ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்
வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காது படவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய் விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டு விட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
கவலைகளை விட்டொழியுங்கள்.
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும்.
உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கீழே உள்ள படத்தில்
காலணிகளுக்கு பூ
வைத்து உள்ள
காரணம் உங்களுக்கு
தெரியுமா...?
*இதை பார்ப்பதே கோடி புண்ணியம்.*🙏🙏
ஸ்ரீரங்கத்தில் பள்ளி
கொண்டு உள்ள,
பெரிய பெருமாள் அணிந்து கொண்டு, தேய்மானத்திற்கு பின், கழட்டி வைக்கப்பட்டு, ஸ்ரீரங்கம், திருக்கொட்டாரம் எனும் இடத்தில், தூணில் மாட்டி
வைக்கப்படும்.
புதிய, பாதணிகள்
செய்ய, தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள பிரத்யேக
பாதணிகள் அரங்கனுக்காக,
செய்பவர்கள் இருக்கிறார்கள்.
வலது பாதணி
ஒருவரிடமும்,
இடது பாதணி மற்றொருவரிடம்,
செய்ய கொடுப்பார்கள்.
இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள்.
பெருமாள் கோயிலில் பிரசாதமாக துளசி தீர்த்தம் தருவார்கள். கருணையே உருவெனக் கொண்டு திகழ்பவர் மகாவிஷ்ணு. ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமான அழகுடனும் சாந்நித்தியத்துடனும் காட்சி தருவார்.
இப்படியான சாந்நித்தியங்கள் கொண்ட இடம் என்பதால்தான் அந்த ஊரில், அந்த இடத்தில்,மன்னர்கள் பிரமாண்டமான கோயிலை எழுப்பி வழிபட்டு வந்தார்கள். சக்தியும் சாந்நித்தியமும் கொண்டிருப்பதால்தான் அந்தக் கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் நம்முடைய வழிபாட்டுக்கு
உரிய திருத்தலமாக போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
எத்தனையோ பெருமாள் கோயில்கள் உள்ளன.
இவற்றில் திவ்விய தேசம் என்று போற்றப்படுகிற திருக்கோயில்களும் இருக்கின்றன.
108 திவ்விய தேசங்கள் என்றும் 108 திருப்பதி என்றும் போற்றப்படுகின்றன.
பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார்.
அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது.
தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது.
நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்றுவிடுகிறேன்.
அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன் என்னைத் தடுக்காதே என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடக்கூடத் தகுதியில்லை.