Swathika Profile picture
Aug 27 57 tweets 11 min read
Shroud of Turin Part - 4

Da Vinci பிறப்பதற்கு 60 வருடங்களுக்கு முன் உண்டான துணி Shroud of Turin என்று carbon dating சொல்கிறது. டாவின்சி அவருடைய peak இல் அதாவது நிறைய படங்கள் வரைந்து கொண்டு இருந்த போது அவரது வயது 50.
அப்படியானால் 100 வருடங்களுக்கு முன்னால் உள்ள துணியை டாவின்சி எப்படி பயன்படுத்தி இருக்க முடியும்?
ஆனால் சாத்தியக்கூறுகள் இருந்தன. டாவின்சி அப்போது இருந்த Florence ஊர் அன்றைய trade center. உலகம் எங்கும் இருந்தும் பொருட்கள் அங்கு வந்து விற்பனையாகின.
டாவின்சி 1000 வருடங்கள் பழமையான ஒரு relic ஐ உண்டாக்க போவதாக இருந்தால்... அந்த genius, கடைக்கு சென்று fresh ஆ நெய்த துணியை வாங்க போவதில்லை (ஏற்கனவே பல shroud கள் forgery என புறம்தள்ளப்பட்டதை பார்த்து அதில் இருக்கும் தவறுகளை திரும்ப செய்யக்கூடாதென்று நினைத்திருப்பார்).
கண்டிப்பாக 1000 வருடம் பழமையான துணியாக இல்லாவிடினும் குறைந்தபட்சம் 100 வருடம் பழமையான துணியை தேடி கண்டுபிடித்து இருப்பார். அல்லது பாரம்பரிய மிக்க Savoy குடும்பமே கூட குடுத்து இருக்க கூடும்.
அதனால் துணியின் காலம் கூட இப்போது முக்கியம் அல்ல.
'அந்த முகம் எப்படி வந்துச்சு? அதை சொல்லுங்கப்பா. சந்தைக்கு போகனும் ஆத்தா வையும்' என்று அறிஞர்கள் மூளையை குடைந்தார்கள். 90s kids க்கு மோகன் நடித்த உருவம் படம் பீதியை கிளப்பியது என்றால் 90s scientist க்கு இந்த shroud of Turin உருவம் எப்படி வந்தது என்ற கேள்வி பீதியை கிளப்பியது.
ஒரு சாரார் இப்படி மண்டையை குடைய, forensic anthropologist Emily Craig "இது சரி இல்லப்பா. human anatomy correct ஆ இல்ல. உடம்புக்கும் தலைக்கும் ratio சரி இல்ல. முன் புற உடலுக்கும் பின்புற உடலுக்கும் height வேறுபடுகிறது." என்று குட்டையை குழப்பினார்.
இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடித்தார், Nicholas Allen என்னும் வரலாற்று ஆய்வாளர். 'இது உலகின் முதல் புகைப்படம்' என்னும் பெரிய சுறா மீனை குட்டையில் இருந்து எடுத்தார்.
பாபநாசம் படத்தில், இந்த perfection தான் என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு என போலீஸ் சொல்வது போல...
எல்லாருக்கும் ஆரம்பத்தில் இருந்து மனதை உறுத்திக்கிட்டே இருந்தது அந்த போட்டோ effect தான். 'போட்டோ மாதிரியே இருக்கேப்பா...' என்று தான் வியப்படைந்தார்கள். அது ஏன் போட்டோவாவே இருக்க கூடாது? என்று Nicholas Allen சிந்தித்தார்.
வெறும் துணியை சாதாரணமாக பார்த்தால் முகம் தெளிவாக தெரிவது இல்லை (ஒரு போட்டோவின் negative போல.) ஆனால் அந்த துணியை போட்டோ எடுத்ததும் ஒரு மனிதனின் முகம் நன்றாக தெரிகிறது. துணி negative, அதிலிருந்து நாம் எடுக்கும் photo positive என்றார்.
குழப்பமா இருக்கா? வரேன்...
19ஆம் நூற்றாண்டில் தான் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனா அதற்கு முன்னோடியான "camera obscura" 1ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் இருந்து இருக்கிறது. (camera obscura பற்றி விரிவாக #அதை_நான்_அப்புறமா_சொல்றேன். அல்லது என்னை விட master ji @HilaalAlamTamil தெளிவாக சொல்ல கூடும்.)
இதை முதல் முறையாக 5 BCE இல் சீன தத்துவியலாளர் Mozi, அவரது குறிப்புகளில் எழுதி இருக்கிறார். அதன்பின் பலர் camera obscura வை பற்றி ஆராய்ந்து இருக்கிறார்கள். இதில் ஒளி, ஒரு சிறிய துளை வழியாக சென்று துளையின் எதிர் சுவரில் ஒரு தலைகீழ் படத்தை உருவாக்கும்.
