கீழே உள்ள படத்தில்
காலணிகளுக்கு பூ
வைத்து உள்ள
காரணம் உங்களுக்கு
தெரியுமா...?
*இதை பார்ப்பதே கோடி புண்ணியம்.*🙏🙏
ஸ்ரீரங்கத்தில் பள்ளி
கொண்டு உள்ள,
பெரிய பெருமாள் அணிந்து கொண்டு, தேய்மானத்திற்கு பின், கழட்டி வைக்கப்பட்டு, ஸ்ரீரங்கம், திருக்கொட்டாரம் எனும் இடத்தில், தூணில் மாட்டி
வைக்கப்படும்.
புதிய, பாதணிகள்
செய்ய, தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள பிரத்யேக
பாதணிகள் அரங்கனுக்காக,
செய்பவர்கள் இருக்கிறார்கள்.
வலது பாதணி
ஒருவரிடமும்,
இடது பாதணி மற்றொருவரிடம்,
செய்ய கொடுப்பார்கள்.
இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள்.
பெருமாள் கோயிலில் பிரசாதமாக துளசி தீர்த்தம் தருவார்கள். கருணையே உருவெனக் கொண்டு திகழ்பவர் மகாவிஷ்ணு. ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமான அழகுடனும் சாந்நித்தியத்துடனும் காட்சி தருவார்.
இப்படியான சாந்நித்தியங்கள் கொண்ட இடம் என்பதால்தான் அந்த ஊரில், அந்த இடத்தில்,மன்னர்கள் பிரமாண்டமான கோயிலை எழுப்பி வழிபட்டு வந்தார்கள். சக்தியும் சாந்நித்தியமும் கொண்டிருப்பதால்தான் அந்தக் கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் நம்முடைய வழிபாட்டுக்கு
உரிய திருத்தலமாக போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
எத்தனையோ பெருமாள் கோயில்கள் உள்ளன.
இவற்றில் திவ்விய தேசம் என்று போற்றப்படுகிற திருக்கோயில்களும் இருக்கின்றன.
108 திவ்விய தேசங்கள் என்றும் 108 திருப்பதி என்றும் போற்றப்படுகின்றன.