இதிகாச புராணங்களின் படி சொல்லப்பட்ட கதைகளில் உள்ள ஒரு நிகழ்வு.
கர்ணன் மகாபாரத போரில் மரணித்த பின் உரிய ஒரு சத்ரியனுக்கு உரிய மரியாதைகளோடு எமன் அவரை அழைத்துக் கொண்டார்
எமன் கர்ணனிடம் கர்ணா வாழ்நாளில் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் மேலுலகில் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார்
அதன்படியாக கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார் அப்படியான சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார் சொர்க்க வாசிகள் திகைப்படைந்து அவரிடம் இங்குள்ளவர்களுக்கு பசி எடுக்காது உணவு உண்ணும் தேவை இருக்காது என்கிறார்கள்.
இதனை தேவர்களின் குருவான பிரகஸ்பதி கவனித்து விட்டு
ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார்
பிறகு கர்ணனிடம் வந்து தேவர்கள் குருவான பிரஹஸ்பதி கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார்.
கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது.
கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார்
அதற்க்கு குரு விளக்குகிறார் கர்ணா பிறப்பால் நீ ஒரு வள்ளல் நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய் ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை
அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய் என்றார்
அதற்கு கர்ணனோ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன் என கேட்கிறார்
அதற்க்கு குரு
கர்ணா ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார் நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய்
ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய்
அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார்
அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது என்றார்
கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே எமதர்மனிடம் சென்று முறையிடுகிறார்
நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும் நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார்
எமதர்ம ராஜனும் அவரை அனுமதிக்கிறார்
கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார்
கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார்
பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் எமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார்
கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்
எமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார்
மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள்
ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள் அதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் ஆகவே நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்
கர்ணன் எம தர்ம ராஜரே
மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு பல காரணங்களால் திதி உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள் அதனால் இப்போது நான் அன்னதானம் செய்த இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக மனிதர்கள் செய்யும் திதி மற்றும் அன்னதானம் அவர்களின் சந்ததி உறவுகள்
என கர்மங்கள் செய்ய வழி இல்லாத முன்னோர்களுக்கும் கூட சென்று அடைய வேண்டும்
கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும் எனக் கேட்கிறார்
இதனை எமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்
கர்ணனே யார் இந்த பக்ஷத்தில் தர்ப்பணம் செய்கிறார்களோ மற்றவர்களுக்கு உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்
உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால் அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான்
அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் செய்வோம் என கடைபிடிக்கின்றனர்
கடைசி நாளான மகாளய அமாவாசையன்று பலர் முன்னோருக்கு பெரும் படையல் படைத்து அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவர்
மகாளயபட்ச காலத்தில், இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்பூலோகம் வரும முன்னோர்கள்
மகாளய பட்சம் (11-9-2022---25-9-2022)
என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.
புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம்.
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்க்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.
இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் .
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும்.
பத்தாம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
பதினைன்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.
ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன
மஹாளய பக்ஷத்தை எப்படி செய்யவேண்டும்
க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல்
ஶுக்லபக்ஷ ப்ரதமை வரை
அதாவது செப்டம்பர்
(11ம்தேதி முதல் 26ம் தேதி வரை)
16 நாட்களும் திலதர்ப்பணமாக பக்ஷமஹாளயமாக செய்யவேண்டும்.
அல்லது முக்யமான புண்யதினங்கள்
மஹாபரணீ.
கபிலஷஷ்டி.
மஹாவ்யதீபாதம்.
மத்யாஷ்டமீ.
அவிதவாநவமீ.
ஏகாதஶீ.
ஸன்யஸ்த மஹாளயம்.
கஜச்சாயை.ஶஸ்த்ரஹதம்.
மஹாளய அமாவாசை.
போன்ற தினங்களிள்
மட்டும் தர்ப்பணம் செய்யலாம்.
கடைசிபக்ஷமாக ஒருதினமாவது
மஹாளயத்தை செய்யவேண்டும்.
1.தினமும் செய்வது
(பக்ஷமஹாளயம்)
2.முக்யதினங்களிள் செய்வது (புண்யதின மஹாளயம்)
3.ஒருநாள் செய்வது
(ஸக்ருன் மஹாளயம்)
புரட்டாசி.ஐப்பசி மாதங்களிள் அப்பா&அம்மா ஶ்ராத்தம் வந்தால்
ஶ்ராத்தம் முடிந்து க்ருஷ்ணபக்ஷத்தில்
மஹாளயத்தை செய்யவேண்டும்.
இது ஒருநாள் மட்டும் மஹாளயம்
செய்பவர்களுக்கு மட்டும்.
பக்ஷ மஹாளயம் செய்பவர்கள்
பஞ்சம அபர பக்ஷத்திலேயே
தினமும் தர்ப்பணம் செய்யலாம்.
