More names! thiruththam.blogspot.com/2018/12/2.html
நான் பார்க்கும் DATAக்களை இங்கே பகிர்கிறேன். எழுத்துப் பிழை இருக்கே, இது அனைத்தும் தமிழ் பெயரா, meaning வேண்டுவோர் pls do ur own research.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முந்தைய பதிவின் தொடர்ச்சி:
மனிதர்களை கூலி அடிமைகளாக தயார்படுத்தும் கல்வி தான் இங்கே இருக்கிறது. சமூக இயக்கம், மனித மனம் மற்றும் உடலியக்கம் பற்றிய கல்வி என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்று கூட அறியாத நிலையில் தான் பெரும்பான்மை மக்கள் உள்ளனர்.
உளவியல் கல்வி என்பதும் ஒரு தனித்துறை, அது உருவான சமூகப் பின்னணியின் காரணமாக அதிலும் போதாமை உள்ளது.
அது ஒருபக்கம்! பாலியல் தேவை குறித்து தொடர்கிறேன்!
பாலியல் தேவை உள்ளவர்களுக்கான பதிவு இது!
உடலுறவு தேவை என்பதையே கொச்சையாக பார்க்கும் சமூகம் இது! பாலியல் தேவையை துறந்து வாழ்பவரே இங்கே புனிதவான்கள்! ஏன் அப்படி? பாலியல் தேவை இருப்பவர் எந்த அறிவியலின் அடிப்படையில் “கேடு கெட்டவர்?” இதற்கெல்லாம் இங்கே பதில் இருக்காது.
மனைவியே ஆனாலும் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்பது மிகவும் சரி! அதை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை இணையர்களில் ஒருவருக்கு உடலியல் / பாலியல் தேவை இருப்பின் அதற்கு என்ன தீர்வை இந்த போலியான ஒழுக்கவாத சமூகம் வைத்திருக்கிறது.
எந்த பாலினமானாலும் பாலியல் தேவை இருப்பவர்கள் திருமண உறவில் அது நிறைவேறவில்லை எனில் தன் துணையிடம் தன் தேவைகள் குறித்து வெளிப்படையாக பேசி திருமண உறவுக்கு அப்பாற்பட்டு தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் Right TO Sex உள்ளதா? அல்லது முறைப்படி பேசி விவாகரத்து பெற வழி உள்ளதா?
பாலியல் வன்முறைகளுக்கும், ஏமாற்றுகளுக்கும் இதுவும் ஒரு காரணம் அல்லவா? இதனால் பாதிக்கப்படுவதும் பெண்கள் தான்! விவாகரத்தும் எளிதாக கிடைப்பதில்லை. சகித்துக் கொண்டு வாழ் என்று தான் இரு தரப்புக்கும் சொல்லப்படுகிறது.
Honey Trap என்பது பெண்களை வைத்து (DM மூலம்) ஆண்களை டிராப் செய்வது என்று ஒரு மேதாவி சொல்கிறார். ஆனால் TL இல் தொடர்ந்து லைக் போடுவது, பெண்களின் கவனத்தை ஈர்ப்பது, 1/2
அவர்களுக்காக பரிந்து பேசுவது என்று 2 வருடம் ஆனாலும் TL இல் விடாது துறத்தி, பெண்களை தங்கள் “காதல்” வலையில் வீழ்த்த அலையும் ஆண்களுக்கு இங்கு என்ன பெயர்? ஏண்டா எல்லாத்துலையும் பெண்களையே வலை வீசுபவர்கள் என்கிறீர்கள்.. honey என்பது பெண்ணை தான் குறிக்குதா? ஆணாதிக்கத் திமிர்!