அதை அப்படியே கைகளால் trace எடுத்து ஒரு படமாக ஆக்கினார் Mozi. (Pinhole camera என்று பள்ளி science exhibition இல் பிள்ளைகள் எல்லாம் செய்வார்கள் இல்லையா அதுதான்.) இவர்கள் எல்லாருமே science exhibition மாதிரி இதை செய்து காட்டவும், கைகளால் trace எடுத்து படம் வரையவும்,
சூரிய கிரகணத்தை இம்முறையில் பார்த்து ஆராய்ச்சி செய்யவும் தான் camera obscura வை பயன்படுத்தினார்களே ஒழிய யாரும் புகைப்படம் எடுக்க முயலவில்லை. தேவையான வேதியல் பொருட்கள் இல்லாமல் இருந்து இருக்கக்கூடும். அல்லது எந்த வேதியல் பொருள் எந்த effect தரும் என அறியாமல் இருந்து இருப்பார்கள்.
சரி, அதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த camera obscura முறையை பின்பற்றி Nicholas Allen துணியில் புகைப்படம் எடுக்க முயன்றார். ஒரு linen துணியை silver sulfate/silver nitrate இல் நனைத்து பின் காய வைத்து ஒரு இருட்டு அறைக்குள் வைக்க வேண்டும்.
silver salts துணியில் பிரதிபலிக்கும் பிம்பத்தை அந்த துணியில் அப்படியே தக்க வைக்கிறது. ஒளியை capture செய்கிறது. அந்த இருட்டு அறைக்கு ஒரு துளை வழியாக (அந்த துளையில் லென்ஸ் வைக்கும் போது பிம்பத்தின் sharpness accuracy அதிகமாகிறது) வெளிச்சம் செல்ல வேண்டும்.
அந்த பாதையில் ஒரு மனித அளவு பொம்மையை தொங்க விட்டு shroud of Turin ஐ re-create செய்ய முயன்றார் Allen. இதற்கு Allen பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் லியோனார்டோ காலத்தில் தாராளமாக கிடைக்கும் பொருள்.
Light sensitive silver sulfate துணியில் லென்ஸ் வழியாக வரும் ஒளி அந்த மனித பொம்மையின் உருவத்தை தலைகீழாக பதிக்கிறது. இந்த துணியை சூரிய வெளிச்சத்தின் அடியில் காட்டும்போது silver sulfate UV யுடன் react செய்து நிற மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு ஒரு 3 நாட்கள் ஆகிறது.
இருட்டில் தெரியும் இந்த உருவம் வெளிச்சத்தில் தெரிவது இல்லை. அதே சமயம் இதை புகைப்படம் எடுக்கும் போது தெள்ளத்தெளிவாக ஒரு மனித உருவத்தின் போட்டோ effect நமக்கு கிடைக்கிறது.
சரி silver sulfate துணியில் இருப்பதை microchemical analysis செய்யும் போது கண்டுபிடிக்கவில்லையா எனக்கேட்கலாம்.
silver sulfate துணியை ammonia solution இல் wash பண்ணும்போது ammonia, silver sulfate ஐ துணியில் இருந்து நீக்குகிறது. இந்த ammonia எங்கு கிடைக்கும்? மனித சிறுநீரில்!
so paint இல்லாம, fire scorching இல்லாம எந்த chemical உம் இல்லாம நமக்கு shroud of Turin போல exact replica கிடைக்குது. ஒரு குட்டி பிரச்சனை. forensic anthropologist Emily Craig, anatomy ratio சரி இல்லன்னு சொன்னாங்களே...
ஆனா Nicholas Allen எடுத்த போட்டோவில் anatomy நல்லா தானே இருக்கு என்று அடுத்த கேள்வி வருகிறது.
இதற்கும் Allen னிடம் பதில் இருக்கு shroud of Turin ஒரு single photo அல்ல! 3 போட்டோக்களின் ஒருங்கிணைப்பு. கழுத்தில் இருந்து உடல் வரை ஒரு போட்டோ, அதற்கு முகம் மட்டும் தனியாக ஒரு போட்டோ,
பின் உடலின் பின்புறம் முழுவதும் தலையுடன் ஒரு போட்டோ. இப்படி ஒரே துணியில் 3 முறை தனித்தனியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது என்கிறார். அதனால் தான் Emily Craig சொன்னது போல் உடம்புக்கும் தலைக்கும் உள்ள ratio, முன்புற உடலுக்கும் பின்புற உடலுக்கும் உள்ள height வேறுபடுகிறது.
