கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும்.
அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும்.
காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர்.
மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது.
இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.
எனக் கூறப்பட்டுள்ளது. பரிமுகன், அஸ்வ சிரவா என்றும் ஹயக்ரீவரை அழைப்பதுண்டு. முதன்முதலில் உலகம் தோன்றிய காலத்தில், அதில் மனிதர்கள், மற்ற ஜீவராசிகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி திருமால் யோசித்தார்.
தனது யோக சக்தியால் பிரம்மதேவனை முதலில் உருவாக்கி, அவரிடம் படைக்கும் தொழிலை ஒப்படைத்தார். அதற்கு உதவ வேதங்கள் தேவ ரகசியம் ஆகியவை அடங்கிய பிரம்மச் சுவடிகளைக் கொடுத்தார். இந்த சுவடிகளைக்கொண்டு தனது பணிகளை பிரம்மா செய்துகொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் தன்னையறியாமல் கண்ணயர்ந்தார்.
அப்போது மது, கைடபர் என்கிற அரக்கர்கள் பிரம்ம தேவனிடமிருந்து பிரம்மச் சுவடிகளைத் திருடி, அதை கடல் நீருக்கடியில் மறைத்து வைத்துவிட்டனர்.
சுவடிகளைக் காணாமல் கலங்கிய பிரம்மதேவன், அதை மீட்டுக்கொடுக்குமாறு திருமாலிடம் வேண்டினார்.
மிக முக்கியச் சுவடிகள் காணாமல் போனதால், திருமால் வெண்குதிரை முகத்துடனும், மனித உடலுடனும் ஹயக்ரீவர் என்கிற அவதாரத்தை எடுத்து, வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார்.
பின்னர் சுவடிகளைத் திருடிய அரக்கர்களைக் கொன்றார்.
வேதங்களைக் காப்பாற்றவே ஹயக்ரீவ அவதாரம் நிகழ்ந்ததால் இவரே கல்விக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.
மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைப் படித்த பின்னர் வைணவக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஹயக்ரீவரை கீழுள்ள சுலோகத்தைச் சொல்லி அவருக்குப் பிடித்த ஏலக்காய் மாலையை அணிவித்து வணங்கி வரவேண்டும்.
(தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய வெண்நிறமும், அறிவுச் செல்வத்திற்கு உலகில் ஆதாரமாக விளங்கி வருபவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.)
இப்படி வழிபாடு செய்தால் படித்த பாடங்கள் நன்கு மனதில் தங்கும். தேர்வு நேரத்தில் சட்டென நினைவுக்கு வரும். தேவையில்லாத பயம், கவலை போன்றவை அகலும்.
கல்வி, கலை, ஞானம் போன்றவற்றுக்கு குருவான ஹயக்ரீவர் சில இடங்களில் தாயார் லட்சுமிதேவியைத் தன் மடியில் வைத்து லட்சுமி ஹயக்ரீவராக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் சேர்ந்து கிட்டும்.
உடுப்பியில் பிறந்த வாதிராஜதீர்த்தர் (1480-1600) என்கிற மத்வ மடாதிபதி தினமும் தனது தலைக்குமேல் தட்டில் இறைவனுக்கு படைக்கவேண்டிய நைவேத்தியத்தை வைத்துக்கொள்வார். வெள்ளை குதிரை வடிவில் ஹயக்ரீவர் அவருக்கு பின்புறம் வந்து தோள்கள் மீது இரண்டு முன்னங்கால்களை வைத்து நைவேத்தியத்தை உண்பார்.
*ஞான வடிவான ஹயக்ரீவரை வழிபட கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் செல்லலாம்*. இந்த தலம் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதே போன்று சென்னை-செங்கல்பட்டு பிரதான சாலை அருகே இருக்கும் *செட்டிபுண்ணியம் எனும் இடத்தில் ஹயக்ரீவர் கோயில் உள்ளது*.
*மைசூரில் இருக்கும் புராதன பரகால மடத்தில் லட்சுமி ஹயக்ரீவர் கோயில் உள்ளது*. இம்மூர்த்தியை இராமானுஜர், சுவாமி தேசிகன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். வித்யா ஸ்வரூபனான ஹயக்ரீவரைக் குறித்து முப்பத்தியிரண்டு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை சுவாமி தேசிகன் எழுதியுள்ளார்.
இதைச் சொன்னால் நல்ல ஞானம் வரும். முடிந்தளவுக்கு சிறு வயதிலேயே ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும். மாணவ - மாணவிகள் தினமும் பக்தியுடன் ஹயக்ரீவரை வணங்கினால் அது நிச்சயம் நல்ல பயனைக் கொடுக்கும்.
அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.
2. குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.
3.குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்.
4. குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.
5. ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.
6. குருவுக்கு மிக அருகில் அமர கூடாது.
7. குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.
8. குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
மகாபலி, பிரகலாதனனின் பேரன். 100 அசுவ மேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களை செய்யத் தொடங்கினான்.
அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகி விடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது.
அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப் படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார்.