காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது திருவெண்காடு. இத்தலத்திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. யுகம் பல கண்ட கோயில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது.
"காசியில் இருப்பது விஷ்ணு கயா. இங்கு வழிபட்டால் 7 தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.
ஆனால் திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியைவிட 3 மடங்கு அதாவது 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும்" என்கிறார்கள்.
காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.
இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும்.
அதன்பின் சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.
இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினர்க்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கு வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள்.
நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம்.
குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும்.
இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.
பெண்கள் குங்குமம் இடுவதால் மகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.
கல்யாணம் தள்ளி தள்ளி போகுதா
தடைபடும் திருமணம் விரைவில்
நடக்க உதவும் ஆண்டாள் விரதம்..
ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.
ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள். எனவே ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும்.
பூரத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டால், உடனே திருமணம் கை கூடும்.வாரணம் ஆயிரம் பாடி வந்தால் பெண்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.
பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும்
மகிமை வாய்ந்தது.
🌹 🌿 நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-
🌹 🌿 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
🌹 🌿 2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.
🌹 🌿 3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் முறையை
விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.
🌹 🌿 4. நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் மிக பிரம்மாண்டமான கொலு
(நாள் : 26.09.2022 – 04.10.2022, நேரம் : மாலை 06.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை)
சிதம்பரம் சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள்படுவது.
வேத நெறி வழிபாடுகளுக்கு சிறப்புற்றது.
திருமுறைகளை வெளிக்கொணர்ந்த தலமாகப் போற்றப்படுவது.
அனுதினமும் ஆடல்வல்லப் பெருமானாகிய நடராஜ மூர்த்தி ஆனந்தமாக நடனமாடி, தன்னை அண்டி வரும் அனைத்து பக்தர்களுக்கும் அருளை வாரி வழங்கும் அற்புதத் தலமாக விளங்குவது.
அனைத்துக் கலைகளின் செறிவும், நிறைவும் உள்ளடக்கிய திருத்தலமாக அமைந்தது.
இவ்வாலய, திருவிழாக்கள் மிக பிரம்மாண்டமான முறையில் மிகப் புகழ்மிக்கதாக அமையும்.
அவ்வகையில், நவராத்திரி விழாவும் மிக மிக பிரம்மாண்டமான முறையில்,
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களின் வழிகாட்டுதலில்,