சகல தோஷங்களும் நீக்கும் ஸ்தலம் கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர்.
*கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர்*
கொளப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் குடிகொண்டுள்ள இவ்வாலயம் சகல தோஷங்களும் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது.
சூரிய பகவானுக்கு உகந்த இரண்டாவது தலம் திருக்கண்டியூர் வீரட்டம்.
இக்கோயில் தஞ்சையிலிருந்து திருவையாறு போகும் வழியில் ஆறாவது மைலில் உள்ளது.
குடமுருட்டியாற்றுக்கும், காவிரிக்கும் நடுவில் இத்தலம் உள்ளது.
சென்னையில் உள்ள சிவாலயங்களில் சூரியனின் அம்சத்துடன் திகழும் ஆலயம் கொளப்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயமாகும்.
ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் குடிகொண்டுள்ள இவ்வாலயம் சூரியன் பரிகார ஸ்தலமாக-விளங்குகின்றது.
1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இவ்வாலயத்தில் சூரியர், பைரவர் சிவபெருமான் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய பன்னிரெண்டு துவாரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
நவக்கிரகத்தை குறிக்கக்கூடிய ஒன்பது துவாரங்களுடன் சேர்ந்து
இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி இந்த துவாரங்கள் வழியாக சுவாமி தரிசனம் செய்யும்போது சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என கூறுகின்றார்கள்.
வேலை வாய்ப்பு கிட்டும் தலம். அகத்தியர், சூரியன், வசிஷ்டர் வழிபட்ட தலம். பழைய பெயர் சிவபாதகேசநல்லூர்.
சூரிய ஓரையில் நெய் தீபம் ஏற்றி ஸ்லோகம் கூறி சூரியனை வழிபட்டால் நல்ல பலன் கிட்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு சிகப்புவஸ்திரம், சிகப்பு மலர் கொண்டு, எருக்க இலை, கோதுமை தானியம் கொண்டு வழிபட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை தருகின்றார்.
இங்கு கிழக்கு நோக்கி விசாலாட்சி உடனுறை ஸ்ரீவிஸ்வ வாதாபி கணபதிபோல் அருள்காட்சி நல்கும் நாதர் ஸ்ரீராஜகணபதி.
வடக்கு பார்த்த முருகன் விசேஷமானது.
இத்தலத்து கால பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணி வரை அபிஷேக ஆராதனைகளும் ஏழு வாரங்கள் வழிபட்டால் வேண்டுவதை கிடைக்கவும் நற்பலன்களையும் அருள்பாலித்து வருகின்றார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவர் உற்சவருடன் எட்டுதிக்குகளுக்கும் காட்சி தருகிறார்.
போரூர் குன்றத்தூர் சாலையின் மத்தியில் கெருகம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து வடகிழக்கு பாகத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கொளப்பாக்கம் உள்ளது.
கண்பார்வை குறைபாடுகளை நீக்கும் மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்
திருமால் வாமன அவதாரத்தின் போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார்.
அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம்
“தானம் கொடுக்காதே” என்று கூறுகிறார்.
வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.
ஆண் பெண் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வழிபாடு
மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாட்களிலோ, கிருத்திகை, ரோஹிணி நட்சத்திர நாட்களிலோ சந்திரசேகரபுரத்தில் அருள்புரியும்
கிருத்திகை ரோகிணி சமேத சந்திர பகவானுக்கு தாமே கையால் அரைத்த சந்தனத்தை சாற்றி வழிபடுதலால் மனம் சம்பந்தமான பிரச்னைகளும் உறவுப் பிரச்னைகளும் தீர்வடையும்.
பெண் உறவு முறைகளில் ஆண்கள் சந்திக்கும் இடர்களும், ஆண் உறவு சம்பந்தங்களில் பெண்கள் அடையும் வேதனைகளும் விடிவு பெற குறிப்பாக உயர் பெண் அதிகாரிகளால் ஆண்கள் அடையும் துன்பங்களும், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளும் தணியும்.