ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப், நாகார்ஜுனா போன்றோர் நடித்த 'பிரம்மாஸ்த்ரா' படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. பெரும் பொருட் செலவில் பேன்-இந்தியா லெவலில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் பயணத்தில் ரன்பீர், ஆலியா மற்றும்
இயக்குனர் அயான் முகர்ஜி ஈடுபட்டுள்ளனர். அதற்காக மத்தியப் பிரதேசத்தில் பயணத்தில் இருக்கும் போது உஜ்ஜைன் நகரத்தில் உள்ள மகாகால் கோயிலுக்கு போயிருக்கிறார்கள். அங்கே ரன்பீருக்கு எதிராகக் கூடிய பஜ்ரங்தள உறுப்பினர்கள் பெரும் கோஷங்களை எழுப்பி இவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்துப்
போராடி இருக்கிறார்கள். போலீஸ் வந்தும் கூடப் பயனின்றிப் போனதில், இயக்குனர் அயான் முகர்ஜி மட்டும் கோயிலுக்குள் போய் வழிபட்டு விட்டு வந்திருக்கிறார்.
பஜ்ரங் தளத்தினரின் போராட்டத்துக்குக் காரணம்: ரன்பீர் கபூர் மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்பதுதான். அதாவது 2011ல் ஏதோ ஒரு பேட்டியில்
தனது குடும்பத்தினரின் உணவுப் பழக்கங்கள் பற்றிப் பேசுகையில் இதைக் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் குடும்பம் பெஷாவர் நகரத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மட்டன்,சிக்கன் இவற்றுடன் மாட்டுக்கறியும் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள், என்று சொல்லி இருக்கிறார்.
அதே பழக்கம் தனக்கும் இருக்கிறது என்றும் பேசி இருக்கிறார். அந்தப் பழைய பேட்டியை யாரோ தோண்டி எடுத்து இணையத்தில் வலம் விட்டு விட, சர்ச்சை கிளம்பி விட்டிருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் ரன்பீர் குடும்பத்தில் அனைவரும் பஞ்சாபி இந்துக்கள். அந்தக் குடும்பத்தினர் மாட்டுக்கறி
சாப்பிடுகிறார்கள் என்ற சேதி உண்மையில் இந்துத்துவர்களுக்கு விழிப்புணர்வை கொடுத்திருக்க வேண்டும். முஸ்லிம்கள் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்று இவர்கள் செய்து வரும் பிரச்சாரம் போலி என்பது புரிந்திருக்க வேண்டும். இந்துக்கள் எல்லாருமே மாட்டுக்கறியை ஒதுக்குபவர்கள் அல்ல;
பஞ்சாபி இந்துக்கள், கேரள இந்துக்கள், வட கிழக்கு இந்துக்கள், தமிழ் இந்துக்கள், தெலுகு இந்துக்கள் போன்றவர்களில் பலர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள். தலித்துகளும் கூட சாஸ்திரப்படி இந்து வரையறையில் வர மாட்டார்கள் எனினும் தேசம் முழுக்க அவர்களில் பலரும் மாட்டுக்கறி பழக்கம் உள்ளவர்கள்.
எனவே மாட்டுக்கறியை ஒதுக்குதல் என்பது இந்து மரபில் சில சாதியினர் மட்டுமே பின்பற்றும் குறுகிய வழக்கம் என்ற தெளிவு ரன்பீர் பேட்டி மூலம் இவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் அந்தத்தெளிவு எல்லாம் சிந்திக்கும் திறன் படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். மூளை முழுக்க வெறுப்பு
மண்டிக் கிடக்கும் மூடர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, ரன்பீரை கேரோ செய்து மறித்து கோயிலுக்குள் புக விடாமல் துரத்தி அடித்திருக்கிறார்கள். இது நடந்த பின் ஆமீர், டாப்சி படங்களுக்கு எதிராக இணைய பாய்காட் பிரச்சாரம் ஆரம்பித்தது போல 'பிரம்மாஸ்த்ரா' படத்துக்கும் எதிராக
பாய்காட்டை துவங்கி விட்டிருக்கிறார்கள்.
இந்த பாய்காட் மூலம் படம் தோல்வி அடைந்தால் அதில் ரன்பீர், ஆலியா இருவருக்குமே பெரிய பாதிப்பு இருக்காது. லால் சிங் சட்டா தோல்வி அடைந்ததில் ஆமிருக்கு பெரிய இழப்பு இல்லை. டென்ஷனைக் குறைக்க ஜாலியாக அமெரிக்கா போய் விட்டார். மாறாக பெரும் செலவில்
தயாரிக்கப்பட்டிருக்கும்
படத்தில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தியேட்டர் ஊழியர்கள் போன்றோர் பாதிப்படைவார்கள். ஏற்கனவே பாண்டேமிக்கில் அடி வாங்கிய திரையரங்குகள், பாலிவுட் படங்களின் தொடர் தோல்விகள் காரணமாக மேலும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இனிமேல் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே மக்களை திரையரங்குகளுக்கு இழுத்து வரும் சக்தி கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களையும் இப்படி பிரச்சினை பண்ணி தோல்வியடைய வைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான சாமானிய மக்களின் சோற்றில்தான் மண்ணைப் போடுகிறோம் என்பதை உணர்வதே இல்லை.
