பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பது இந்த சங்கு தான்!
ஒரு சங்கில் உள்ளே 4 சங்கங்கள் இருக்கும்!மொத்தத்தில் ஐந்து சங்குகள்!
ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள்.
பாஞ்சஜன்யம் பற்றிய தகவல்கள் :
பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான்.
ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை.
ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம்.
ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம்.
வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம்.
சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகும் இடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.
சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம்.
அதிலும் சுத்தமாக அக்ஷரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான்.
அந்த சங்கு கிருஷ்ண பரமாத்மா கையில் மட்டும் தான் இருக்கும் !!
ஸ்லோகம் :
|விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய|
|யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:|
|தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே|
பொருள் :
மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய்வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும்
தன் கம்பீர ஒசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும்,
வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை வணங்குகின்றேன்!
எப்போதும் சரணடைகின்றேன்!🙏
கீழ்காணும் இந்த படத்தில் காணும் சங்கு உள்ளே நான்கு சங்குகள் இருக்கின்றன!
.
இது மிக மிக அபூர்வமானது! இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது!
கண்பார்வை குறைபாடுகளை நீக்கும் மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்
திருமால் வாமன அவதாரத்தின் போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார்.
அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம்
“தானம் கொடுக்காதே” என்று கூறுகிறார்.
வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.
ஆண் பெண் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வழிபாடு
மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாட்களிலோ, கிருத்திகை, ரோஹிணி நட்சத்திர நாட்களிலோ சந்திரசேகரபுரத்தில் அருள்புரியும்
கிருத்திகை ரோகிணி சமேத சந்திர பகவானுக்கு தாமே கையால் அரைத்த சந்தனத்தை சாற்றி வழிபடுதலால் மனம் சம்பந்தமான பிரச்னைகளும் உறவுப் பிரச்னைகளும் தீர்வடையும்.
பெண் உறவு முறைகளில் ஆண்கள் சந்திக்கும் இடர்களும், ஆண் உறவு சம்பந்தங்களில் பெண்கள் அடையும் வேதனைகளும் விடிவு பெற குறிப்பாக உயர் பெண் அதிகாரிகளால் ஆண்கள் அடையும் துன்பங்களும், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளும் தணியும்.