போட்டோ எடுத்து முடித்ததும், உண்மையான மனித ரத்தத்தை காயங்களுக்கு ஏற்றவாறு அந்த துணியில் இருக்கும் உருவத்தில் தடவ வேண்டியதுதான். வேலை முடிந்தது. இது நம்ம Da Vinci பிரமாதமா செஞ்சு முடிச்சுருவாரு.
அவருக்கு உடற்கூராய்வு பற்றிய அறிவு அதிகம், brush stroke தெரியாமலே paint பண்ணுவதில் வல்லவர்.
ஆனா அவருக்கு camera obscura வை பற்றி தெரியுமா?
இப்படி ஒரு கேள்வியை கேட்டால் சின்ன குழந்தை கூட என்னை பார்த்து முறைக்கும்.
தனது Atlantic Codex என்னும் நோட்டில் camera obscura வை பற்றி மிக விலாவரியாக எழுதி, கையடக்க camera obscura வை எப்படி உண்டாக்கலாம்? அதற்கு மாதிரி வரைபடங்கள் எல்லாம் வரைந்து வைத்திருக்கிறார் அதற்கு Oculus artificialis (artificial eye) என்று பெயர் எல்லாம் வைத்திருக்கிறார்.
மனிதனின் கண்ணும் camera obscura வும் எப்படி ஒரே principle லில் இயங்குகிறது என பல ஆராய்ச்சி கட்டுரை வேறு எழுதி இருக்கிறார். இந்த ஆராய்ச்சி ல contact lens பற்றி கூட லேசா ஒரு ஐடியா வை தெளித்து விட்டு போயிருக்கிறார்.
இவ்வளவு தெரிஞ்ச Da Vinci ஏன் நிறைய போட்டோ எடுக்கல? வெறும் Shroud of Turin மட்டும் தானே அந்த கால photography என்பதற்கு ஒரே ஆதாரமாக இருக்கு. ஒருவேளை போட்டோ எடுக்க Da Vinci கற்று கொண்டு இருந்தால், போட்டோவா எடுத்து தள்ளி இருக்க மாட்டாரா? ஏன் செய்யல?
இதற்கு 2 காரணங்கள் சொல்லலாம். ஒன்று, இப்படி ஒரு technique இருக்கு என்று தெரிந்தால் தன்னுடைய Shroud உம் de Charny குடும்பத்தின் Shroud ஐ போலவே forgery என்று கண்டுபிடிக்கப்பட்டு விடும். அவர் இந்த Shroud ஐ எங்குமே எழுதி வைக்கவில்லை என்பது உங்களுக்கு நியாபகம் இருக்கும்.
அடுத்து, அக்காலத்தில் ஓவியர்கள் camera obscura வை கடுமையாக எதிர்த்தார்கள். ஏனென்றால் பாதி பேர் பிம்பத்தை சில மணி நேரங்களில் trace செய்து இதான் ஓவியம் என்று விற்று கொண்டு இருந்தார்கள். இது அசலை பார்த்து பல நாள் கண், கை, எல்லாம் வலிக்க பொறுமையாக அமர்ந்து வரைந்த
உண்மையான ஓவியர்களுக்கு எரிச்சலை மூட்டியது. அதுவும் போக, இது படி படியாக முன்னேற்றம் அடைந்து இன்றைய போட்டோ copy போல... அன்று வந்து இருந்தால் பல ஓவியர்களுக்கு வேலை போகும் அபாயம் இருந்தது.
நிமிடத்தில் நம்மை ஆச்சு அசலாக போட்டோ எடுக்க முடிந்தால், எந்த ராஜா/ராணி நாட்கணக்கில் ஓவியத்திற்கு pose குடுக்க முன்வருவார்கள்? தத்ரூபமாக ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கு இருக்கும் மதிப்பு சடாரென்று சரிந்துவிடும்.
இன்று எப்படி 'அய்யய்யோ மிக்ஸியில் அரைத்தால் சுவையே இருக்காது, நம்ம பாரம்பரியம் கலாச்சாரமே போச்சு. அம்மியில் அரைத்தால் தான் உடலுக்கு சக்தி, பண்பாடு எல்லாம்' என்று கூவுகிறார்களோ அன்றும் அது போல கூவி இருக்க கூடும்.
அதனால் வந்த வதந்திகள் தான் போட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சிரும் என்பதாக கூட இருக்கலாம்.
இவ்வளவு ஏன்? பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல...
இந்த பக்கம் camera obscura வை ஆராய்ச்சி செய்து கொண்டே அந்த பக்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தான் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளார் நம்ம டாவின்சி.

