நவகிரகங்களில் ஒன்றான ராகுவின் அதிதேவதை பத்ரகாளி எனப்படும் துர்க்கையாகும்.
ஒவ்வொரு நாளும் நல்லன செய்வதற்கு தகாத விசக்கடிகையாக 1.30 மணி நேரம் இராகு காலமாகக் கருதப்பட்டு வருகிறது.
அந்த ராகு காலத்தில் ராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கைக்கு நறுமண மலர்மாலை அணிவித்து, தூப தீப நைவேத்தியத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
செவ்வாய் கிழமை ராகு காலத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகியவற்றை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிறவாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை
ஆகியவற்றை நிவேதனத்திற்கு பயன்படுத்தி ஸ்ரீ துர்க்கையை பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை அம்மனுக்கு மிகவும் விஷேசம்.
செவ்வாய்க் கிழமையன்று நல்ல மஞ்சள் நிறமுள்ள ஐந்து எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றை அம்பாளின் திருவடிகளில் பிழிந்துவிட்டு,
எலுமிச்சைத் தோல்களை எதிர்புறமாக மடக்கி கிண்ணம் போல் அமைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும்.
இவ்வாறு ஐந்து எலுமிச்சை மூடிகளின் மொத்தம் பத்து விளக்குகள் செய்யலாம்.
அதில் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு ஒன்பது விளக்குகளை மட்டும் அம்மன் சன்னிதியில் வைக்க வேண்டும்.
ராகு கால பூஜையின் போது இராகு கால துர்க்காஷ்டகம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாராணாஷ்டகம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முதலியவற்றை
பக்தி பெருக்கோடு பாராயணம் செய்தால் அம்பாளின் அருளைப் பெறலாம்.
ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால், செவ்வாய் கிழமை ராகு காலப்பூஜை செய்யலாம்.
அதில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வரர் ஆலயமும் பரப்பளவில் மிகவும் சிறியது.
ஆனால், இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் அற்புதங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் சக்தியும் மகத்தானவை.
உள்ளே நுழைந்துவிட்டால், மணிக்கணக்கில் நின்று தரிசிக்கவும் ரசிக்கவும் ஏராளமான இறை மூர்த்தங்களும் கலைநயமிகு சிற்பங்களும் உள்ளதால் வெளியே வரவே மனம் வராது.
‘‘துடையூர் என்னும் சக்தி வாய்ந்த இந்த வைப்புத் தலத்தை அப்பர் பெருமான் மட்டுமல்ல; அகத்தியரும் பாடியிருக்கிறார்.
ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.
சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு,
நாடி வந்து வணங்கிடும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்குபவராகவும்.
சர்க்கரை நோய் போக்கும் கண்கண்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார் மளவராயநத்த தென்னகர் சிவபெருமான்.
தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிர பரணியின் கரையோரத்தில் ரோம மகரிஷியால் உருவான நவ கயிலாயங்கள் அமைந்துள்ளன.
இதுபோன்று, ‘நவலிங்கபுரம்’ என்ற ரீதியில் ஒன்பது சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது.
காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி தமது பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் இவை இழந்து விட்டன.
நவலிங்கபுரத்தில் கடைசி ஸ்தலமான சிவன் கோயில், தாமிபரணியின் கரையோரத்தில் ஆன்மிக நகரமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு மிக அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.