புராணப் பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறினார். சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும்
பெரும்புலமை பெற்றவர். திருப்புகழ் உரை நடை, மகாபாரதம், கம்பராமாயணம், கந்த புராணம், பெரிய புராணம் என்று இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 200 இருக்கும். எம்பெருமான் திருவருளாலே #வயலூர்_எம்பெருமான் என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை! அவருடைய சொற்பொழிவுகளுக்கு இடையிடையே
குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பு இயல்பு. வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களை
பார்த்து வாரியார், "ராமாயணத்தில் அனுமனை 'சொல்லின்செல்வர்' என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்" என்றார். போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்து, "நான் நல்ல பல
விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன்" என்றார். எழுந்து சென்றவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர். வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப்
பேசுவது அவருக்குப் பிடிக்காது. பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக "மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது" என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இனிஷயலாக) போட்
வேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான். 20 வயதுக்கு மேல், மேல் சட்டை அணிந்தது இல்லை. ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு இரை தேடுவதோடு இறையையும் தேடு என்ற வார்த்தைகளையே எழுதிக் கையெழுத்து இடுவார்! 20-ஆம் நூற்றாண்டின் 2வது அருணகிரிநாதராக
விளங்கிய #பாம்பன்_சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்துள்ளார். ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய "நாம் என்ன செய்யவேண்டும்?" என்ற நூலை வாரியாரிடம் தந்தார். அந்த நூலைப
படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில்
எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்துள்ளார்.
இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.சு வாமிகள் 1936 ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்த
#திருப்புகழ்_அமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி #கைத்தலநிறைகனி என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை 37 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் Image
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார். அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர்த் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின. பாமர கொள்ளும்படி 500க்கும் மேற்பட்ட ஆன்மிக
கட்டுரைகள் எழுதியுள்ளார். வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத
தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும்
எழுதியுள்ளார். கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. "இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை
நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன்
உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்" என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார். உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும்,
விருதுகளையும் பெற்றிருக்கிறார். கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை
பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே வானிலேயேஅவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டிருந்தது. முருகன் அவன்
வாகனமான மயிலை அனுப்பி அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறான் போலும்! கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான காங்கேயநல்லூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே முருகன் கோவில் எதிரே #சரவணபொய்கை_குளம் என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் Image
உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. தற்போது இது "திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில்" ஆகியிருக்கிறது. காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால் தலையை 2006ஆம் Image
ஆண்டு வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. சிங்கபுரி நடராஐர் சன்னதி பிரகாரத்தில் வடகிழக்கே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருமேனி நிறுவப்பட்டுள்ளது. #அறிவோம்_மகான்கள்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾 Image
தமிழ் எழுத்துகளில் ஐ என்ற எழுத்தை திராவிட கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி தமிழ் எழுத்துகளில் ஒன்றாக வைத்து காப்பாற்றியவர் வாரியார் சுவாமிகள். இவர் 64 வது நாயன்மாராக போற்றப்பதுவதில் ஆச்சரியம் இல்லை. Image
@threadreaderapp unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 23
#வடநாகேஸ்வரம்_நாகேஸ்வரர்_கோயில்
குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்.

பாம்பு என்றாலே தீய சக்தி விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நம் சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது பாம்பின் அம்சமாக Image
கருதப்படுகின்றன. ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
தாயார் காமாட்சி அம்மன்
தீர்த்தம்: சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம்.
தல விருட்சம் செண்பக மரம்.
கோயில் வரலாற்றின் படி இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த அனபாயன் என்கிற சோழ மன்னன் அரசவையில் இப்பகுதியை சார்ந்த அருண்மொழி ராமதேவர் என்பவர் பணியாற்றினார். இவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் #சேக்கிழார் என அழைக்கப்பட்டார். இவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் ஆன #பெரியபுராணம்
Read 10 tweets
Jul 22
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்Image
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம் Image
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
Read 30 tweets
Jul 20
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டுImage
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, Image
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
Read 25 tweets
Jul 20
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர், Image
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்Image
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது. Image
Read 18 tweets
Jul 19
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்றImage
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் Image
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை Image
Read 16 tweets
Jul 19
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன் Image
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் Image
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப் Image
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(