#செல்ப்_திரெட் முதல் நாள் பள்ளி முதல் நாள் வகுப்பு எப்படியிருக்கும் செமையா இருக்குமில்லே
அவ்வளவு நாள் விடுமுறை அம்முச்சி ஊரு அப்பத்தா ஊருன்னு நல்லா ஊர் மேஞ்சுட்டு திரும்பும் போது இருக்க வேதனையே இருக்கே 😭 நம்ம X தான் புள்ளையிடம் மாமான்னு நம்மளை அறிமுக படுத்துற வேதனையைவிட கொடூரம்
தாத்தாட்ட கெஞ்சி கூத்தாடி ஒரு school bag வாங்குறதுக்குள்ள நம்ம படுற பாடு இருக்கே எப்பப்பா.. நம்மகூட வேற யாராவது கூட்டா வந்து கெஞ்சிட்டா bag தோள் பையா மாறிடும்.. சில நேரத்துல அக்கவோட bag 🤦🏼♂️ எதுவாயிருந்தாலும் நமக்கு புதுசுதானே என்று தயார் நிலையில் பழ பழன்னு வெச்சுருப்போம்
ஒரு செட் யூனிபார்ம்க்கு துணி இன்னொரு தாத்தாட்ட வாங்கி அதை தைக்க 2மாசத்திற்கு முன்னாடியே கொடுத்தாலும், நாளைக்கு முதல்நாள்னா இன்னைக்கு சாய்ங்காலம்தான் வெட்டுவார் நம்ம குமார் டைலர், கேட்டா நில்லுடா ஒரு மணிநேரம் என்பார்..இதை ஒரு எபிசோட்டாவே எழுதலாம்
நைட் பத்துமணி, காலையில 6மணி, குளிச்சபிறகு ஒருவாட்டி, சாப்பிட்டு பிறகு ஒருவாட்டி, பஸ் வந்தபிறகு அண்ணா அண்ணா பஸ் வந்துடுச்சுனானு சொல்லும்போதுதான் பட்டனில் முடிச்சு போட்டு முடிப்பார், அதை வாங்கிட்டு போய் போட்டு கண்ணாடியில பார்க்கறப்ப ஆரன் அடிக்க ஓடிப்போய் பஸ்ல ஏறினா
குப்பையை பொறுக்கி முடிச்சதும் வகுப்பு பிரிப்பானுக நல்ல பிகரெல்லாம் நம்ம வகுப்பு வரனுமேன்னு வேண்டாத சாமியிருக்காது. தூரோகிகள், முதல் பெஞ்ச், ஜால்ராக்களெல்லாம் நம்ம வகுப்புலேயே வந்து சாகடிக்கறப்ப வரும் பாரும் ஆத்திரம் 🤬🤬 ஒரு வழியா வகுப்பு பிரிச்சதும் அடுத்த சஸ்பென்ஸ்
யார் கிளாஸ் டீச்சர் யாரெல்லாம் எந்த எந்த படத்துக்கு ஒவ்வொரு பீரிடும் திரில்லா இருக்கும், இதுல ஒரு நல்ல வாத்தியார் A section வந்துட்டு ஆமாம் இது B section தானே? என்பார் சார், அந்த கொடுமையிருக்கே 🤦🏼♂️ போட்டதுணி மேல எவனும் கை போட்டு அழுக்காகமா இருக்க நம்ம பன்ற அழும்பு இருக்கே
பொல்லதவன் படத்துல புது பைக்க தொடுற கதைதான்,lunch டைம்மாக gang ல ஒருத்தன் புது டிபன் பாக்ஸ் வாங்கியிருப்பான் கொஞ்சம் பொறாமையா இருந்தாலும் சாப்பாட்டை பகிர்ந்து தயிர் சாதத்தில சாம்பார் சாதம் அதுல லெமன் சாதம் ன்னு எல்லாம் மிக்ஸாக அந்த சுவையை எந்த பவனாலையும் தரமுடியாது 😋
ஒவ்வொரு பீரிடும் செல்ப் இன்ட்ரோ, என்ன ஆகப்போறேன்னு சொல்லி சொல்லி வாய்மாளாது.. 1st பீரிட்ல டாக்கடர்ல ஆரம்பித்து பைலட், engineer, teacher ன்னு . எல்லாத்தையும் last period குள்ள சொல்லிடனும் .. அவ்வளவு தெளிவு 🤣🤣 இதை விட பக்கத்துல உட்காந்து ஊருக்கு போன கதையை நொய் நொய்ம்பானுக
