மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது.
இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும்.
வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது.
பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது.
இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது.
மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது.
மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள்.
பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.
பூஜிப்பது ஏன்?
உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது.
அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது.
இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது.
மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது.
கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது.
ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான -எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர்.
உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர்.
இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.
ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்து விடும்.
கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் தற்காலிகமாக வைத்து வழிபட்ட விநாயகரை ஆற்றில் சென்று கரைத்து விடுவார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அள்ளி எடுத்து சென்று விடும். அதனால் அவ்விடத்தில் நீர், நிலத்தடியில் இறங்காமல் ஓடிக் கடலில் சேர்ந்து விடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும்.
நம் முன்னோர்கள் நீர் ஆற்றில் தங்குவதற்கு கெட்டியான களிமண்ணை ஆற்றில் கரைத்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து ஆற்று நீரை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்று இதற்கொரு தீர்வு கண்டனர்.
விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன?
1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது
2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது
4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது
5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்
6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது
7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்
8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து பகிறவும்...
கும்பாபிஷேகத்தின் வகைகள்.
1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.
2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலை புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.