வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வராஹி.
வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்
வாராகி உதித்த திதி :- பஞ்சமி (வளர்பிறை)
வாராகி உதித்த மாதம் :-ஆடி
வாராகிக்கு உகந்த நிறம் :-
நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ்திரமே முதன்மையானது.
வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
வாராகிக்கு வலிமை கூடும்
நாள் :- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம் :- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு.
பிடித்த அமுது :- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.
பூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்
ஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள்.
பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும்.
மேலும் பனிரெண்டாம் இடத்தில் இராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+ இராகு) சேர்க்கை பெற்று அமைந்தவர் பிறக்கும் போதே வராஹி அருள் பெற்றவர்.
இராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வராஹி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி.
அதிகம் சாப்பிட்டால் 'சாப்பாட்டு ராமன்' என்று ஏன் கூறுகிறார்கள்?
ராமனுக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
ஒருவர் சாப்பாட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது அல்லது விரும்பி சுவைத்து, ரசித்து, ஆக்ரோஷமாக சாப்பிடும் பொழுது அவர்களை நாம் சரியான ‘சாப்பாட்டு ராமன்’ என்பர்.
போதும் போதும் என்கிற அளவிற்கு வயிறு முட்ட சாப்பிடும் இந்த சாப்பாட்டு பிரியர்களை இப்படி கூறுவதற்கும், சாப்பாட்டு ராமன் என்கிற பெயரில் இருக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
இதற்கு பின்னணியில் இருக்கும் கதை காரணம் என்ன? என்கிற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ஸ்ரீ ராமர் ராவணனைப் போரில் வென்று விட்டு அயோத்தி திரும்பும் சமயத்தில் தன் குருவாகிய பரத்வாஜ முனிவரை காண விழைந்தார்.
அவருடைய ஆசியைப் பெற்றுக் கொண்டு பின்னர் அயோத்தி திரும்புவதாக முடிவு செய்தார்.
வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை.
அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்று கூட சிலர் சிறப்பித்திருக்கிறார்கள்.
திருப்பதி நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்.
சேஷாத்திரி,
நீலாத்திரி,
கருடாத்திரி,
அஞ்சனாத்திரி,
வ்ருஷபாத்ரி,
நாராயணாத்ரி,
வேங்கடாத்ரி
ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்ற திருநாமம்.
திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும்,
பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.