இவர்களுக்கு பிதா&மாதா ஶ்ராத்தங்கள் வந்தாளும் ஏதும் தடையில்லை
1.ஹோமத்துடன் செய்வது
பார்வண மஹாளயம்
2.போஜனத்துடன் ஹிரண்யமாக செய்வது
போஜனபூர்வ ஹிரண்யரூப மஹாளயம்
3.போஜனம் இல்லாமல் அரிசி.பாசிப்பருப்பு.வெல்லம்.
காய்கறிகள்.தக்ஷினை போன்ற த்ரவ்யங்களை கொடுத்து
செய்வது ஆமரூப மஹாளயம்.
இதில் நம் ஶக்திக்கு எப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ அதை மிக ஶ்ரத்தையாக செய்யவேண்டும்.
[மஹாளய பித்ருக்கள் வரிசை]
1.விஶ்வேதேவர்
2.பித்ராதிகள் (அப்பா முதல் மூன்று)
******
தாயார் இல்லாதவர்களுக்கு மட்டும்
3.மாத்ராதிகள் (அம்மா முதல் மூன்று)
********
4.மாதாமஹாதிகள்
(அம்மாவின் அப்பா முதல் 6பேர்)
5.இரண்டுவம்ச காருணிக
பித்ருக்கள்.
6.மஹாவிஷ்ணு
ஆக மொத்தம் 6 ப்ராஹ்மணாளுக்கு த்ரவ்யங்கள் தந்து செய்யவேண்டும்.
அப்பா இல்லாத அனைவரும்
மஹாளயத்தை செய்யவேண்டும்.
16 நாட்களும் நியமமாக இருக்கவேண்டும்.
பித்ரு ஸம்பந்தமான கார்யங்களை மட்டும் செய்யவேண்டும்.
வபனம் செய்து கொள்ளக்கூடாது.
எண்ணெய் ஸ்னானம் செய்யக்கூடாது.
ஸ்த்ரீ ஸம்போகம் கூடாது.
வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது.
ஆசாரமாக சமைத்து
சாப்பிட வேண்டும்.
ஒருவேளை அன்னத்துன் சாப்பாடு.ஒருவேளை அன்னமில்லாமல் சாப்பாடு என்ற ஆஹார கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்.
மருந்து சாப்பிடுபவர்கள்
சாப்பாட்டு நேரத்தைத்விர
மற்ற நேரங்களில் பழம்.பால்.
உப்பு இல்லாமல் கஞ்சி.
போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
தோஷமில்லை.
*****
வெங்காயம்.பூண்டு.முருங்கை.
கத்தரி.முள்ளங்கி.சுரைக்காய்.
புழுங்கல் அரிசி.
சேமியா.பாக்கெட்உணவு.
வெளியில் உணவு. இவை சேர்க்கவேண்டாம்
******
குளிக்காமல் சமைத்த உணவு.
இவைகள் கூடாது.
தினமும் மஹாளயம் செய்தாலும்
ஒருநாள் மட்டும் மஹாளயம் செய்தாலும்
16 நாட்களும் நியமம் உண்டு.
குறைந்தபட்சம் ஒ௫நாளவது மஹாளய-தர்பண-திதி
கொடுங்கள்.
சனீஸ்வரர் சன்னதிக்கு செல்பவர்கள் அவரது முகத்தைப் பார்க்கக் கூடாது. திருவடியையே தரிசிக்க வேண்டும் என்று சொல்வர்.
நவக்கிரங்களை அடக்கி அவற்றை தன் சிம்மாசன படிக்கட்டுகளாக பயன்படுத்தினான் இராவணன்.
அப்போது சனீஸ்வரர், தன் உக்கிரப் பார்வையால் ராவணனைப் பார்க்க அவனுக்கு சனி பிடித்தது. அதன் பின் இராமாயணப் போரில் அவன் இறந்தான் என்பது கதை.
இப்படி சனி என்றாலே ஒருவித பயம் இருக்க திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோவிலில் சனீஸ்வரர் சன்னதியைச் சுற்றி வந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
நடராஜப் பெருமானுக்கு ஓர் ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேக தினங்களுள் ஒன்றான ஆவணி சதுர்த்தசி திதி இன்று.
சிறப்பு : வளர்பிறை சுபமுகூர்த்த நாள், கதலி கவுரி விரதம், அனந்த விரதம், நடராஜர் அபிேஷக நாள்.
இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சந்நிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதிகம்.
சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். கூத்தன், சபேசன், அம்பலத்தான் என்று தன் ஆடல் கோலத்தினால் போற்றப்படுவர் நடராஜப் பெருமான். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை விளக்கும் தத்துவரூபமாகத் திகழும் நடராஜரின் திருமேனி ஐந்தொழில்களையும் புரிதலை விளக்குகிறது.
அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.