5. மிருகசீரிஷம் : ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
6. திருவாதிரை : ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி. மீ. )
7. புனர்பூசம் : ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமி கள் மடாலயம்.
8. பூசம் : ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
9. ஆயில்யம் : ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.
10. மகம் : ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டை யின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
11. பூரம் : ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.
12. உத்திரம் : ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மகா தேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
13. அஸ்தம் : ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
14. சித்திரை : ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி- மல்லி கார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.
15. சுவாதி:ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
16. விசாகம் : ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
17. அனுஷம் : ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.
18. கேட்டை : ஸ்ரீகதாயுத பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.
19. மூலம் : ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
20. பூராடம் : ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.
21. உத்திராடம் : ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
22. திருவோணம் : திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
23. அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.
24. சதயம் : ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.
25. பூரட்டாதி : கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.
26. உத்திரட்டாதி : ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்- சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்ப கோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
27. ரேவதி : ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்- தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.
*விஷ்ணுவை பற்றி நாம் அறிந்ததும்... அறியாததும்...!*
காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார்.
*திருமாலின் ஏகாதசி* :
ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. இதில் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று மனதார வழிபடுங்கள். தடைபட்ட எல்லா சுபக்காரியங்களையும் நடத்தித் தந்து அருளுவார் திருமால்.
*துளசி* :
திருமால் கோவில்களில் யார் ஒருவர் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
*நரசிம்மர் வழிபாடு :*
நம்முடைய வாழ்வில் இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கு தினந்தோறும் நரசிம்ம மந்திரத்தை மனஅமைதியுடன் சொல்ல வேண்டும்.
சரஸ்வதி பூஜை நன்னாளில் புராணங்கள் போற்றும் கலைமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும். முதலில் கலைமகள் திருத்தலங்களை தரிசிப்போம்.
‘#சரஸ்’ என்றால் ‘#பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், #சரஸ்வதி என்று அழைக்கப் படுகிறாள்.
கலைமகளின் புகைப்படத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து, அதனை மலர்களால் அலங்கரித்து, நாம் செய்யும் தொழில் சார்ந்த பொருட்களை அன்னையின் முன்பாக வைத்து வழிபாடு செய்தால், அந்த தொழிலில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதனால்தான் மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் புத்தகங்களையும், வேலை செய்பவர்கள் தங்களுக்குரிய கருவிகளையும், எழுத்தாளர்கள் பேனாக்களையும் வைத்து வழிபடுவதை வழக்க மாகக் கொண்டுள்ளனர்.
இந்த நாளில் சரஸ்வதி தேவி அருளும் ஆலயங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..
கூத்தனூர் சரஸ்வதி
திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே உள்ள பூந்தோட்டத்தில் சரஸ்வதி ஆலயம் ஒன்று உள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் புலவர், கலைமகளை வழிபட நினைத்தார்.