அவை இறைநிலை அதாவது மகாவிஷ்ணு, உயிர்நிலை (ஜீவன்கள்), கடவுளை அடையும் வழி (உபாய நிலை), அதற்கு தடையாக இருப்பவை (பகை நிலை),
கடவுளை அடைந்தபின் அனுபவிக்கும் பயன் (உபயோக நிலை).
இவை பற்றிய அறிவை பெற்று பரம்பொருளை
அடைவதே மனிதப் பிறவியின் பயனாகும்.
வைணவத்தின் ஐந்து பேருண்மைகளை
ஆன்மா அறிய வேண்டிய
ஐந்து நிலைகளாக
அழகிய தமிழ்பாசுர வடிவில்
நாம் அனைவரும் அறிந்து நம் நினைவில் நிறுத்துவதற்காக
எளிமையாக மாற்றி அருளியவர் ஸ்வாமி ஸ்ரீ பராசர பட்டர்,.
அவர் அருளிய பாசுரம்
திருவாய்மொழி என்கின்ற நம்மாழ்வார் அருளிய திவ்ய ப்ரபந்தத்தின் தனியன் என்கின்ற
பகுதியில் அமைந்துள்ளது
ஆன்மா அறிய வேண்டிய
ஐந்து நிலைகளாக உள்ள விஷயங்கள் என்னென்ன
என்று ஸ்ரீ பராசரபட்டர் அருளியுள்ள கீழ்க்கண்ட திருவாய்மொழி .
தனியனால் அறிந்து கொள்ளலாம்.
இதை இப்படி எழுதிக்கொண்டால் அர்த்த பஞ்சகமாகிவிடும்.
1)மிக்க இறைநிலையும்
2)மெய்யாம் உயிர்நிலையும்
3)தக்க நெறியும்
4)தடையாகித்-தொக்கியலும்
5)ஊழ்வினையும் வாழ்வினையும்
ஓதும் குருகையர்கோன் யாழினிசை வேதத்து இயல்.
சுலபமாக இதன் பொருள் கீழே: :
மிக்க இறைநிலை - இங்கே ‘மிக்க’ என்பது மிக முக்கியம். பல இறை நிலைகள் இருந்தாலும், ஆண்டாள் போல அனுகாரத்துடன் பக்தி செய்வது தான் ‘மிக்க’ இறைநிலை. பெண்மை கலந்த பக்தி.
மெய்யான உயர்நிலை என்பது பெருமாள் அடியார்களுக்கு அடியவன் என்பதே!
உலக பிணிப்பிலிருந்து விடுபட்டு, பெருமாளிடம் ஆட்படுவதே தக்க நெறி
இதைக் கிடைக்க முடியாமல் என்ன என்ன தடைகள் ஏற்படுகிறது
இந்த பாசுரத்தின் கண் உட்பொதிந்து
விளங்கும்*அர்த்த பஞ்சகம்*என்பது
1. அடைய வேண்டிய பொருள் 2. அடைகிறவன் 3. அடைவதற்காக செய்ய வேண்டிய வேலை 4. அடைவதிலுள்ள இடையூறுகள் 5. அடைவதன் பலன்
இதை முறைப்படிப் பார்த்தால் முதலில் 'இறைநிலை'(பரமாத்ம ஸ்வரூபம்) எனப்படும் பரப்ரும்மம்
எது என்பதை அறிய வேண்டும்.
அடுத்து, 'உயிர்நிலை'(ஜீவாத்ம ஸ்வரூபம்) என்கிற ஆத்மா பற்றி அறிய வேண்டும்.
மூன்றாவதாக, .'தக்க நெறி'(உபாய ஸ்வரூபம்) எனப்படும் நெறிநிலையான உபாயம் பற்றி அறிய வேண்டும்.
நான்காவதாக, .'ஊழ்வினை'(விரோதி ஸ்வரூபம்) என்கிற எதிரியைப்பற்றி அறிய வேண்டும்.
முடிவில், ஐந்தாவதாக, 'வாழ்வு'(புருஷார்த்த ஸ்வரூபம்) எனப்படும் முக்தியை உணர வேண்டும். இந்த ஐந்தையும் 'அர்த்த பஞ்சகம்' என்பர்.
ஸ்ரீமன் நாராயணனின் திருவடியைப் பற்ற முடியாமல் தடுக்கும் இடையூறுகளான ஊழ்வினைகள்.
5. 'வாழ்வு'(புருஷார்த்த ஸ்வரூபம்) - நான்கு புருஷார்த்தங்கள்: தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்,(அறம், பொருள், வீடு., இன்பம்.) பகவதனுபவம்.
ஸ்ரீ வைஷ்ணவத்தில் மூன்று ரகஸ்யங்கள் சிஷ்யர்களுக்கு .
உபதேசிக்கப்படும்.
முமுக்ஷுக்கள் அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று.
அவை: திருமந்திரம், த்வயம்,
சரம ஸ்லோகம்.
முப்பொருள், நாற்பொருள், ஐம்பொருள் ஆகிய அர்த்த விசேஷங்களைக்கொண்ட
"அர்த்த பஞ்சகம்" என்பதை மேலெழுந்தவாரியாகப் படிப்பதால் மட்டும் ஒருவர்
அறிந்து கொள்ள முடியாது.
அதை, நீண்ட முயற்சிக்குப் பின் பகவத் க்ருபையால் அறிந்து கொள்ளவும், உணரவும் முடியும்.
அர்த்த பஞ்சகமான, ஐந்து அர்த்தங்களை, ஐந்து விஷயங்களை நமக்கு ஓதும் இந்த "திருவாய்மொழி" யாழினிசை வேதம் என்று சொல்லுகிறார் பராசர பட்டர்.
ஸ்ரீ பராசரபட்டரால் அருளப்பட்ட
*மிக்க இறைநிலையும் மெய்யாம்* *உயிர்நிலையும்* என்கிற திருவாய்மொழி தனியன் ஒலிவடிவ காணொளிக்காட்சி
அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.
2. குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.
3.குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்.
4. குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.
5. ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.
6. குருவுக்கு மிக அருகில் அமர கூடாது.
7. குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.
8. குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
மகாபலி, பிரகலாதனனின் பேரன். 100 அசுவ மேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களை செய்யத் தொடங்கினான்.
அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகி விடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது.
அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப் படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார்.
கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும்.
அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும்.
காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர்.
மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது.
இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.