இன்று பொம்மைகளை எடுத்து துடைத்து அட்டைப்பெட்டிக்குள் அடுக்கி வைத்து அட்டானியில் வைக்க வேண்டும்.
மனதில் அம்மாவின் நினைவுகள் தாலாட்ட தொடங்கியது.
சட்டென்று மனதில் ஒரு வெறுமை வாட்டியது.
மாலையில் மொட்டைமாடிக்கு சென்று, நீல வானத்தையும், திடீரென்று சூழ்ந்த கருத்த மேகங்களையும் பார்த்து கொண்டு இருந்தேன்.
தென்றல் காற்றுக்கு ஏதோ வருத்தம் இருக்க வேண்டும். ஏதோ யோசனையோடு, வீசுவதா, வேண்டாமா என்று சிலுசிலுவென்று மிக மெதுவாக தவழ்ந்து வந்து,
தழுவிக்கொண்டு போனது. காற்றுக்கென்ன வருத்தம்? மரங்களின் மீதா? இலைகளின மீதா?
சரி. காற்று என் வருத்தத்தை பங்கு போட்டு கொள்கிறதோ? எனக்கு என்ன வருத்தம்? அம்மாவின் நினைவுகள் தான்.
எங்கள் வீட்டில் பாரம்பரியமாக கொலு வைக்கும் வைபவம் இருந்து வந்தது.
நாங்கள் ஈரோட்டில் இருந்தபோது, பெரிய ஹாலில், 9 படிக்கட்டுகள் வைத்து, பழைய பாரம்பரிய பொம்மைகளுடன் பூம்புகாரில் வாங்கிய பொம்மைகள் கொலுவில் இருந்தது ஞாபகம் வந்தது.
கொலுவிற்கு நான்கு நாட்கள் முன்பே கொலு வைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விடும்.
சுப்பிரமணி ஆசாரி வந்து 9 படிகளுக்கு தேவையான மரப்பலகைகளை உண்டாக்கி கொடுத்தார்.
கீழே வைக்க மர ஸ்டூல்களையும் வைத்து விட்டு போய்விடுவார். இருபுறமும் ஸ்டூல்களை வைத்து, அதன்மீது அதற்குண்டான பலகைகளை வைத்து, அதன் மீது வெள்ளை வேட்டியை விரித்து, படிக்கட்டுகள் தயாராகி விடும்
பின்பு அட்டானியில் இருந்து ஒவ்வொரு பெட்டியாக இறக்கி, புடவைதுணியில் சுற்றி வைத்த பொம்மைகளை வெளியில் எடுத்து, வரிசை மாறாமல் அடுக்கி வைத்து, தூரத்தில் இருந்து அழகு பார்த்து, வைப்பது வரை அம்மாவே செய்து விடுவாள்.
அக்கா அவளோடு தோழிகளுடன், ஓரமாக இருக்கும் இடத்தில், மணலை வைத்து, பார்க் மாதிரி ரெடி பண்ணி விடுவாள்.
தஞ்சாவூர் மரப்பாச்சி பொம்மைகள், இவை எல்லாம் அம்மா கல்யணமாகி வரும்போது கொண்டு வந்தது, பாரம்பரியமாக பல வருடங்களாக இருப்பது. இதோடு செட்டியார் மளிகை கடை இப்படி வகைவகையாக இருக்கும்.
வழக்கம்போல எந்த ஊருக்கு போனாலும் அம்மாவிற்கு உதவி செய்வதற்காகவே பிறந்தவர்கள் போல் அக்கம் பக்கத்து மாமிகள். அம்மாவின் முகராசி அப்படி. அம்மாவே கல்யாணமாகி நீண்ட நாட்கள் வரை மடிசார் கட்டிண்டு தான் இருந்தாள்.
என் கல்யாணத்திற்கு பின்பு தான் தினமும் கட்டுவதை நிறுத்தி, பண்டிகை விஷேச தினங்களில் கட்ட ஆரம்பித்தாள்.
கொலு வைக்கும் வைபவம் ஒரு புறம் என்றால், கூடவே தினமும் நேவைத்தியத்திற்கு என்ன சுண்டல் என்ற லிஸ்ட் தயார் செய்வது மறுபுறம்.
அதற்கு தேவையான அனைத்தும் சின்ன அண்ணா வாங்கி வந்து தயார் செய்து வைத்து விடுவான்.
சுமங்களிகளுக்கு தினமும் கொடுக்க தேவையான வளையல், கண்ணாடி, ரவிக்கை துணி, குங்குமச்சிமிழ் எல்லாம் முன்பே தயார் செய்து தாம்பூல-பை மாதிரி ஒரு பையில் தயாராக இருக்கும்.
தினமும் கொலு மற்றவர்கள் வருகையால் களை கட்டி விடும். அம்மாவே அருமையாக பாடுவாள். MS அம்மாவின் பாடல்கள் அனைத்தும் மனப்பாடம். வருபவர்கள் அம்மாவோடு சேர்ந்து பாடுவார்கள்.
அக்காவின் சிநேகதிகள் பலரும், அக்காவோடு மியூசிக் கிளாஸ் சென்று, முறையாக பாட்டு கொண்டு கொண்டவர்கள்.
