🌷 " யார் ..?? மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது ..??.."
🌷 கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் .. ராஜ ஸேவகர்கள் ..!!
🌷 " என்னங்கானும் ..!?! ..
நீர் கதவை அடைச்சுண்டு .. உள்ள என்ன பண்றீர் ..??? காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா ..??
குருக்கள் காத்துண்ட்ருக்கார் ..!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ ..!! "
🌷 ராஜ ஸேவகர்களோடு .. வந்த பட்டரின் குரல் ..!!
🌷 " ஐயோ ..!! மீனாக்ஷி ..!! கைவிட்டுட்டியேடீ ..!! எழுப்பி விடுன்னு சொன்னேனே ..!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே ..!! நான் என்ன பண்ணுவேன் ..!! அம்மா ..!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு ..!! "
🌷 எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர் ..!!
🌷 குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார் ..!!
🌷 " ஐயோ ..!!
மாணிக்க மூக்குத்தி காணுமே ..!! அம்மா!! மீனாக்ஷி ..!!
என்னடி சோதனை இது ..!! "
🌷 குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது .. மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும் .. மற்ற அனைவருக்கும் ..
🌷 ஶ்ரீநிவாஸருக்கோ ..
நடப்பதைக் கண்டு பயம் ..!!
அபசாரம் நிகழ்ந்ததோ என்று ..!!
🌷 அசரீரி கேட்டது ..
🌷 " அஞ்சற்க ..!!
என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான் ..!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன் ..!!
அயர்ந்து அவன் .. உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன் ..!!
துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து .. அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன் ..!!
குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ ..???..!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது ..!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் ..!! மூக்குத்தி இருக்கும் ..!! "
🌷 சட்டென நின்றது அசரீரீ .. நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது ..!!
அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?
சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக்கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர்.
இன்றும் எண்ணற்றவர் உள்ளனர். வரும் காலத்திலும் இருப்பர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விரித்து, சேக்கிழார் சுவாமிகள் 12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார்.
12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம். இங்கு ஒரு வரி குறிப்பே தரப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் நாயன்மார்களின் வரலாறு முழுமையும் சேக்கிழார் சுவாமிகள் கூற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது இந்த கோயில்.
பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது.
விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும்
சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது.
ஒரு நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு பொருள் இடையில் இருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கோயில் கோபுரத்தின் நிழல் எப்படி
இன்று கொச்சியில் நம் இந்திய பிரதமர் INS விக்ராந்த் இந்திய கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கூடவே இந்திய கடற்படைக்கு என்றே பிரத்தியேகமான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் இந்திய கடற்படையில் காலங்காலமாக இருந்த வந்த ஜார்ஜ் V சிலுவையை கொண்ட பிரிட்டன் நேவி கொடியை போன்ற வடிவமைப்பில் இருந்ததை அதிகாரபூர்வமாக அகற்றி சத்ரபதி சிவாஜி காலத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த இலச்சினையோடு நமது அசோக சின்னத்தை ஒருங்கிணைத்து
புத்தம் புதிய கொடியை இந்திய கடற்படை கொடியாக அறிமுகம் செய்து வைத்தார்.
இதே போன்றதொரு விஷயத்தை நமது வாஜ்பாய் காலத்தில் முன்னெடுத்த போது அதற்கு பிறகு பதவிக்கு வந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அதனை ஓசைப்படாமல் அகற்றிவிட்டு மீண்டும் சிலுவையை