என்ன ஒரு வில்லத்தனம்?!
வழக்கமா அறிவியல் முன்னேற்றங்களை ஆதரிக்கும் டாவின்சி, இப்படி out of character மாதிரி ஒரு விஷயம் பண்ணும்போது something fishy இல்ல?
ஏதோ ஒரு திருட்டு வேலை பண்ணி இருக்கிறார் என்பது நல்லாவே தெரியுது.
இவ்வளவு dramatic ஆ அவர் எதிர்ப்பு காட்டுவதற்கு இன்னொரு காரணமும் இருக்க கூடும். அதுதான் punchline!

இந்த shroud of Turin, ஒரு 3 போட்டோவின் ஒருங்கிணைப்பு என்று பார்த்தோம். இதுல இந்த உடல் பகுதி எல்லாம் எங்கையோ ஒரு mortuary ல இருந்து கொண்டு வந்து இருப்பார் with காயங்கள்.
அல்லது ஒரு பொம்மை உபயோகப்படுத்தி இருக்கலாம். அதெல்லாம் ஒரு matter இல்லைன்னு வைங்க. இந்த முகம் இருக்கு பாத்தீங்களா முகம்! அதுதான் matter!
நான் முன்பே சொன்னது போல, இயேசு இப்படித்தான் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை and அவர் கண்ண பாருயா... அவர் நடையை பாருயா... என்று யாரும் அவரது புற அழகை விவரித்து எழுதவும் இல்லை.

