அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.
2. குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.
3.குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்.
4. குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.
5. ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.
6. குருவுக்கு மிக அருகில் அமர கூடாது.
7. குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.
8. குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
மகாபலி, பிரகலாதனனின் பேரன். 100 அசுவ மேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களை செய்யத் தொடங்கினான்.
அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகி விடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது.
அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப் படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார்.
கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும்.
அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும்.
காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர்.
மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது.
இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.