நம்முடைய பூஜை அறையாக இருந்தாலும் சரி அல்லது கோவில்களில் கடவுள் வழிபாடாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் ஊதுபத்தி ஏற்றி வழிபடுகிறார்கள்.
நம்மில் பலரும் இல்லத்து பூஜை அறையில் வழிபாடுகளை செய்யும் போது ஊதுபத்தியை ஏற்றி வைப்பதும் வழக்கம்.
கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுபவர்களும் கூட, அர்ச்சனைப் பொருட்களோடு ஊதுபத்தியையும் சேர்த்தே வாங்கிச் சென்று இறைவனை வழிபடுகிறார்கள்.
ஆலயங்களிலும், இல்லத்தின் பூஜை அறையிலும் ஊதுபத்தி ஏற்றி வைப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த ஊதுபத்தி ஏற்றும் வழிபாட்டு முறையில் ஒரு தத்துவம் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஊதுபத்தியை ஏற்றி வைத்தவுடன், அதில் இருந்து நறுமணம் வெளிப்பட்டு, அறை முழுவதும் பரவுவதை உணரலாம். அது தெய்வீக சக்தியை இல்லத்திற்குள் பரவச் செய்வதாகும்.
ஏற்றி வைத்த ஊதுபத்தியானது கொஞ்சம் கொஞ்சமா காற்றில் பறந்து இறுதியில் சாம்பல்தான் மிஞ்சும்.
தன்னையே சாம்பலாக்கிக் கொண்டு, தன்னை சுற்றியிருப்பவர்களை தன்னுடைய மணத்தால் தன்னைச் சுற்றி இருப்பவர்களை நறுமணம் ஆக்கும் தன்மை கொண்டது ஊதுபத்தி.
எனவே அதுபோல இறைவனை முழுமையாக நம்பி பிராத்தனை செய்யும் பக்தர்கள் தங்களை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் மேலும் சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம்.
இத்த குணத்தைத்தான் ஊதுபத்தி குறிக்கிறது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள்தான் இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கரைகண்டேஸ்வரம் ஸ்ரீ மஹாதேவர் திருக்கோவில்.
பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த இக்கோவிலை ஊர்மக்கள் கடந்த 2013-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்து மஹாகும்பாபிஷேகம் நடத்தி புதுப்பொலிவடையச் செய்திருக்கிறார்கள்.
ஈஸ்வரன் சுயம்புவகை அம்மை அப்பனாக நடராஜராக நவகிரகங்களை தன்னுள் அடக்கி முப்பரிமாணமாக காட்சி தரும் பரிகார ஸ்தலம் திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மஹாதேவர் திருக்கோவில்.