அவர் கடவுளின் மகன் அழகாக தான் இருப்பார்.
அதனால் அவரவர் எதை அழகென்று நினைத்தார்களோ அதற்கு ஏற்ப கற்பனை செய்து கொண்டார்கள். நீள முடி அழகென்று நினைத்தவர் ஏசுவிற்கு நீள முடி வைத்து படம் வரைந்தார். தாடி இல்லாமல் clean shave தான் அழகு என்று நினைத்தவர்கள் தாடி இல்லாமல் வரைந்தார்கள்.
இப்படி அவரவர்க்கு இருக்கும் social standards படி வரைந்தார்கள்.
முன்னாடி இருந்த ராமர் படத்திற்கும் இப்போ இருக்கும் ராமர் படத்திற்கும் வித்தியாசம் இருப்பதை note பண்ணி இருக்கீங்களா? முன்னாடி இருந்த ராமர் படம் நல்ல chubby யா feminine features ஓட cute ஆ இருப்பார்.
ஆணின் அழகு standards அன்றைய காலத்தில் அப்படி இருந்தது. இன்றைய படங்களை பார்த்தால் 6 packs, கோவமான கண்கள், அம்பு எய்த மாதிரியே பறப்பது என பயங்கர masculine ஆ மாறிட்டார். social standards மாறிடுச்சு.
இதே போலதான் இயேசுவின் உருவமும் ஒவ்வொரு ஊருக்கு ஏத்த மாதிரி, ஆளுக்கு ஏத்த மாதிரி மாறும். shroud of Turin வந்தப்புறம் தான், இதுதான் இயேசுவின் முகமைப்பு, தாடி மீசை, தோள் வரை இருக்கும் முகம் என்று fix ஆனது. இந்த முகமைப்பை டாவின்சி எப்படி கொண்டு வந்தார்? எது அவரை inspire செய்தது?
இதற்கு Freud, டாவின்சியை பற்றி சொல்வதை நாம் பார்க்கவேண்டும். இவரது படங்களை Freud ஆராய்ந்து பார்க்கும்போது, இயேசு இடத்தில் அதாவது கடவுளின் இடத்தில் தன் முகத்தையே வைத்து வரைவது டாவின்சியின் பழக்கமாக இருக்கிறது என்கிறார்.
தன்னையே வைத்து வரைவது டாவின்சிக்குள் இருக்கும் narcissistic குணத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார் Freud. தன்னை தானே வரைந்து கொண்ட self portrait களும் உண்டு. Monalisa முகம் கூட டாவின்சியின் முகம் தான் என்கிறார்கள்.
Lillian Schwartz என்னும் graphic artist, உலகின் அழகான பெண் Monalisa வின் முகம் டாவின்சி என்றார். இவர் தான் shroud of Turin இல் இருக்கும் முகமும் டாவின்சியினுடையது என்கிறார்.
மனித முகம் என்பது தனித்துவமானது. இன்றைய facial recognition அதனடிப்படையில் தான் செயல்படுகிறது.
டாவின்சியின் self portrait, Monalisa, shroud of Turin முகம் மூன்றையும் ஆராய்ந்த போது மூன்றுக்கும் face proportions ஒன்றாக இருப்பதை கண்டார்கள்.
Monalisa படத்தை எங்க போனாலும் கைலயே தூக்கிட்டு சுத்திகிட்டு இருந்த Leonardo Da Vinci, அந்த படத்தை பற்றி எங்கேயும் எழுதி வைக்கல.
(தன்னுடைய படைப்புகள் எல்லாவற்றை பற்றியும் குறிப்பெழுதுவது அவரது பழக்கம்) அதே போல இந்த shroud of Turin பற்றியும் அவர் எங்கேயும் மூச்சு காட்டல.
Freud, திரும்ப திரும்ப டாவின்சி ஒரு narcissist என்பதை அவரது படங்கள் மூலமே தெளிவாக விளக்கி இருக்கிறார்.
அதாவது தன்னை பற்றி மேன்மையாக நினைக்கும் குணம். அது இன்னொரு விஷயத்திலும் நிரூபணம் ஆகிறது. சமீபத்தில் perfect face as per Golden Ratio, Amber Heard மற்றும் Robert Pattinson என்று பார்த்திருப்பீர்கள். இந்த perfect face Golden Ratio வையும் நம்ம டாவின்சி ஆராய்ந்து கொண்டு இருந்தார்.
அதற்கு மாதிரி படங்கள் யாரினுடையதாக இருந்து இருக்கும்? கரெக்ட் அவர் முகம் தான். அவர் முகத்தை வைத்து Golden Ratio கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். அப்படி அவர் முகத்தை வைத்து ஆராய்ந்த அந்த முகத்தையும் ஒப்பிட்டு பார்த்து இருக்கிறார்கள்.
இதுக்கு எதுக்கு உருட்டிக்கிட்டு என்பது போல, yes! அதுவும் ஒத்துபோகிறது. இன்னொன்னு கூட இருக்கு. உலகின் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் Salvator Mundi என்னும் இயேசுவின் ஓவியம். அதை வரைந்தது யாரு? அந்த இயேசுவின் முகம் யாருடையது? என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
ஆக தனது முகத்தை யேசுவிற்கு வைத்து... அதுதான் இயேசுவின் சடலத்தை மூடி இருந்த துணி என்று அவர் ஊராரை நம்ப வைத்து இருந்தால், அவரது crime rate உச்சத்திற்கு செல்கிறது. போலி shroud ஐ உண்டாக்கினத்தை கூட மக்கள் மன்னித்து விடுவார்கள்.
ஆனால் இயேசுவின் முகத்திற்கு பதில் இவரது முகம் என்பது Blasphemy. கடவுளை அவமானபடுத்துவதற்கு சமம். அதை இன்றைய மக்களே மன்னிப்பதில்லை. அருவாளை தூக்கிட்டு வராங்க. அன்றைய தேதியில் அவரது நிலைமையை நினைத்து பாருங்கள்.
அதனாலே அவர் shroud of turin பற்றி கமுக்கமாக இருந்து இருக்க கூடும், 'அய்யய்யோ camera எல்லாம் ரொம்ப தப்புங்க ச்சீ ச்சீ' என்று acting ஐ யும் போட்டு இருந்து இருக்க கூடும்.

