🌷 " யார் ..?? மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது ..??.."
🌷 கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் .. ராஜ ஸேவகர்கள் ..!!
🌷 " என்னங்கானும் ..!?! ..
நீர் கதவை அடைச்சுண்டு .. உள்ள என்ன பண்றீர் ..??? காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா ..??
குருக்கள் காத்துண்ட்ருக்கார் ..!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ ..!! "
🌷 ராஜ ஸேவகர்களோடு .. வந்த பட்டரின் குரல் ..!!
🌷 " ஐயோ ..!! மீனாக்ஷி ..!! கைவிட்டுட்டியேடீ ..!! எழுப்பி விடுன்னு சொன்னேனே ..!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே ..!! நான் என்ன பண்ணுவேன் ..!! அம்மா ..!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு ..!! "
🌷 எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர் ..!!
🌷 குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார் ..!!
🌷 " ஐயோ ..!!
மாணிக்க மூக்குத்தி காணுமே ..!! அம்மா!! மீனாக்ஷி ..!!
என்னடி சோதனை இது ..!! "
🌷 குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது .. மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும் .. மற்ற அனைவருக்கும் ..
🌷 ஶ்ரீநிவாஸருக்கோ ..
நடப்பதைக் கண்டு பயம் ..!!
அபசாரம் நிகழ்ந்ததோ என்று ..!!
🌷 அசரீரி கேட்டது ..
🌷 " அஞ்சற்க ..!!
என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான் ..!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன் ..!!
அயர்ந்து அவன் .. உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன் ..!!
துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து .. அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன் ..!!
குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ ..???..!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது ..!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் ..!! மூக்குத்தி இருக்கும் ..!! "
🌷 சட்டென நின்றது அசரீரீ .. நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது ..!!
#காகம்
காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்
நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம்.
ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது.
இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?
ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும்
இந்த காகத்திற்கு உண்டு என்பதும் உண்மையான ஒன்று.
அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காகத்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும்.
தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.( குறிப்பு: இது கருடாலாயா என்ற குழுவில் நான் படித்தது. அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.🌞வ்ருஷாகபி:..
ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,
“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,
“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
நாளை 26/06/2023 பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம்.
அன்று ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது நம்பிக்கை.
இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.
இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததாலேயே ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் (𝘾𝙀𝙍𝙉) முன்பாக பெரியதொரு நடராஜர் சிலை வைத்துள்ளனர்.