அதிலேயும் அவன் அத்தை பெண்ணை பார்த்தது உம்மா கொடுத்ததுன்னு நம்மளை சாவடிப்பான், இன்னொருத்தன் பாட்டி வீட்டுல மலப்பாம்பு பார்த்தேன் உடும்பு பார்த்தேன் என்பான், பாட்டி ஊர்ல படத்துக்கு போனேன் ரஜினி எவ்வளவு கலர் தெரியுமான்னு வேற சொல்லுவான் பின்னாடி ஒருத்தன்
மாமாட்ட துப்பாக்கியிருக்கு இது சுட்டா ரிவேர்ஸ்ல வரும்பான், இப்படி பல புது கதைகளோட நகரும் இனிய நாள்தான் அந்த முதல்நாள்.. அடுத்த வகுப்பு அண்ணாட்ட பழைய நோட்ஸ் வாங்குறது, புதிய நோட்டுக்கு அட்டை போட்டு லேபிள் ஒட்டி பார்டா சக்திமான் லேபிள்ன்னு சொல்லுறது, நோட்ல நம்ம பேரை டிசைன் பன்றது
இன்டர்வலில் பெயிலான நண்பனை பார்த்து ஆறுதல் சொல்றது, வகுப்பு மாறின நன்பனை சந்திப்பதுன்னு இன்பமாய் கதையோடும் சிரிப்போடும் சிறாப்பாய் முடியும் அந்நாள் என்னாளும் பொன்னாளே 🙏🏽🙏🏽
நண்பன் குடும்பத்தோடு வெளியே போனோம் அப்ப அவருக்கு நடந்த ஒரு சம்பவம் அந்த இரவில் அந்த கொடூரம் யாருக்கும் நடக்க கூடாது.. சுவரஸ்யத்திற்காய் அவனே இங்கு கதை சொல்வான்..
எல்லா நாட்களைப் போலவும் சாப்பிட்டு குழந்தைகளையும் சாப்பிட்டு தூங்க போகலாம்ன்னு போனேன்..
அப்பதான் வூட்டம்மா குப்பையை போய் கொட்டிட்டு வான்னு சொல்ல நானும் கையில குப்பை கவரோட கிளம்ப முற்பட்டேன் உடனே சின்னவன் நானு நானு ன்னு துள்ளி குதிக்க ஒரு கையில கவரு இன்னொரு கையில அவனை தூக்கிட்டு நகர்ந்தேன் அழுகற சத்தம் கேட்க திரும்பினேன் ..
பெரியவன் சினுங்கிட்டு நானும் வரேன் என சொல்ல சரிவாடான்னு கவரோட அவன் விரலை பிடிக்க புன்னகையோட அடுத்த அடுத்த அடிகள் எடுத்து வைத்தான்.. ஒரு கையில சின்னவன் மறுகையில் குப்பை பெரியவன்னு கதவ தொறந்த பெரியவன் செருப்பு போட்டு விட சொன்னான் அப்பதான் அந்த சம்பவம் நடந்தது..
ஓர் அழகான காதல் கதை எழுத ஆசை அப்படி நான் சுவரஸ்யமான எந்த காதலையும் கடக்கததினாலே அப்படியான நிகழ்வுகள் இல்லை அதனலே எங்கோ படித்தது எங்கோ கேட்டது என ஓர் புனைவை முயற்சிக்கிறேன் இதில் நாயகனாக நானே பயணிக்கிறேன்..
பள்ளியில படிக்கும் போது தன்னோட வகுப்புல நமக்குனு ஒருத்தி இருப்ப
அவளை எப்படி கண்டுபிடிக்கிறது அதற்குதானே நமது நண்பர்கள் இருக்காங்க.. அவனுகளா ஒரு பெண்னோடு கோர்த்து விடுவானுக அப்படி ஒருவளை என்னோடு கோர்த்து விட்டார்கள் காலையில் பேருந்தில் ஆரம்பிக்கும் அந்த கிசு கிசுப்பு, நான் பேருந்தின் முதல் நிலையத்தில் ஏறிவிடுவேன்
படியின் முதல் இருக்கையில் அமர அனுமதியில்லை இரண்டாவது இருக்கையில் அமர்வது வழக்கம் சென்னையில ரூட்டு தலை போல அந்த சீட்ட பிடிக்க ஒரு போரட்டம் நடக்கும் ஆனால் சின்ன வயதுல சில அண்ணாக்களின் மடியில் அந்த சீட்டில் உட்கார்ந்ததால் எனக்கு இலகுவாக அரும்புமீசை முளைத்ததும் அந்த சீட் கிடைத்தது.