கெட்ட பய சார் இந்த டாவின்சி.
so பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு! carbon dating 13ஆம் நூற்றாண்டுன்னு சொல்லுது, ஒரே மர்மமாக இருந்த அந்த உருவத்தை எப்படி உருவாக்கலாம் என்று செய்முறை விளக்கம் வேறு காட்டியாச்சு.
Leonardo Da Vinci தான் இதை உருவாக்கினார் என்று ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை என்றாலும் பல சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவர்தான் செய்திருக்க கூடும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. என்னப்பா அறிவிச்சுறலாமா?....
அப்படினு தீர்ப்பு சொல்லும்போது கொக்கி குமாரு entry ஆகி அரிவாளை தூக்குறான். யாரு அந்த கொக்கி குமாருன்னு கேக்கறீங்களா?

அது "Sudarium of Oviedo"

தொடரும்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

Aug 29
Shroud of Turin - Part 5

கொக்கி குமாரு entry ன்னு சொன்னேன்ல, அந்த கொக்கி குமாரு Sudarium of Oviedo! என்ன இது Sudarium of Oviedo? அதுக்கு ஒரு பைபிள் வசனத்தை நாம பார்க்க வேண்டி இருக்கு... Image
யோவான் 20:6 சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, 7 சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
இதில் "அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை" அப்படின்னு இருக்கு பார்த்தீங்களா, அது தான் Sudarium of Oviedo. "மற்றச் சீலைகளுடனே" என்பது Shroud of Turin மற்றும் கால் கையை கட்ட உபயோகப்படுத்தப்பட்ட துணி கயிறுகளாக இருக்கலாம்.
Read 25 tweets
Aug 27
ஸ்ரீதர் சுப்ரமணியம்

தன்பாலின ஈர்ப்பு பற்றிய எனது பதிவுகளில் மத நம்பிக்கையாளர்கள் வந்து தன்பாலின ஈர்ப்பாளர்களை படு கேவலமான வார்த்தைகளில் அர்ச்சிக்கிறார்கள். போலவே பெண்ணியம் சார்ந்த என் பதிவுகளில் வந்து அந்தப் பெண்களை அவல வார்த்தைகளில் விமர்சிக்கிறார்கள்.
அந்த எந்த கமெண்ட்டுகளையும் நான் நீக்குவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். எனவே தைரியமாக வந்து வண்டி வண்டியாக வசை பாடுகிறார்கள்.
அவர்கள் கமெண்ட் இடட்டும். அது பிரச்சினை இல்லை. ஆனால் எனக்கு இதில் ஒரு முக்கிய ஆச்சரியம் வருகிறது.
இந்த மத நம்பிக்கையாளர்கள் உலகில் பல்வேறு விஷயங்களை கேலி, கிண்டல், மற்றும் இழிவு செய்கிறார்கள். நாத்திகர்களை, பெண்ணியவாதிகளை, தன்பாலின ஈர்ப்பாளர்களை, பல நேரங்களில் அறிவியலாளர்களை என்று பல்வேறு தரப்பினரை இழிவு செய்கிறார்கள்.
Read 15 tweets
Aug 26
Shroud of Turin Part - 3

Leonardo da Vinci ஏன் இப்படி ஒரு forgery யை உருவாக்க வேண்டும்? என்ன அவசியம் அவருக்கு?

