முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 Profile picture
|| பொறியாளன் || தமிழ்ப்பயிலன் || வலைப்பூ பதிவன் || இன்சொலன் || குறளெழுதி || O+ve || #குறள்மொழி || #தமிழ்ப்பா || 𑀫𑀼𑀝𑀺𑀯𑀺𑀮𑀺 || #NeverVoteBJP || ムヂヴィリ
Jan 3, 2023 4 tweets 2 min read
இனிய ஆசிரியர் நாள் மக்களே... நம்மைச் செதுக்கி நாம் இன்றிருக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல ஏணிப்படியாய் நின்ற ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்.

#HappyTeachersDay #Jan3 ஒரு பெண் வீட்டை விட்டு வெளிவருவதே குற்றமாய்ப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில், ஊரே சேறும், மண்ணும் வாரி இறைத்த போதும், தான் கற்றதை மற்றவர்க்குக் கல்வியாய்ப் புகன்ற சாவித்திரிபாய் புலேவின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் நாளாய்க் கொண்டாடுவோம்.
Sep 5, 2022 5 tweets 2 min read
ஒவ்வொரு ஆண்டும் செப் 5 அன்று சொல்றது தான். உங்களுடைய அருமையான ஆசிரியர்களுக்கு, அடுத்தவன் ஆய்வுக்கட்டுரைய ஆட்டைய போட்டவரோட பொறந்த நாளை ஆசிரியர் நாள் நெனச்சு வாழ்த்து சொல்லப் போறீங்களா?

#Sep5 மேற்குலகத்தை அறிவு இல்லாத குருடர்கள்னு சொல்லிட்டு, இங்கிலாந்து Knight பட்டம் குடுக்குறான்னதும் குடுகுடுன்னு ஓடிப் போயி வாங்குன கடைஞ்செடுத்த opportunist கூட ஒப்பிடப் போறீங்களா?

#Sep5
Aug 31, 2022 5 tweets 1 min read
மேட்டூர்ல திறந்தா நேரா கடலுக்குப் போயி வீணாகுது ப்ரண்ட்ஸ், மேட்டூர் - தஞ்சாவூர் காவிரியில நிறைய தடுப்பணைகள் கட்டணும்னு சொல்றவங்களே... இன்னும் தடுப்பணைகள் கட்டுனா, கடைமடையில இருக்குற உழவு நிலத்துக்குப் பறந்தா தண்ணி வரும். மேட்டூர்ல தண்ணி இருந்தாலும், சுத்தி இருக்குற ஊர்லயே தண்ணி இல்ல தெரியுமா? இவ்ளோ தெரிஞ்சவங்களுக்கு, மேட்டூர் - பவானி 40 கிமீல 4 கதவணைகள் (barrage dams) இருக்கு. (செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை) இருக்குன்னு தெரியலயா?
Aug 20, 2021 13 tweets 2 min read
Age of Consent Act 1891 சட்டமியற்றப்பட்ட போது, 'ஐயயோ, 12 வயசு வரைக்கும் திருமணம் செய்யக்கூடாதுன்னு சட்டம் போடுறானே வெள்ளைக்காரன், லோகம் கெட்டுடாதோ, தர்மம் என்னாவுறது?'ன்னு கதறுனாரு திலக்...

இந்தச் சட்டம் கொண்டு வர காரணமாய் அமைந்தன இரு வழக்குகள் 1. புல்மோனீ வழக்கு
2. ருக்மாபாய் வழக்கு.

இரு வழக்குகளும் இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வழக்குகள்.

வழக்கு 1: 10 வயது பெண்ணான புல்மோனியை 38 வயது ஹரி மோகன் என்பவர்க்கு மணம் செய்து வைக்க, கட்டாய வன்புணர்வினால் இறந்து போகிறாள் புல்மோனி. தன் தவறை உணர்ந்த புல்மோனியின் தாய்
Jul 20, 2021 4 tweets 1 min read
#DokushaShugo #ChaserExpress

அடுத்த புத்தகம்:

புரட்சிக்கவிஞரின் எதிர்பாராத முத்தம்

"காரிகையாள் போகலுற்றாள்; குடத்தைத்தூக்கிக்
காலடிஒன் றெடுத்துவைப்பாள்; திரும்பிப்பார்ப்பாள்! ஓரவிழி சிவப்படைய அன்னோன் பெண்ணின் ஒய்யார நடையினிலே சொக்கிநிற்பான்!" "நீமுடித்த வேலையென்ன?" என்றாள் அன்னை. "நெடுங்கயிற்றைத் தலைமுடித்துத் தண்ணீர் மொண்டேன்;
ஆமுடித்த முடியவிழ்த்துப் பால்கறந்தீர்;
அதைமுடித்தீர் நீர்தௌித்து முடித்தேன். இன்னும்
ஈமுடித்த தேன்கூட்டை வடித்தல் போலே
எனைவருத்தா தீரென்றாள் அறைக்குள் சென்றாள்

👌👌👌
Jun 15, 2021 10 tweets 2 min read
சித்த மருத்துவத்தைப் பேசி பேசுனா பட்டி டிங்கரிங் பாத்துடலாம். ஆனா, டீச்சர் என்ன கிள்ளி வச்சுட்டான் ரேஞ்சுக்கு அழத் தொடங்கிடுவாங்க.

மூலிகை, இலை, தழை, தண்டு, வேர், பட்டை எல்லாம் கரிம / கனிம வேதிப்பொருட்களால் ஆனவை என்பது அறிவியல் அறிந்தவர் அறிந்ததே. 👇 எந்த ஒரு வேதிப்பொருளும் வெவ்வேறு வகையாக வினைகளில் ஈடுபடும் என்பதும், அந்த வினைகளில் நமக்குத் தேவையில்லாத வினைகளும் இருக்கும் (அதாவது பக்கவிளைவு) என்பதும் அறிவியல் சொல்கிறது.

இப்படி இருக்க, இந்த இலையின் சாறு இத்தனை ஆழாக்கு குடிக்கணும்னு ஒரு மருத்துவமுறை சொல்ல, அதில் என்னென்ன 👇
Apr 2, 2018 16 tweets 2 min read
கடல்நீரைக் குடிநீராக்கல் (Desalination) குறித்து, சு.சா போன்ற புல்லறிவாளர்களேப் பேசும் போது, அத்துறையில் பணி புரியும் நானும் தெரிந்ததைச் சொல்ல இந்த இழை... 👇👇👇 உவர்நீக்கல் - Desalinationக்குச் சரியான தமிழாக்கமாக இருக்கலாம். கடல்நீரின் உவர்ப்புச்சுவை நீக்கி குடிக்க ஏற்ற நீராய் மாற்றல்.... கடல் நீரில் கரைந்துள்ள உப்பு, கரியமில வாயு ஆகியவற்றை நீக்கி, பின் குடிக்க ஏதுவாக சில உப்புக்களைக் கலந்து குடிநீராக்கல்...