அது ஒரு புறம் இருக்க, மாட்டுக்கறி பிரச்சினையில் முஸ்லிம்களைத்தான் குறி வைக்கிறார்கள் என்று பலர் கவலைப்படாமல் இருந்தார்கள். முஸ்லிம்களை ஒடுக்கி முடித்து விட்டு இப்போது இந்துக்களில் ஒரு சாராரையும் குறி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்து வேறு சர்ச்சையில் வேறொரு இந்துக்
குழுவினரை டார்கெட் செய்வார்கள். இவர்கள் பின்பற்றும் உயர்சாதி பிராமணீய சித்தாந்தத்துக்கு மாறாக இயங்கும் அனைத்து இந்து மரபுகளும் அடி வாங்கப் போகிறார்கள். அவர்களை எல்லாம் அடித்து காலி பண்ணி அப்புறம் நாத்திகர்கள் பக்கம் வரக்கூடும்
இந்துத்துவ விஷச்செடி வேகமாக பரவிக் கொண்டு வருகிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கலைஞரின் கை ரிக்ஷா ஒழிப்பு திட்டத்தை காப்பியடித்து படத்தில் வைத்து பெயர் வாங்கியவர் எம்ஜிஆர்...
கலைஞரின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை காப்பியடித்தவர் ஜெயலலிதா..
கலைஞர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக கொண்டுவந்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்தான்,
ஜெயலலிதாவினால் காப்பியடிக்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் ( ஆனா ஜெ தாயுள்ளம் கொண்டவர்னு இந்த முற்போக்கு மூதேவிக, பெண்ஈய பைத்தியங்கள் கத விட்டுட்டு இருக்குதுங்க )..
கலைஞர் 32 வருசத்துக்கு முன்ன கொண்டுவந்த சத்துணவில் முட்டை திட்டத்த தான்..அந்தம்மா காப்பியடிச்சு சுண்டல்,
உருளைக்கிழங்குனு போட்டுச்சு...கலைஞர் அன்று கொண்டு வந்த திட்டத்ததான் இரண்டு வருடம் முன்பு கர்நாடக அரசு காப்பியடிச்சிருக்கு...
கலைஞர் கொண்டு அனைத்து வீடுகளுக்கும் மின்சார திட்டத்ததான் போன வருசம் குஜராத் காப்பியடிச்சானுக...
கலைஞர் கொண்டுவந்த விவசாய இலவச மின்சாரம் திட்டத்ததான்
இவர் ஒரு பத்திரிகையாளர்.. பெங்களூரில் ஒரு பத்திரிகையை சொந்தமாகவே நடத்தி வந்தவர்.. மிக சிறந்த இலக்கியவாதி.. 55 வயது அறிவு பெட்டகம்..!
தன்னுடைய அப்பா லங்கேஷ் போலவே, முற்போக்கு சிந்தனை கொண்டவர்..!
இளம்பெண் கௌரி நினைத்திருந்தால், வசதியான, வளமான
வாழ்வு வாழ்ந்திருக்கலாம்.. ஆனால், அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தார்.. அதற்கு பக்கபலமாக பத்திரிகையை துணைக்கு வைத்து கொண்டார்.. இதனால் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தார்.
"பத்திரிகா" என்பதுதான் கௌரி நடத்தி வந்த நிறுவனத்தின் பெயர்.. கடைசிவரை எவ்வித ஒரு
விளம்பரமும் இல்லாமல், முழுக்க முழுக்க தன்னுடைய வாசகர்களின் கட்டணத்தை மட்டுமே வைத்து, அந்த பத்திரிகையை கடினமான சூழலிலும் வைராக்கியத்துடன் நடத்தி காட்டினார்.
வட மாநில பெண்ணான இவருக்கு ஆரம்பத்தில் கன்னடம் தெரியாது.. ஆனால் அனைத்து விதமான சிந்தனையும் அம்மாநில மக்களுக்கு
*செப்டம்பர் 5 இல் ஆசிரியர் தின விழா எல்லா பள்ளி கல்லூரிகளிலும் கொண்டாடப்படும் . ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு நாளை குறிப்பிட்டு கொண்டாடுவதில் பிழையில்லை*
*கற்றுக்கொடுப்பவரே ஆசிரியர் எனில் ஒவ்வொரு குழந்தைக்கும்
தாய் தான் முதல் ஆசிரியர் .ஆனால் ஒரு நல்ல ஆசிரியர் கற்றுக்கொடுப்பவராக மட்டுமல்ல கற்றுக் கொள்பவராகவும் இருத்தல் வேண்டும்* .
*மறக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்துவதும் ,உண்மை வரலாற்றை சொல்ல வேண்டியதும் ஒரு ஆசிரியரின் முக்கிய கடமை .செப்டெம்பர் 5 மறக்கப்பட்ட தியாக வரலாற்றை நினைவு
கூறவும் ,புகழப்படும் துரோக மனிதரை அடையாளம் காட்டவும் வேண்டிய நாள்*
*செப்டம்பர் 5 தான் வ.உ.சி.க்கும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கும் பிறந்த நாள் .வ.உ.சி அவர்கள் திருச்சியில் சட்டக்கல்வி பயின்று
வழக்குரைஞர் ஆனவர் . 1906 - ம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு போட்டியாக தன் சொந்த காசை
சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.
பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை,
பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.
அதனை அவர் சொல்லக் கேட்போம்...
"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது
எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.
பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.