Leonardo da Vinci ஒரு Catholic. பெரும்பான்மையான அவரது படங்கள் பைபிள் பற்றியதே. பலர் அவர் ஒரு atheist என்பார்கள்.
சர்ச்க்கு தெரியாமல் பிணங்களை எடுத்து ஆய்வு செய்பவர், ஓய்வு நாள் அன்று வேலை செய்வார், Vatican தடை செய்த alchemy ஆராய்ச்சியில் ஈடுபட்டார், அவரது எல்லா மதம் சார்ந்த படங்களிலும் ஒரு உள் குத்து இருக்கும் இதெல்லாம் அவர் சர்ச்க்கு எதிரானவர் என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது என்பார்கள்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவர் ஒரு curious ஆன ஆள். சுற்றி நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்டதை ஊருக்கு சொல்லணும். டார்வின் கூட atheist இல்லை. பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் priest தான்.
Read 24 tweets
Aug 26
Shroud of Turin - Part 2

Carbon dating முடிவுகள் இது இயேசுவின் காலத்திய துணி இல்லை என்று அறிவித்ததும், இது 13ஆம் நூற்றாண்டின் துணி என்றதும், 'சரி அப்போ இது forgery யாக தான் இருக்க முடியும்' என்னும் முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள்.
Carbon dating மட்டுமே இந்த முடிவுக்கு வர காரணம் இல்லை. இந்த சோதனைக்கு முன்னரே பல சந்தேகங்கள் ஆய்வாளர்களிடம் இருந்தன.
ஒருவேளை இது இயேசுவின் துணியாக இல்லாமல் போனாலும், வேறு யாரையாவது அதே போல சாட்டையால் அடித்து முள் கிரீடம் வைத்து என பைபிள் விவரித்த exact scene ஐ recreate பண்ணி,
இதை தயாரித்து இருக்க வாய்ப்புண்டு. காரணம், முன்னரே சொன்னது போல அந்த காலத்தில் புனித பொருட்களுக்கு demand அதிகம். நிறைய காசு வசூலிக்கலாம் அது போக அது உங்களுக்கு தரும் அதிகாரம், ஊருக்குள்ள நல்ல பேரு, etc.
இன்னொரு காரணம் இயேசு ஒருவர் மட்டுமே சிலுவையில் அறையப்படவில்லை.
Read 14 tweets
Aug 25
shroud of Turin
வரலாற்றில் இதை ஆராய்ந்ததை போல வேறு எதையும் ஆராய்ந்து இருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கு மேலாக புதிது புதிதாக வரும் எல்லா technology களை கொண்டு ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் இது போலி என்றாலும் மக்களுக்கு இதன் மீதான நம்பகத்தன்மை குறைந்ததே இல்லை.
அது shroud of Turin! இத்தனை ஆண்டு காலமாக பல கோடி மக்களை ஆணித்தரமாக இதன் மேல் நம்பிக்கை வைக்க காரணம் பக்தியா? அல்லது இதை உருவாக்கிய the great Leonardo da Vinci யின் மேஜிக்கா?
Shroud of Turin என்றால் என்ன? இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், Arimathea என்னும் ஊரை சேர்ந்த Joseph என்னும் பணக்காரர், அவரது உடலை ஒரு linen துணியில் சுற்றி அவருக்கு சொந்தமான குகையில் வைக்கிறார்.
Read 59 tweets
Aug 24
இது male privilege க்கும் பொருந்தும். பெண்களின் சுதந்திரம் என்பது நுகத்தடி மாட்டின் கயிற்றை போல. ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த கயிற்றின் நீளம் கூட குறைய இருக்கும் ஆனால் எல்லா பெண்களுக்கும் அந்த கயிறு உண்டு.
சில பெண்கள் வீட்டில் பெண் படிக்கவே கூடாது, சில இடத்தில் ஒரு degree படித்தால் போதும், சில இடத்தில் பெண்ணுக்கு என்று இருக்கும் படிப்புகளில் எது வேண்டுமானலும் படிக்கலாம், இப்படி சுதந்திரத்தின் அளவு கூட குறைய இருக்குமே தவிர முழு சுதந்திரம் என்பது பெண்களுக்கு கிடையாது.
(உடனே ஆண்கள் நாங்கள் மட்டும் விருப்பட்டதை படிக்கிறோமோ என்று கேட்கவேண்டாம். நீங்கள் ஒரு ஆண் என்பதால் உங்களுக்கு படிப்பு மறுக்கப்படுவதில்லை. உங்கள் வீடு சூழல் போன்ற வேறு காரணங்கள் இருக்கும். ஆனால் பெண் என்ற காரணத்திற்காகவே ஒரு பெண்ணுக்கு படிப்பு மறுக்கப்படுகிறது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(