ஆனோ பெண்ணோ ஹனி டிராப் என்பதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடுவார்கள். an occasion when an attractive person tricks another person into revealing secret information or behaving in an illegal or immoral way. dictionary.com/browse/honey-t…
என் பள்ளிப் பருவத்தில் வரலாறு / இயற்பியல் வாத்தியார்கள் எப்போதும் தடவிக் கொண்டே தான் பேசுவார்கள். 13,14 வயதில் என்ன தைரியம் இருக்கும். இப்பவாச்சும் சமூக ஊடகம் வழியா ஏதோ நியாயம் கேகலாம்.. 1990Sல மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துச்சு? 1/3
கெமிஸ்டரி மிஸ் எப்ப பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் பொறாமைல என்னை தப்பா பேசும்! மினுக்கிட்டு வரத் தெரியுது படிக்க தெரியலையா! சனிக்கிழமை என்று வண்ண உடை உடுத்தி வருவதற்கு இந்த பேச்சு! அதுவும் அது பள்ளியில் அனுமதிக்கப்பட்ட ஒன்றே 2/3
ஆனால் இவரக்ளை எல்லாம் எதிர்த்துப் பேசவே பயமாக இருக்கும்.. டிசியில் கை வைத்து விடுவார்கள் என்பதே எழுதா விதியாக இருந்தது. இன்று அரசே அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என்பது மீண்டும் ஆசிரியர்களுக்கு எல்லையில்லா அதிகாரம் வழங்குவதற்கே சமம்! 3/3
எந்தவித வரலாற்றுத் தரவுகளின்றி, ஒருவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் என்ன என்பது பற்றிய நியாயங்கள் இன்றி கண்மூடித்தனமான வெறுப்பரசியலை தலித் அரசியல் என்னும் பெயரில் சிலர் செய்துவருகின்றனர். முக்கியமாக பண்பாட்டு மைய்ய முதலாளி!
பிரஷாந்த் பூஷன் அவர்களுக்கு 1ரூபாய் அபராதம் என்றதும் பூனூலுக்கு 1 ரூபாய் தலித்துக்கு 6 மாதம் என்று வன்மம் நிறைந்த ஒரு பிரச்சாரத்தை பண்பாட்டு மையமும், சில தலித்திய ஆர்வக்கோளாருகளும் பரப்பி வருகின்றன. இது மிகவும் கேவலமான பிரிவினைவாத வெறுப்பரசியலன்றி உண்மையுமில்லை.
நீதிபதி கர்ணன் குறித்து வழக்குறைஞர் பொ. இரத்தினம் எழுதிய பதிவு இது. அவர் யார் என்று தெரிய வேண்டுமானால் மேலவளவு, சென்னாகரம்பட்டி கொலை வழக்குகளில் தலித் மக்களுக்காகப் போராடிய இடதுசாரி என்பதை தேடித் தெரிந்துகொள்ளவும் tinyurl.com/y3a9ugrh
கம்யூனிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள் அடிப்படையில் கடவுள் மறுப்பாளர்கள். அவர்கள் ராமனையும் ஏற்பதில்லை புத்தன், ஏசு, அல்லா, மேரி, மாரியாத்தா யாரையும் ஏற்பதில்லை. அதேநேரம் அவர்கள் மதத்தின் தோற்றுவாயை அறிந்தவர்களாக ஆளும் வர்க்கத்தி மதவாத அரசியல் அறிந்தவர்களாக ....
அந்தந்த நாட்டின் மத ஆதிக்கத்தை, அரசியல் மதத்தின் தலையீட்டை எதிர்ப்பவர்கள். குறிப்பிட்ட நாட்டில் எது ஆளும் மதமாக இருக்கிறதோ அதற்கு எதிராக அதாவது மதப் பெரும்பான்மைவாதம், மதச் சுரண்டல்வாதம், மத ஆதிக்கம் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்ப்பதன் அடையாளமாக
குறிப்பிட்ட ஆளும் வர்க்க மதத்தை எதிர்ப்பவர்கள். அதனால் மற்ற மத சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதால் அவர்கள் மக்களின் பக்கம் நிற்பவர்களே ஒழிய மற்ற மதங்களின் கடவுள்களை ஏற்பவர்கள் அல்ல.