*புண்ணியமாக இருந்தாலும் பாவமாக இருந்தாலும் நீ செய்தது உனக்கே சொந்தம்...*_
1) பாவத்தை விரும்பி செய்பவன் அதன் தண்டனையை அவன் விரும்பாவிட்டாலும் அனுபவித்து முடிக்க நேரிடும்.
2) பாவம் முதலில் கண்களின் மூலம் உருவாகின்றது கண்கள் சுத்தமானால் அனைத்தும் சுத்தமாகும்.
3)மனதினுடைய சிந்தனைகள் பாவத்தை படம் பிடிக்கின்றது.
அந்த பாவத்தை செய்வதற்கு புத்தி தீர்மானிக்கின்றது.
பிறகு செயல்கள் மூலமாக பாவம் வெளிப்படுகின்றது.
4)பாவம் கண்களின் மூலமாக சஞ்சலத்தை உண்டு பண்ணும் பொழுதே பார்வையை நேர்மையானதாக மாற்ற முயல வேண்டும். அது மேலும் பாவ சிந்தனையை உருவாகாமல் தடுத்துவிடும்.
5) பாவம் தன் மூலமாகவும் உருவாகிடக்கூடாது பிறர் மூலமாகவும் உருவாக்கப்பட கூடாது.
இதற்காக சுய சோதனை செய்யவேண்டும் எங்கிருந்து பாவம் உருவாகின்றது என்பதை உற்று நோக்கி கவனித்து விலக்கவேண்டும்.
6) தனது செயல்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் இன்று நான் செய்த செயல்கள் சரியானதாக இருந்ததா? எவ்விதத்திலும் தவறு ஏற்படவில்லையே? பிறருக்கு துக்கத்தை கொடுத்ததா?
எவ்விதத்திலும் பிறருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதா? என்பதை சுய சோதனை செய்து சுயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
7) யாருடனும் பாவத்திற்கு உடன் படக்கூடாது. யாரையும் பாவம் செய்வதற்கு உடன்படுத்த கூடாது.
ஏனென்றால் பாவம் என்பது உயிருடன் எரியும் பிணக்கிடங்கில் தள்ளுவதை போல ஆகும்.
அந்த வேதனையின் குரல் யாருக்கும் கேட்காது. எனவே பாவம் செய்வதற்கு ஒருவர் பயந்து நடக்க வேண்டும்.
8)ஒரு பக்கம் பாவம் செய்து கொண்டே இன்னொரு பக்கம் புண்ணியமும் செய்தால் ஒருநாள் சேர்த்து வைத்த பாவம் அனைத்தும் செய்த புண்ணியத்தையும் சேர்த்து அழித்து விடும்.
எனவே பாவ புண்ணிய கணக்கை இரவில் பரிசோதித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.
9)ஒருவர் புண்ணியம் செய்யும் பொழுது அவர் மனதின் நிலை கவனிக்கப்படுகின்றது.
அந்த மனதின் நிலையை பொறுத்தே புண்ணிய பலன்கள் கணக்கிடப்படுகின்றன .
10) நீ எந்த அளவு பிறர் உனக்கு செய்த துரோகத்தையும் பாவத்தையும் மன்னித்து விடுகின்றாயோ, அந்த அளவு உனது பாவங்களும் துரோகங்களும் தந்தை ஈசனிடத்தில் மன்னிக்கப்படுகின்றன.
11) உன்னை சார்ந்தவர்களுக்கும் உன் குடும்பத்திற்கும் நீ செய்வது உதவி. உன்னை யாரென்றே தெரியாத ஒருவருக்கு நீ செய்யும் உதவி தான் புண்ணியம்.
12) இறைவன் தனக்கு செய்யும் அபிஷேகத்தை விட இயலாதவர்களுக்கு செய்யும் உதவியை மட்டுமே பெரிதும் விரும்புகின்றார்.
எனவே, தன்னால் முயன்ற உதவிகளை பிறருக்கு செய்து பார்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து அனுஷ்டிக்கப்படும் நோன்பாகும்.
இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும்.ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி நோன்பாகும்.
*தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு "ரதசப்தமி" என்று பெயர்.*
*அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்*
*ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை "சூரியநாராயணன்" என்று போற்றுகின்றனர்.*
*சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார்.*
*வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.*
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.
முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.
பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.
அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.
நரசிம்மரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் விரைந்து நிறைவேறுகிறது.
சென்னையில் உள்ள நரசிம்மர் கோவில் பற்றி அறிந்து கொள்ளலாம்.
*பேராகிமடம், சவுகார்பேட்டை* : இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம்.
தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.
*திருவல்லிக்கேணி யோக நரசிம்மர்* : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை.