திக, திமுக மட்டும் இந்திய தடுக்கலேனா இந்நேரம் இந்தியா முழுக்க ஒரே ஆட்சி மொழி, கல்வி மொழியா இந்தி இருந்திருக்கும். நாம இங்கிலீஷ் படிக்காம, சீனா காரன் மாதிரி இருந்திருப்போம். அவனாவது மொழி தேவையே இல்லாத ஹார்டுவேர் ஃபீல்டுல வளர்ந்திட்டான்.
இன்னைக்கு இந்தியாவுக்கு வருசத்துக்கு 16 இலட்சம் கோடி ரூபா வருமானத்தைக் கொடுக்கிற மாதிரி, அரை கோடி இந்தியர்களுக்கு வேலை தர்ற மாதிரி ஐடி ஃபீல்ட் இருக்குதுனா, அதுக்கு காரணம் திக, திமுக தான்!
ஃபகிர் சந்த் கோலியோ, நாரயண மூர்த்தியோ இல்ல.. பெரியாரும் அண்ணாவும் தான் ஐடி துறைக்கு மூல காரணம்!!
திமுக இந்தியைத் தடுக்கலேனா, மற்ற துறைகள்லயும். இங்கிலீஷ் போய் இந்தி வந்து, நம்ம பின்னுக்குப் போயிருப்போம்.
அதுலயும் இந்தி தாய் மொழியா இல்லாத மாநிலங்கள் இன்னும் ஏழையாகி, இந்தி பேசுற மாநிலங்களுக்கும் கீழே போயிருக்கும். நம்ம பானிபூரி விக்கிறவனுக்கும் கையாளா நின்னுருப்போம்.
மத்தவங்க ஒத்துக்கிறாங்களோ இல்லையோ, இந்திய வரலாற்றில் இந்திப் பிரச்சினை மட்டும் அல்ல.. பல பிரச்சினைகளில், பல முறை, ஒட்டு மொத்த இந்தியாவையும் சரியான பாதையில் திருப்பி, முன்னேற வைத்தது திராவிட இயக்கம்!!
அப்படி தமிழ் நாட்டை மட்டும் இல்லை.. இந்தியாவையே சரியான பாதையில் திருப்பி விட்ட வழிகாட்டிய ஸ்டேட்ஸ்மேன் எங்கள் அன்பின் அண்ணா!
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று நடத்தி, அதில் வென்றும் காட்டி, இனி எதிரி என்றும் வெல்ல முடியாதபடி நின்றும் காட்டுபவர் எங்கள் #அறிஞர்_அண்ணா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது;
மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு,
மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
விரல்தேய எழுதினார்;
நாதேய பேசினார்; சூதில் பழம்தின்று
கொட்டைப்போட்ட
சைவ ஓநாய்களையே
ஏமாற்றிக் குனியவைத்தார்;
அவற்றின் முதுகிலேறி
சவாரி செய்தார்;
ஆயிரம் ஆண்டுகளாய்
சிம்மாசனத்தில் படிந்திருந்த
பூணூலைப் பிய்த்தெறிந்தார்.
***
அவர் பெயர் ராமானுஜம்.
தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்.
காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது.
தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.
காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார்.
அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.
திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம்வேண்டும் என்பதால்,சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டைமுடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம்.