ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய், ஈருடல் ஓருயிர் என்னும் சொல்லிற்கு உண்மையிலேயே சரியானதொரு வடிவத்தை இங்கு காணமுடியும்.
வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப் பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில்
இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான்.
இதுவே இத்திருக்கோவிலின் பெருஞ்சிறப்பு.
தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோவில் போற்றி பாடப்பட்டுள்ளது.
இத்திருக்கோவில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோவில் அமைப்புடன், ஒரே திருக்கோவிலாய் அமையப் பெற்ற திருத்தலம்.
நாக சிலை :
60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடுசெய்கின்றனர்.
ஒற்றுமை விரதம் :
திருவண்ணாமலை போலவே இம்மலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும்.
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோவிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள்கள் கடைபிடிக்கப்படுகிறது.
உங்களுடைய வேண்டுகேள் அனைத்தையும் நிறைவேற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரை வணங்கி எல்லா வளங்களையும் பெற்று மகிழுங்கள்....!
அதில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வரர் ஆலயமும் பரப்பளவில் மிகவும் சிறியது.
ஆனால், இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் அற்புதங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் சக்தியும் மகத்தானவை.
உள்ளே நுழைந்துவிட்டால், மணிக்கணக்கில் நின்று தரிசிக்கவும் ரசிக்கவும் ஏராளமான இறை மூர்த்தங்களும் கலைநயமிகு சிற்பங்களும் உள்ளதால் வெளியே வரவே மனம் வராது.
‘‘துடையூர் என்னும் சக்தி வாய்ந்த இந்த வைப்புத் தலத்தை அப்பர் பெருமான் மட்டுமல்ல; அகத்தியரும் பாடியிருக்கிறார்.
ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.
சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு,
நாடி வந்து வணங்கிடும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்குபவராகவும்.
சர்க்கரை நோய் போக்கும் கண்கண்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார் மளவராயநத்த தென்னகர் சிவபெருமான்.
தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிர பரணியின் கரையோரத்தில் ரோம மகரிஷியால் உருவான நவ கயிலாயங்கள் அமைந்துள்ளன.
இதுபோன்று, ‘நவலிங்கபுரம்’ என்ற ரீதியில் ஒன்பது சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது.
காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி தமது பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் இவை இழந்து விட்டன.
நவலிங்கபுரத்தில் கடைசி ஸ்தலமான சிவன் கோயில், தாமிபரணியின் கரையோரத்தில் ஆன்மிக நகரமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு மிக அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில்
அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது.
சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால்
பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்
நாகநாதசுவாமி, பாம்பணிநாதர், திருப்பாதாளேஸ்வரர், ஸ்ரீபதி விண்ணகர ஆழ்வார் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு புற்று லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும்.
ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக