ஒவ்வொரு ஆண்டும் செப் 5 அன்று சொல்றது தான். உங்களுடைய அருமையான ஆசிரியர்களுக்கு, அடுத்தவன் ஆய்வுக்கட்டுரைய ஆட்டைய போட்டவரோட பொறந்த நாளை ஆசிரியர் நாள் நெனச்சு வாழ்த்து சொல்லப் போறீங்களா?
மேற்குலகத்தை அறிவு இல்லாத குருடர்கள்னு சொல்லிட்டு, இங்கிலாந்து Knight பட்டம் குடுக்குறான்னதும் குடுகுடுன்னு ஓடிப் போயி வாங்குன கடைஞ்செடுத்த opportunist கூட ஒப்பிடப் போறீங்களா?
தனக்குப் பிறந்தநாள் வாழ்த்த வந்த மாணவர்கள் கிட்ட இந்த வாத்திக்கு எதுக்குப்பா வாழ்த்துல்லாம், வேணும்னா என் பொறந்தநாளை இனிமே வாத்தியார் நாளாக் கொண்டாடுங்கன்னு சொல்ல, அதையே lobbying மூலமா, எந்தவொரு அரசாணையும் இல்லாம நடைமுறையாக்கிருக்காங்க, இதைக் கொண்டாடணுமா?
உலக ஆசிரியர் நாள் அக். 5, இல்ல, இந்திய ஆசிரியர் நாள்னு ஒன்னு வேணும்னா, எல்லாரும் படிக்கணும்னு நெனச்சு ஊரே சேறை வாரித் தூற்றினாலும், கடந்து வந்து ஆசிரியராக வாழ்ந்து காட்டிய சாவித்திரிபாய் பூலே பிறந்தநாளை ஜனவரி 3 இந்திய ஆசிரியர் நாளாகக் கொண்டாடுவோம்.
நம்மைச் செதுக்கி, அறிவொளி ஏற்றும் நல்லாசிரியர்களை, narcissistic opportunistic plagiarist கூட ஒப்பிட்டு அவர்களை இழிவு படுத்தாம இருப்போம் நண்பர்களே...
இனிய ஆசிரியர் நாள் மக்களே... நம்மைச் செதுக்கி நாம் இன்றிருக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல ஏணிப்படியாய் நின்ற ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்.
ஒரு பெண் வீட்டை விட்டு வெளிவருவதே குற்றமாய்ப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில், ஊரே சேறும், மண்ணும் வாரி இறைத்த போதும், தான் கற்றதை மற்றவர்க்குக் கல்வியாய்ப் புகன்ற சாவித்திரிபாய் புலேவின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் நாளாய்க் கொண்டாடுவோம்.
Age of Consent Act 1891 சட்டமியற்றப்பட்ட போது, 'ஐயயோ, 12 வயசு வரைக்கும் திருமணம் செய்யக்கூடாதுன்னு சட்டம் போடுறானே வெள்ளைக்காரன், லோகம் கெட்டுடாதோ, தர்மம் என்னாவுறது?'ன்னு கதறுனாரு திலக்...
இந்தச் சட்டம் கொண்டு வர காரணமாய் அமைந்தன இரு வழக்குகள்
இரு வழக்குகளும் இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வழக்குகள்.
வழக்கு 1: 10 வயது பெண்ணான புல்மோனியை 38 வயது ஹரி மோகன் என்பவர்க்கு மணம் செய்து வைக்க, கட்டாய வன்புணர்வினால் இறந்து போகிறாள் புல்மோனி. தன் தவறை உணர்ந்த புல்மோனியின் தாய்
வழக்கு தொடர, பல விவாதங்களுக்குப் பிறகும், ஹரிமோகனுக்கு manslaughter (உயிர் போகும்படி தாக்குதல்) பிரிவில் தீர்ப்பளித்த நீதிமன்றம் கூட, திருமணம் ஆகிவிட்டதால் வன்புணர்வு இல்லைன்னு சொல்லுச்சு.
இப்படி வழக்கு தொடர்ந்ததுக்கே திலகர் உள்ளிட்டோர் கொந்தளிச்சுட்டாங்க.
சித்த மருத்துவத்தைப் பேசி பேசுனா பட்டி டிங்கரிங் பாத்துடலாம். ஆனா, டீச்சர் என்ன கிள்ளி வச்சுட்டான் ரேஞ்சுக்கு அழத் தொடங்கிடுவாங்க.
மூலிகை, இலை, தழை, தண்டு, வேர், பட்டை எல்லாம் கரிம / கனிம வேதிப்பொருட்களால் ஆனவை என்பது அறிவியல் அறிந்தவர் அறிந்ததே. 👇
எந்த ஒரு வேதிப்பொருளும் வெவ்வேறு வகையாக வினைகளில் ஈடுபடும் என்பதும், அந்த வினைகளில் நமக்குத் தேவையில்லாத வினைகளும் இருக்கும் (அதாவது பக்கவிளைவு) என்பதும் அறிவியல் சொல்கிறது.
இப்படி இருக்க, இந்த இலையின் சாறு இத்தனை ஆழாக்கு குடிக்கணும்னு ஒரு மருத்துவமுறை சொல்ல, அதில் என்னென்ன 👇
வேதிப்பொருட்கள் இருக்குன்னு, அது எப்படி எப்படி வேலை செய்யும், அதுக்கு என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கு என்பதைப் பற்றி எந்தத் தகவலும் கேட்டா, பக்கவிளைவுகளே இல்லை என்பது பதிலாக வருகிறதுன்னு வச்சுக்குவோம்.
பக்கவிளைவே இல்லையா பக்கவிளைவுகள் குறித்த தகவல் இல்லையான்னு தோனுமா இல்லயா? 👇
கடல்நீரைக் குடிநீராக்கல் (Desalination) குறித்து, சு.சா போன்ற புல்லறிவாளர்களேப் பேசும் போது, அத்துறையில் பணி புரியும் நானும் தெரிந்ததைச் சொல்ல இந்த இழை... 👇👇👇
உவர்நீக்கல் - Desalinationக்குச் சரியான தமிழாக்கமாக இருக்கலாம். கடல்நீரின் உவர்ப்புச்சுவை நீக்கி குடிக்க ஏற்ற நீராய் மாற்றல்.... கடல் நீரில் கரைந்துள்ள உப்பு, கரியமில வாயு ஆகியவற்றை நீக்கி, பின் குடிக்க ஏதுவாக சில உப்புக்களைக் கலந்து குடிநீராக்கல்...
உப்பு நீக்கல் பொருத்து, பொதுவாக இருவகைப்படும்... 1. காய்ச்சி வடித்தல் (Distillation) 2. எதிர்மறை சவ்வூடுபரவல் (Reverse Osmosis)