பெட்ரோல் கிடைத்த மகிழ்விலும் தமிழ் கேட்ட மகிழ்விலும் நேராக வண்டிய பக்கத்து பக்காலா(கடை) யில நிறுத்தி தண்ணி தீணின்னு வாங்கி போட்டேன் நேரம் 7யை நெருங்கியிருந்தது
ஏசி போடாம ஓட்டிட்டு வந்ததால டி சர்ட் புல்லா வேர்த்து நினைந்து இருந்தது, இப்ப ஏசியை போட சில்லென காற்று என் மீது படற நினைந்த உடலில் சில்லென்ற காற்று பட கூட இசைஞானி தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என பாட கார் மெதுவாக மிதந்தது .. கொஞ்சம் நகர்ந்ததும் இருபுறமும்
இருபுறமும் உணவகங்களும் கடைகளும் நிறைய என் கார் பயணமானது, பசியில்லை தாயிஃப் போயி சாப்பிடுவது என முடிவோடு நகர்ந்தேன், அங்கேதான் அடுத்த படலம் ஆரம்பமானது ஆம் அது அவரு இரு வழி சாலை சைன் போர்ட் வலது புறம் காட்டுது ஆனால் அக்கா கூகுள் மேப் இடதுபுறம் நேராக போ என்கிறது.
இரண்டு வாரம் பயணம் முடிந்து ஜித்தாவில் இருந்து ரியாத் வர ஆயுத்தமானேன் வூட்டுகாரம்மவும் இல்லை நான் மட்டும் தனியாகதான் வந்தாக வேண்டும் ஜித்தாவிற்கு முதல் பயணம் அது long time so வண்டியில போனேன்.. ஜித்தாவில் இருந்து ரியாத் மொத்தாம 1000km
9மணி நேரப்பயணம், ஆனால் கடைசிநாளில் inventory plan செய்து இருந்தேன் office போகும் போது பெட்ரோல் அடிக்கவில்லை இல்லை மறந்துட்டேன், ஆபிஸ்ல இருந்து inventory முடிக்கும் போது 6மணி நல்ல rush time இருப்பினும் hotel vacate செய்தாச்சு ஷோ இப்படியே கிளம்பலாம் என முடிவு
அதன் படி மேப் போட்டேன் அது நான் வந்த வழியை காட்டவில்லை வேறொருவழியை காட்டியது இந்த 10நாளில் ஒரு அளவிற்கு customer place போக ரூட் கத்து வெச்சு இருந்தேன் இருப்பின் கூகுள் மேப் பொய் சொல்லாதுன்னு நம்பி வண்டியை எடுத்தேன் அப்பதான் பெட்ரோல் கம்மியாக இருப்பது புரிந்தது
2007 காலேஜ் 3year 5th Sem முதல் symposium பாண்டிச்சேரியில ஒரு காலேஜ்கு போனோம் அதுல எங்க dep ல 6பேர் போனோம் நான் 6வது ஆள் ECEdeptல ஒருத்தன் paper presentations க்கு வந்தான் மொத்தம் 7 பேர் சர்கீயூட் டிசைனீங் & mini project நாங்க focus செய்தோம்
Paper presentation and circuit designing ஒரே டைம்ல நடந்தது நாங்க second prize paper presentation செய்தவன் win பண்ணலை evening Pondy குதுகலமாக இருந்துட்டு அடுத்த நாள் mini project காலையில 8மணிக்கு ரெடி ஆகினோம் 10மணிக்கு stall போகனும் ஆனால் அப்பதான் ஓர் பேர் அதிர்ச்சி காத்திருந்தது
இரண்டு project கொண்டு வந்திருந்தோம் (3பேர் ) laptop amplifier (3பேர்)irrigation control, அறியா வயதில் இதெல்லாம் அரிய கண்டுபிடிப்பு என நினைத்து கண்டிப்பா prize வாங்கிறோம்ன்னு கிளம்பினோம் இங்க வந்த என்ன என்னமோ innovative வெச்சுருக்கானுக சரி பேர் அதிர்ச்சிக்கு வருவோம்
PLC THREAD கெஞ்சம் வேளை பளு என்பதால் எழுதாம இருந்தேன் மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்..
லாஜிக் எப்படி போடுறதுன ரெம்ப சிம்பளா சொல்லனும்னா only இரண்டு input மட்டும்தான் NO (normally open ) NC (normally closed) அதென்னனு கேற்பவர்கள் படத்தை பார்த்துக்கொள்ளவும் 🤣🤣
இதைதான் ஏன் வாத்தியாரும் சொன்னாரு இதையவே நீயும் சொல்ற அதனே ?
நம்ம வீட்டு பல்பு சுவீட்ச் NO press செய்தால் NC ஆகிடும் இதுவும் புரியலைனா உடைந்த பாலம் யாரும் போக முடியது அது NO , புதிய நல்ல பாலம் NC யாரு வேணும்னாலும் ஏறி போகலாம்
(எடப்பாடியார் கட்டின பாலம் இல்லை)
இந்த இரெண்டும் மட்டும்தான் main inputs, outputs நிறையா இருக்கு coil, timer, counter, flip-flop, memory..etc
Coil அப்படிங்கறது direct output. அப்படினா? நேராக சுவிட்ச் போடுறோம் பல்புக்கு போயிடும்.
இந்த பல்பு 10நிமிசம்தான் எரியனும்னா? டைம் தேவை அப்ப timer