அப்போது எல்லோருக்கும், எல்லாமும் தெரிந்து இருந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் கைநிறைய பிரசாதங்கள் கொடுத்து, சுமங்கலியாக இருந்தால், சுமங்கலி தாம்பூலம் கொடுத்து, கௌரவப்படுத்தி அனுப்பி வைப்பாள்.
நவராத்திரி முடிவதற்குள் அநேகமாக அக்ரஹாரத்தில் உள்ள எல்லா மாமிகளும், அக்கம் பக்கத்து வீட்டுகாரர்கள் எல்லாரும் வந்து விடுவார்கள்.
யாரெனும் விட்டு போயிருந்தால் கூட தெரிந்து விடும். அம்மா நினைவு வைத்து கேட்டு விடுவாள்.
அதனாலே அங்க போகவே எனக்கு பிடிக்காது. அம்மா சொன்னதுக்காக போய் பார்த்து சொல்லிட்டு வருவேன்.
நவராத்திரி சமயத்தில் அம்மாவை என்ன பாடு படுத்தி இருக்கிறேன்.
நைவைத்தியம் முடியும் வரை பொறுமை இல்லாமல் உள்ளே போய் சுண்டலை எடுத்து சாப்பிட்டு, அவளை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தியது இன்று கொலு பொம்மைகளை எடுத்து வைக்கும் போது நினைவுக்கு வந்தது.
நவராத்திரி முடிந்து விட்டது. ஏனோ மனது லேசாக வலித்து கொண்டே இருக்கிறது.
கடைசியாக அவள் கொலு வைத்தது கோபியில் 2008-ஆம் ஆண்டு. 2009 நவராத்திரிக்கு முன்பே பெருமாள் திருவடிக்கு போய்விட்டாள்.
கடைசியாக அவளை கூட்டிக்கொண்டு குருவாயூர் போயிருந்தோம். அப்போது அடுத்த கொலுவில் வைக்க ஆழிலை கிருஷ்ணன் பொம்மையும், கேசவன் யானையோட படமும் விரும்பி வாங்கினாள்.
அதோ ஆழிலை கிருஷ்ணன் சிரித்து கொண்டு கொலுவோடு இருக்கிறான்.
அவள் கற்றுகொடுத்த சம்பிரதாயங்கள் பண்டிகை நாட்களில் செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் அவள் நினைவாக இன்றும் தொடர்கின்றன.
சின்மயா நகரை சேர்ந்த நடுத்தரக் குடும்பப் பெண் பாக்யலக்ஷ்மி (55). கணவர் திரு. சேது ராமன் (58).
எளிமையான கட்டுக் கோப்பான குடும்பம். கணவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று
கொண்டிருந்தார்கள்.
ஒரு காலை சமையல் அறையில் பிஸியாக இருந்த பாக்ய லக்ஷ்மி அவர்களுக்கு திடீரென்று தலை சுற்றியது. “அம்மா… நெஞ்சு வலிக்குதே…” நெஞ்சில் கை வைத்து ஹாலுக்கு வந்து ஃபேனை போட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துவிட,
கணவரும் பிள்ளைகளும் அலறியடித்துக்
கொண்டு பாக்யலக்ஷ்மி அவர்களை மருத்துவ மனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டார் பாக்ய லக்ஷ்மி.
மருத்துவ மனைகளுக்கே உரிய PROCEDURES, TEST, SCANNING அனைத்தும் விறுவிறுவென நடந்தன
*1-தங்களது கற்பை காப்பாற்றுவதற்காக ராணி பத்மினியுடன் 14000 பெண்களும் எரியும் நெருப்பில் குதித்து உயிர் மாய்த்து கொண்டனர்*
*காரணம் காம பிசாசு அலாவுதீன் என்பதை மறக்காதீர்கள்
*2- இஸ்லாத்தை ஏற்க மறுத்ததற்காக சம்பாஜி மகாராஜை சித்திரவதை செய்த இரத்தவெறி கொண்ட அவுரங்கசீப் என்பதை மறக்காதீர்கள்
*3- ஒரே நாளில் லட்சக்கணக்கான இந்துக்களை படுகொலை செய்த ஜிஹாதி திப்பு சுல்தான் என்பதை மறக்காதீர்கள்
*4 -தனது அரண்மனையில் 14 வயது பிராமண சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து மரணதண்டனை விதித்த ஷாஜகானை மறக்காதீர்கள்
*5 - எனது ஸ்ரீ ராமர் கோயிலை உடைத்து கோடிக்கணக்கான அப்பாவி இந்துக்களைக் கொன்ற காட்டுமிராண்டித்தனமான பாபரை மறக்காதீர்கள்
வீட்டுக்கு வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் பாலு. தனது வீட்டு கேட் முன்பு ஒரு உயர்சாதி நாய் நின்று கொண்டிருந்தது.
அது நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது.
அவரையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது சற்று வியப்பைத் தந்தது.
மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. பாலு மெதுவாக விசிலடித்துக் கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தார்.
பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்குக் கீழே சென்று படுத்த நிமிடத்தில், சுகமாக உறங்கிப் போய் விட்டது.
இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட்,