அறுசுவை உணவினை
அசராது உண்டுவிட்டு
மாடத்தில் அமர்ந்து
மடித்த வெற்றிலையை
துடித்த நாக்கிற்கு
துணையாக சேர்ப்பவன் போல்
திண்ணையில் வந்து
திமிராக அமர்ந்தான்!
கிழவியோ......
மிஞ்சிய வத்தலில் ஒன்றை
கொஞ்சிய போதுதான் #வேப்பெண்ணெய்_கசம்
வெடுக்கென சுண்டியது!.......
ஆத்தி........
இதை
எப்படி இவன் உண்டான்?
முகம் கோணாமல்
சுவைத்து உண்டானே?......
ஒருவேளை
இவனுக்கு
வேப்பெண்ணெய்தான் பிடிக்குமோ?
என்று குழம்புகிறாள்!......
கேட்கலாமா?
வேண்டாமா?.......
வேண்டாம் வேண்டாம்.......
மறுபடியும்
ஒருமுறை இதனையே கொடுப்போம்
திருமுகம் சுழியாது உண்டான் என்றால்
தினந்தோறும் இதனையே கொடுப்போம் என்று
மனதிற்குள் பேசிக்கொண்டு
மடியை இறுக்கிக் கட்டிக்கொண்டு
மகராசி வெளியே வந்தாள்!.......
அதற்குள்
அவன் உறங்க ஆரம்பித்து விட்டான்!.......
அவனை
அப்படியே விட்டு விட்டு
வீட்டையும் பூட்டாது
விறகெடுக்கச் சென்றுவிட்டாள்!
எடுத்த விறகினை
கொடுத்து பணமாக்கி
கொஞ்சம் கொஞ்சம்
பொருள் வாங்கி
வந்து சேர்கிறாள்!
அவனோ......
குடிசையை
கூட்டிப் பெருக்கி
சுற்றி இருந்த
செடிகளை எல்லாம்
சுத்தம் செய்து
அழகாக வைத்து இருந்தான்!..
வந்த மகராசி
வெயிலில் வெந்த
தன் கால்களை பாராது
அவன் கைகளைப் பார்த்தாள்!
அவன் கரங்களை எடுத்து
தன் வாயில் வழிந்த
வெற்றிலைச் சாற்றால்
ஒத்தடம் கொடுத்தாள்!
ஆம்!
முத்தம் கொடுத்தாள்!.......
அவன்
மெல்ல சிரித்தான்!......
கைகால் கழுவிவிட்டு
வேப்பெண்ணெய் ஊற்றி
வேகமாக சமைத்தாள்!...
திக, திமுக மட்டும் இந்திய தடுக்கலேனா இந்நேரம் இந்தியா முழுக்க ஒரே ஆட்சி மொழி, கல்வி மொழியா இந்தி இருந்திருக்கும். நாம இங்கிலீஷ் படிக்காம, சீனா காரன் மாதிரி இருந்திருப்போம். அவனாவது மொழி தேவையே இல்லாத ஹார்டுவேர் ஃபீல்டுல வளர்ந்திட்டான்.
“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது;
மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு,
மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
விரல்தேய எழுதினார்;
நாதேய பேசினார்; சூதில் பழம்தின்று
கொட்டைப்போட்ட
சைவ ஓநாய்களையே
ஏமாற்றிக் குனியவைத்தார்;
அவற்றின் முதுகிலேறி
சவாரி செய்தார்;
ஆயிரம் ஆண்டுகளாய்
சிம்மாசனத்தில் படிந்திருந்த
பூணூலைப் பிய்த்தெறிந்தார்.
***
அவர் பெயர் ராமானுஜம்.
தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்.
காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது.
தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.
காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார்.
அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.
திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம்வேண்டும் என்பதால்,சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டைமுடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம்.