பெண்களுக்கான பள்ளிக்கூடம் துவங்கி, சாதிய அமைப்பால் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு அறிவு சுடர் ஏற்றியவர் சாவித்திரி பாய் பூலே. பிரிட்டிஷ் ஆட்சியர் இந்தியாவை அடிமைப்படுத்தி சுரண்டி வாழ்ந்தனர் என்பது மட்டுமே தேசியவாதத்தின் ஒற்றைப் பரிமாண விமர்சனம்.
ஆனால் ஜாதிய அடக்குமுறைகளால் படிப்பு தடை செய்யப்பட்ட ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோதிராபாய் பூலே படிக்க வாய்ப்பு அளித்தது பிரிட்டிஷ் அரசு. பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்நாளில் தன் மனைவி, சாவித்திரிக்கும், தன்னை வளர்த்த சகுணவிர்க்கும் படிக்க சொல்லிக்கொடுத்து, ஜோதிராவ்.
சாவித்ரியை ஆசிரியர் பயிற்சி படிக்க அனுப்பி சான்றிதழ் பெறவைத்தார். 1846 இல் மகர்கள் குடியிருப்பில் சகுண பாய் துவங்கிய பெண்கள் பள்ளியை, கிறிஸ்துவத்திற்கு மக்களை மாற்றுகின்ற ஒரு முயற்சி என்று பொய்யாக பழி கூறி பார்ப்பனர்கள் அந்தப் பள்ளியை மூடினார்கள்.
ஜோதிராவ் பூலேயின் எழுச்சியான உரைக்குப் பிறகு திரு.பிடே அவர்கள் தனது வீட்டை பெண்கள் பள்ளி திறக்க கொடுத்தார்.
திரு.பிடே அவர்களின் வீட்டில் பெண்களுக்கான முதல் பள்ளி துவங்கப்பட்டது. அது பிராமணர் குடியிருப்பில் இருந்தது. போகிற வழியில் சாவித்திரிபாய் மீது கல், மண், சேற்றை வீசினார்கள்
நடந்ததை தன் கணவரிடம் கூற, கணவர் ஒரு பழைய புடவை கட்டிக் கொண்டு, கையில் ஒரு நல்ல புடவை எடுத்து கொண்டு போ. பள்ளிக்குச் சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு பாடத்தை துவங்கு என்று கூறினார். அப்படியே பள்ளிக்குச் சென்றார்.
அவர் நடத்திய பள்ளியிலும் வைத்திகர்கள் தொந்தரவு கொடுத்தார்கள்.
சாவித்திரி பாய் ஒரு சிறந்த ஆசிரியை! குழந்தைகளின் நன்றாக பயிற்று வித்தார். அவர் பள்ளியில் படித்த 11 வயது மாணவி முக்தாபாய் எழுதி, 'தயானந்தா ' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை இதற்கு உதாரணம்.
1852 இல் சிறந்த ஆசிரியருக்கான விருதை பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு வழங்கியது.
புனே நகரை plague தொற்றுநோய் தாக்கிய பொழுது, தனது மகனின் ஊருக்கு வெளியே இருந்த plague நோய்க்கான மருத்துவமனைக்கு நோய் தாக்கப்பட்டவர்களை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டார். அந்த நோய் தொற்று சாவித்திரிபாயின் உயிரையும் பறித்தது.
சாவித்திரிபாயின் ஒளிரும் உதாரணம், தேசத்தின் எந்த தலைவர்களின் வரலாற்றை காட்டிலும் உயர்வானது. இந்தியாவிற்கான மாற்று வரலாற்றை உருவாக்கியவர் சாவித்திரி பாய் புலே.
வாழ்வின் கடைசி நாள் வரை ஒரு அன்பான சமூகம் மலர்வதற்காக பாடுபட்ட முதல் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலேவை வணக்குகிறேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கள்ளர் நாடு தந்தை நாடா?
திருமலை நாயக்கரின் தந்திரம், ஆங்கிலேயரின் அடக்குமுறை ஒரு சமூகத்தை என்ன செய்யும்?
ஆய்வு கட்டுரைகளை கேட்டு விவாதிக்கலாம்.
🎙️ @esemarr3
🎙️ @The_69_Percent
🎙️ @DrNagajothi11