இந்து என்கிற பேரு இராஜராஜ சோழன் காலத்துல கிடையாது - நம்மவர் 🔥
இதற்கு கொந்தளிக்கும் பாஜகவினர் நேரம் இருந்தால் இந்த பதிவை படித்து தெளிவு பெறவும். (கஷ்டம் தான்)
1. இதுவரை கண்டறியப்பட்ட சோழர் கால கல்வெட்டு எதிலும், இந்து என்கிற சொல் கிடையாது.
2. ராஜ ராஜ சோழனின் காலத்தில் சிவனை கடவுளாக பார்க்கும் சைவ மதம் இருந்தது.அப்போது இந்து என்ற மதமே கிடையாது.
3. வடமேற்கு திசையில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் இந்திய நாட்டை அப்பொழுது சிந்து என்று அழைத்தார்கள்.காலப்போக்கில் சிந்து என்பது, ஹிந்து, இந்து என்று மருவி விட்டது. சிந்து என்றால் நதி என்று அர்த்தம்.
4.சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் தான் முதன்முதலில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குறிப்பிட இந்து என்ற சொல்லை பயன்படுத்தினார்.
5. விதவிதமான கடவுள்களை வணங்கும் மக்களை, ஒரே பிரிவாக சேர்த்து அழைக்க இந்து என்ற சொல்லை ஆங்கிலேயர்கள் தான் குறிப்பிட்டார்கள்.
6. சர் வில்லியம் ஜோன்ஸ் 1790களில் சட்டங்களை தொகுக்கும்போது, கிறிஸ்துவர்கள், இசுலாமியர்கள் அல்லாமல் இருக்கும் ஒரு பெரும் தொகையான மக்களை இந்துக்கள் என்ற பெயரில் வழங்கினார்.
(சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) (28 செப்டம்பர் 1746 – 27 ஏப்ரல் 1794) ஆங்கிலேயரான இவர் மொழியியல் அறிஞரும், நீதியரசரும் ஆவார். இவர் வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இந்து மற்றும் இசுலாமிய சட்டங்களின் நீதியரசராக 22
அக்டோபர் 1783 முதல் 27 ஏப்ரல் 1794 முடிய பணியாற்றியவர். )
மேலும் தமிழக ஆதீனங்கள் தங்களை சைவர்கள் என்று தான் குறிப்பிடுவார்கள். தங்களை இந்துக்கள் என்று சொல்ல மாட்டார்கள்.
சிவனை வணங்கும் கர்நாடக லிங்காயத்துக்கள் தங்களை இந்து என்று சொல்ல மாட்டார்கள்.
தமிழரின் அடையாளத்தை மறைக்க ராஜராஜன் இந்து என்று நிறுவ துடிக்கும் உங்கள் சங்கித்தனத்திற்கு எங்கள் நம்மவர் தகுந்த பதிலடி தந்து உள்ளார்.
நீங்க எவ்வளவு தான் கதறினாலும் வரலாற்றை திரிக்க முடியாது.
மீண்டும் அழுத்தமாக சொல்வோம் "இந்து" என்கிற பெயர் இராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது.
இதற்கு மேலும், விளக்கம் தேவை என்றால், உங்கள் குருநாதர் திரு. சோ ராமசாமி பேசிய காணொளி பார்க்கவும்.